Published:Updated:

கட்டுமானத் துறையில் சாம்பல் செங்கல்... ஆண்டு முழுக்க உற்பத்தி... நிலையான வருமானம்!

சாம்பல் செங்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
சாம்பல் செங்கல்

தொழில் பழகுவோம் வாங்க! - 7

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய தொழில் வாய்ப்புகள் பெருகி வருவதாலும், மக்களின் வசிப்பிடத் தேவைகளுக்காகவும் கட்டுமானத்துறையின் வளர்ச்சி உயர்ந்து வருவதால், சிமென்ட் மற்றும் செங்கல் அத்தியாவசியப் பயன்பாடு களாகத் திகழ்கின்றன.

கட்டுமானத்தில் முக்கிய மூலப்பொருளான சிமென்ட் உற்பத்தியில் உலக அளவில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் நிலக்கரி சாம்பல் (ஃப்ளை ஆஷ்), மண் செங்கல்லுக்கு மாற்றாக, எரி சாம்பல் செங்கல் (சிமென்ட் செங்கல்) தயாரிப்பிலும் பெரிதும் உதவுகிறது. எனவே, வருங்காலத்தில் பெரிய தொழிலாக உருவெடுக்கவிருக்கும் சாம்பல் செங்கல் தயாரிப்புக்கான நிலையான வரவேற்பு குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

கட்டுமானத் துறையில் சாம்பல் செங்கல்... ஆண்டு முழுக்க உற்பத்தி... நிலையான வருமானம்!

வேகமெடுக்கும் சாம்பல் செங்கல் தொழில்...

மண் செங்கல் பயன்பாடே தமிழகத்தில் நெடுங்காலமாக இருந்துவந்த நிலையில், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் செங்கல் தயாரிப்புக்கான மண் எடுக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர, மண் செங்கல்லை சூளையில் வேகவைக்க அதிக அளவில் விறகு பயன்படுத்தப்பட்டது. இதனால் கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவில் உற்பத்தியாகி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தத் தயாரிப்பு முறை யால் வேலையாள்களும் அதிகம் தேவைப்பட்டனர். மழைக்காலத்தில் மண் செங்கல் உற்பத்தி தடைப்பட்டு, கட்டுமானப் பணிகளும் அடிக்கடி முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், இந்தத் தொழில் நலிவடைந்து, சாம்பல் செங்கல் பயன்பாடு வேகமெடுத்தது.

அனல்மின் நிலையங்களில் கழிவாகக் கிடைக்கும் நிலக்கரி சாம்பலானது ஆரம்ப காலத்தில் கடலில் கொட்டப்பட்டது. சிமென்ட் உற்பத்தியாளர்கள் இந்தச் சாம்பலை வாங்க ஆரம்பித்து, சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருள்களில் ஒன்றாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். பின்னர், நிலக்கரி சாம்பலிலிருந்து செங்கல் தயாரிப்பு முறை பிரபலமாகி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

ஆண்டு முழுக்கவும் தயாரிக்கலாம்

இயந்திரத்தின் உதவியுடன், நிலக்கரி சாம்பல், மணல் (M Sand), ஜிப்சம், சுண்ணாம்பு ஆகிய மூலப்பொருள் களுடன் தண்ணீர் சேர்ந்த கலவையை, அச்சு மூலமாக சதுரக்கட்டி வடிவத்துக்கு மாற்றி, ஒருசில தினங்களுக்கு உலர வைக்க வேண்டும். பின்னர், செங்கல்லைக் கடினப்படுத்துவதற்காகச் சில தினங் களுக்கு அவற்றின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு, விற்பனைக்கு அனுப்பலாம். மிகவும் வலிமையுடனும், மண் செங்கல்லைவிட அதிக ஆயுள் திறனும் கொண்டிருக்கும் சாம்பல் செங்கல்லை உள்அறையில் (Indoor) ஆண்டு முழுக்க எல்லா காலங்களிலும் தயாரிக்கலாம். எரிபொருள் செலவு இல்லை. இந்தச் செங்கல் தயாரிப்பு முறையால் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது.

கட்டுமானத் துறையில் சாம்பல் செங்கல்... ஆண்டு முழுக்க உற்பத்தி... நிலையான வருமானம்!

