ஹெச்.சி. எல் டெக்னாலஜிஸ், ஐ.டி, பொறியியல், வணிகம் மற்றும் ஆர். டி யில் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முதன்மையாக வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட டிஜிட்டல் வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான Confinale AG-ஐ வாங்க உள்ளது. இந்தத் தகவல் வெளியான அன்றைய தினம் ஹெச். சி. எல் டெக்னாலஜிஸ் பங்கு விலை 2% உயர்ந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் திங்கள் கிழமையன்று கையெழுத்திடபட்டதாக இங்கிலாந்தில் உள்ள ஹெச்.சி.எல் டெக்னாலஜி தெரிவித்துள்ளது.
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் Confinale AG நிறுவனத்தை வாங்க சுவிஸ் பிராங்க் மதிப்பில் 53 மில்லியன், இந்திய மதிப்பீட்டில் 4,183 கோடி ரூபாய் தொகையை கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜூலை 1, 2022-க்கு முன் முழுமையாக இந்நிறுவனம் கையகப்படுத்தப்படும். Confinale AG யானது வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட்டில் சிறப்புத் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.