Published:Updated:

கொரோனா விளைவால் பிசினஸை கைவிடுதல் கூடாது... மீண்டு வெல்வது எப்படி?

டிஜிட்டல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் தொழில்நுட்பம்

``கோவிட்டுக்குப் பின்னர் எப்படி பிசினஸ் செய்கிறோம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். கம்பெனியை டிஜிட்டலாக எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கோவிட் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது”

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலரின் பிசினஸ்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. பாதிப்படைந்த தங்களது பிசினஸை மீண்டு வெற்றி அடையச் செய்வது எப்படி என்பதற்கான வழிகளைப் பலரும் தேடி வருகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நாணயம் விகடன் ``கோவிட்டுக்குப் பிறகு... பிசினஸ் சக்ஸஸ் எப்படிக் கொண்டு வரலாம்?" என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் டெர்பி ஜீன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் கபூர் கலந்துகொண்டு பேசியவர், ``கோவிட்டுக்கு முன்னால் எப்படி பிசினஸ் செய்தோம், கோவிட்டுக்குப் பின்னர் எப்படி பிசினஸ் செய்கிறோம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். கம்பெனியை டிஜிட்டலாக எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கோவிட் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

டிஜிட்டலாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களின் வழியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கான வழிகளைச் செய்யவேண்டும்" என்றார்.

விஜய் கபூர்
விஜய் கபூர்

மேலும், அவர் பலரது கேள்விகளுக்கும் சந்தேகங்களும் பதிலளித்து தெளிவுபட வழிகாட்டினார். சாம்பிளுக்கு ஒரு கேள்வி - பதில்:

``என்னுடைய அப்பா திருப்பூரில் சிறு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா தொடர்பான பல பிரச்னைகள் உருவாகியுள்ளது. பலரும் தொழிலை கைவிடக் கூறுகின்றனர். இது சரியா?"

``தொழிலைக் கைவிடுவது மிகவும் எளிதானது. ஆனால், அதை மீண்டும் தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சில நாள்கள் வேறு வழியில் ஏதாவது ஆர்டர்களைப் பெற முடியுமா என முயற்சி செய்ய வேண்டும். நாங்கள் முதலில் டிஸ்கவுன்ட் சேலில் இருக்கும் அனைத்து புராடக்டுகளையும் விற்பனை செய்தோம். பின்னர், பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது என்பதையும் மனதில் வைத்து புதிதாக ஸ்டாக்குகளைக் கொண்டு வந்தோம்.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கஸ்டமர்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினோம். ஃபிக்ஸட் சேலரி என்பதில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம். கடை வாடகைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்தோம். இதேபோல, பல்வேறு முயற்சிகளை எடுத்து கடினமாக உழைத்தால், தொழிலை மீண்டும் லாபகரமான நோக்கில் எடுத்து செல்லலாம்.''

> நெருக்கடியான காலத்தில் டெர்பி ஜீன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு செயல்பட்டது எப்படி? என்னென்ன உத்திகள் கையாளப்பட்டன?

> பண்டிகைக் காலங்களில் ஜவுளி விற்பனை எப்படியிருக்கும்?

> எனக்கு 60 வயதாகிறது. ஹெச்.ஆர் துறையில் பல வருட அனுபவம் உள்ளது. குறைந்த அளவில் முதலீடு செய்து தொடங்கும்படி ஏதேனும் ஒரு பிசினஸைக் கூற முடியுமா?

> சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களில் என்னென்ன யுக்திகளைக் கையாளலாம்?

- இந்தக் கேள்விகளுக்கு விஜய் கபூர் அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான ஆர்ட்டிகிளை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/36zhTjk

காலத்துக்கேற்ற மாற்றங்கள் கட்டாயம்! - கோவிட்டுக்குப் பிறகு பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ் https://bit.ly/36zhTjk

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு