‘ஒருங்கிணைந்த கார்ப்பரேட் ஆளுகையும், நீடித்த நிலைத்தன்மையும் இருந்தால் மட்டுமே பொருளாதார மதிப்பு உயர்வ டைதல் சாத்தியம்’ (Corporate Governace + Sustainability = Economic Valude Enhancement) என்ற தலைப்பில் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (MMA) சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கில் கார்ப்பரேட் ஆளுகைத் திறன் குறித்துப் பேசினார் இன்டுய்ட் (Intuit) கன்சல்ட்டிங் பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜங்கு தலால். “கார்ப்பரேட் ஆளுகையில் நிறுவனங்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். இன்றைக்கும் பல நிறுவனங்களில் இதற்காகத் தனி கமிட்டி அமைக்காமல் இயக்குநர்களே இதைக் கூடுதலாகப் பொறுப்பெடுத்து கவனித்து வருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். தனி கமிட்டி அமைத்து, இதைத் திறம்பட நிர்வகித்தால் மட்டும்தான் சறுக்கல்களைத் தவிர்த்து, நிறுவனத்தின் முன்னேற்றத்தைக் காண முடியும்’’ என்றார்.

காக்னிஸன்ட் (Cognizant) நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி லட்சுமி நாராயணன், “நாம் எப்போதும் நம் நிறுவனத்தின் நலனில் மட்டும் அக்கறைகொண்டவர்களாக இருக்கக் கூடாது. சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். பொருள்கள் உற்பத்தியும், தனிநபர் நுகர்வும் அதிகரிக்கும்போதுதான் பொருளாதாரமும் அதிகரிக்கும். லாபம் மட்டுமே முழு முதற் குறிக்கோளாக இருப்பது தவறல்ல. ஆனால், அதற்காக சமுதாயத்தின் மேல் அக்கறையில்லாமல் செயல்படக் கூடாது. நேர்மறையான மாற்றங்களை முன்னிறுத்தித்தான் எப்போதும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என்றார்.

தொழில்துறை நிபுணர்கள் சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். `` ‘திட்டமிடத் தவறுதல், தவறு செய்யத் திட்டமிடுவதற்கு ஒப்பானது’ என்ற பழமொழி நம் வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கும் பொருந்தக்கூடியது.

எல்லாத் தொழில்களுக்கும் பொருளாதாரத் திட்டமிடல் மிக மிக முக்கியம். அதற்குச் சிறந்த நிர்வாகி தேவை.

கார்ப்பரேட் ஆளுகை ‘Accountability, Transferability, Responsibility, Faith’ ஆகிய நான்கு கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது. ஒரு நிறுவனம் இந்த நான்கு கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கார்ப்பரேட் ஆளுகையை நடைமுறைப்படுத்தும்போது ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் காண்கிறது. சமூகப் பொறுப்பும், கார்ப்பரேட் ஆளுகையும் எப்போதுமே சம அளவில் இருக்க வேண்டும். அப்படிச் சமநிலையில் இருக்கும்போதுதான் பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். கார்ப்பரேட் ஆளுகையை நடைமுறைப் படுத்தும்போது பொருளாதாரம், சமுதாய மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய மூன்று விஷயங்களில் நிறுவனங்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்’’ என்றனர்.

தொழில் நிறுவனங்களை நேர்மையாக நடத்துவதன்மூலம் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க முடியும் என்கிற உண்மையைச் சொல்வதாக இருந்தது இந்தக் கருத்தரங்கு!