Published:Updated:

டெல்லி காற்று மாசுபாட்டால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்குமா?

ஹெல்த் இன்ஷூரன்ஸின் அடிப்படை வணிகமுறையானது, பலரிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகையைக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகச் செலவிடுவதாகும். இந்த விகிதம் சரியானபடி இருக்கும்வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நன்முறையில் செயல்படக்கூடும்.

டெல்லி காற்று மாசுபாடு
டெல்லி காற்று மாசுபாடு

தலைநகர் டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டால், டெல்லி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குப் புதியதொரு பிரச்னை எழுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், அதிக அளவில் இதய நோய், மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் அவற்றுக்கான சிகிச்சைக்காக கிளெய்ம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
vikatan

ஹெல்த் இன்ஷூரன்ஸின் அடிப்படை வணிகமுறையானது, பலரிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகையைக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகச் செலவிடுவதாகும். இந்த விகிதம் சரியானபடி இருக்கும்வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நன்முறையில் செயல்படக்கூடும். ஆனால், பிரீமியம் வசூலிக்கப்படும் விகிதத்தைவிட சிகிச்சைக்கான கிளெய்ம் விகிதம் அதிகரிக்கும்போது அது ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் பாதிக்கின்றன. இத்தகைய சிக்கலை, தற்போது ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... இனி மாதந்தோறும் பிரீமியம்  செலுத்தலாம்!

எனவே டெல்லி, ஹரியானா உள்ளிட்ட காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை 5% அளவுக்கு உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனையைக் கூடுதல் கவனத்துடன் நடத்திய பின் பாலிசி வழங்கவும் வாய்ப்புள்ளது.

நிதி ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரன்
நிதி ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரன்

பொதுவாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் நிர்ணயிப்பது குறித்து நிதி ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டபோது, ``ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் நிர்ணயிப்பதில் ஜியாகிரஃபிகல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, கிராமப்புறங்களைவிட நகர்ப்பகுதிகளில் பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நகர்ப்புறங்களில் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் அதிகமிருப்பதால் கிளெய்ம் தொகையும் அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவுப் பழக்கவழக்கங்களில், கிராமப்புறத்தில் வசிப்பவர்களைப்போல் ஒழுங்கு இருக்காது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... புதிய விதிமுறையால்  பாலிசிதாரர்களுக்கு என்ன லாபம்?

ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கமும் உடலுக்கு ஒவ்வாத பல்வேறுவகையான உணவுகளை உட்கொள்வதும் நகர்ப்புறங்களில் மிகுதியாக இருக்கும். அதேபோல், நகர்ப்பகுதிகளில் சோஷியல் டிரிங்கிங் என மது அருந்தும் பழக்கம் சற்று மிகுதியாக இருக்கும். இதன்காரணமாக உடல்நல பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டுதான் நகர்ப்பகுதிகளுக்கு சற்று அதிக பிரீமியம் நிர்ணயிப்பார்கள்" என்றார்.