மூலப்பொருள் தட்டுப்பாடு வராது

நம் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% அளவுக்கு அனல் மின் நிலையங்கள் மூலமாகவே மின் உற்பத்தி நடைபெறுகிறது. எனவே, நிலக்கரிச் சாம்பலுக்கான தட்டுப்பாடு ஏற்படாது. பழுப்பு நிலக்கரியில் கார்பன் குறைவாக இருப்பதால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையிலிருந்து அதிக அளவிலான நிலக்கரி சாம்பல் கிடைக்கிறது. தவிர, மேட்டூர், எண்ணூர், வட சென்னை, தூத்துக்குடி ஆகிய அனல் மின் நிலையங்களிலிருந்தும் கணிசமான அளவில் சாம்பல் கிடைக்கின்றன. இந்த நிலையங் களிலிருந்து கழிவாகக் கிடைப் பதில் 20% சாம்பலை, ஃப்ளை ஆஷ் செங்கல் தொழிலுக்குத் தர வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருப்பதால், சாம்பல் கிடைப்பதில் சிக்கல் எதுவும் ஏற்படாது. ஃப்ளை ஆஷ் வெளி மார்க்கெட்டில் ஒரு டன் 1,500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. அனல் மின் நிலையங்களில் சாம்பல் எடுக்க லைசென்ஸ் பெற்று சாம்பலை விலைக்கு வாங்கலாம். அல்லது சாம்பல் எடுக்க லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களிடமிருந்து தேவைக் கேற்ப வாங்கிப் பயன்படுத்தலாம்.

கட்டுமானத் துறையில் சாம்பல் செங்கல்... ஆண்டு முழுக்க உற்பத்தி... நிலையான வருமானம்!

முதலீடு 40 லட்சம் ரூபாய்...

மண் செங்கல் தயாரிப்புச் செலவுக்கு இணையாகவே சாம்பல் செங்கல் தயாரிப்புக்கும் செலவாகும். ஆனால், மண் செங்கல்லைவிட சேதாரம் குறைவாக இருப்பதுடன், அதிக காலம் இருப்பு வைத்திருந்தும் விற்பனை செய்யலாம். எளிதான தயாரிப்பு முறை கொண்ட இந்தச் சாம்பல் செங்கல் தயாரிப்புக்கு, குறைவான பணி யாளர்களே போதும். நிலக்கரி சாம்பலை எளிதாகப் பெறக் கூடிய இடத்திலும், போக்குவரத்து வசதியுடன்கூடிய இடத்திலும் தொழிற்சாலை அமைப்பது நல்லது. தினமும் 9,000 செங்கற்கள் தயாரிக்க ஏதுவாக ரூ.40 லட்சம் முதலீட்டில் தொழிற்சாலையை அமைக்கலாம்.

விற்பனைக்கான வாய்ப்பு

நம்பிக்கையான உள்ளூர், வெளியூர் கட்டுமான நிறுவனங் களுடன் தொழில் ரீதியான நட்பைப் பலப்படுத்திக் கொண் டால் நிலையான விற்பனை வாய்ப்பை உறுதி செய்யலாம். சிமென்ட் உற்பத்தி அதிகம் நடக்கும் ஆந்திராவில் சாம்பல் செங்கல் தயாரிப்பு அதிக அளவில் நடக்கிறது. அங்குள்ள நிறுவனங்களுக்கு நம் செங்கற்களை விற்பனைக்கு அனுப்பலாம். செங்கல் உற்பத்தி குறைவாக நடைபெறும் கேரளாவில், அனல் மின் நிலையங்களும் குறைவாகவே இருப்பதால், செங்கல்லுக்கான தேவை அந்த மாநிலத்தில் அதிகம் இருக்கிறது. இதுபோன்ற சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டும் பயனடையலாம்.

கட்டுமானத் துறையில் சாம்பல் செங்கல்... ஆண்டு முழுக்க உற்பத்தி... நிலையான வருமானம்!

வங்கிக் கடனுதவி...

‘நீட்ஸ்’ திட்டத்தில் ரூ.38 லட்சம் வங்கிக் கடன் பெறலாம். அதில், 25% மானியமாகக் கிடைக்கும். தவிர, நடைமுறை மூலதனமாக (Working capital) ஆரம்பத்தில் 12 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனுதவி பெறலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் யார் வேண்டுமானாலும் முறை யான அனுபவம் பெற்று இந்தத் தொழிலில் தடம் பதிக்கலாம்.

தினசரி வருமானம் 54,000 வருமானம்...

சாம்பல் செங்கல் ஒன்று 5.50 – 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சராசரியாக 6 ரூபாய்க்கு ஒரு செங்கல்லை விற்பனை செய்வதாக இருந்தால், தினமும் 9,000 செங்கற்கள் விற்பனை மூலம் 54,000 ரூபாய் வருமானம் ஈட்டலாம்.

வாய்ப்புள்ளவர்கள் இந்தத் தொழிலை செய்யலாமே!

(தொழில் பழகுவோம்)