Published:Updated:

10 ஆண்டுகளில் ₹27,562 கோடி வசூல்; மக்கள் நம்பிக்கையில் விளையாடியதா Amway? என்ன நடந்தது?

2002-03-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை ஆம்வே நிறுவனம் 27,562 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து வசூலித்திருக்கிறது. இதில் ரூ.7,588 கோடியை அதன் ஏஜென்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு கமிஷனாகக் கொடுத்துள்ளது.

10 ஆண்டுகளில் ₹27,562 கோடி வசூல்; மக்கள் நம்பிக்கையில் விளையாடியதா Amway? என்ன நடந்தது?

2002-03-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை ஆம்வே நிறுவனம் 27,562 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து வசூலித்திருக்கிறது. இதில் ரூ.7,588 கோடியை அதன் ஏஜென்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு கமிஷனாகக் கொடுத்துள்ளது.

Published:Updated:

மல்டிவெவல் மார்க்கெட்டிங்கில் கொடிகட்டிப்பறந்த ஆம்வே (Amway) நிறுவனத்தின் ரூ.757 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தியாவில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்வே நிறுவனத்துக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வோர் இடத்திலும் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தி வீடியோ மூலமும், அறிவிப்பு பலகை மூலமும் எப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கணக்கு காட்டுவது வழக்கம்.

Money (Representational Image)
Money (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்களிடம் எப்படி கோடீஸ்வரராகலாம் என்று கூறி மூளைச்சலவை செய்து உறுப்பினர்களை சேர்ப்பதில் ஆம்வே அதிகாரிகள் தீவிரமாக இருந்தனர். இந்த கணக்கை நம்பி தினமும் ஏராளமானோர் ஆம்வே நிறுவனத்தில் ஏஜென்டுகளாக சேர்ந்து விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தனர். அதோடு தாங்களும் அதிகமானவர்களை ஏஜென்டுகளாகச் சேர்த்துவிட்டனர். சொற்ப விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருள்களை பல மடங்கு அதிக விலை குறிப்பிட்டு விற்பனை செய்வதை ஆம்வே நிறுவனம் வழக்கமாகக் கொண்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இப்புகாரை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஆம்வே நிறுவனம் பொதுமக்களை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2002-03-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை ஆம்வே நிறுவனம் 27,562 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து வசூலித்திருக்கிறது. இதில் ரூ.7,588 கோடியை அதன் ஏஜென்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு கமிஷனாகக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையைவிட ஆம்வே நிறுவனம் விற்பனை செய்யும் பொருள்களின் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. இந்த உண்மை தெரியாமல் பொதுமக்கள் ஆம்வே நிறுவனத்தில் ஏஜெண்டாகச் சேர்ந்து அதிக விலைக்கு பொருள்களை வாங்கி பணத்தை இழந்துள்ளனர்.

36 வங்கிக் கணக்கில் ரூ.575 கோடி பறிமுதல்!

ஆம்வே பற்பசை
ஆம்வே பற்பசை

இதையடுத்து ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.757.77 கோடி அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.411.83 கோடி அசையும் சொத்துகளும், வங்கியில் இருந்த ரூ.345.94 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 36 வங்கிக் கணக்குகளில் இப்பணம் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திண்டுக்கல்லில் செயல்பட்ட ஆம்வே தொழிற்சாலை!

தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை, அதன் இயந்திரங்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1996-97-ம் ஆண்டில் ரூ.21.39 கோடிக்கு ஆம்வே நிறுவனம் இந்தியாவில் பங்குகளை வாங்கி இருக்கிறது. அதோடு ஆம்வே நிறுவனம் தன் முதலீட்டாளர்களுக்கு ரூ.2,859.10 கோடியை டிவிடெண்டாகவும், ராயல்டியாகவும் வழங்கி இருக்கிறது. ஆம்வே திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் பிரிட் வேல்டுவைடு இந்தியா பிரைவேட் லிமிடெட், நெட்ஒர்க் டுவெண்டி ஒன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்திருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆம்வே நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அதன் ஏஜென்டுகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by Joshua Mayo on Unsplash

ஆம்வே நிறுவனத்தை நம்பி கோடிகளில் கனவு கண்டு கொண்டிருந்தவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஆம்வே போன்று நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக அந்நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பான்கார்டு கிளப் என்ற நிறுவனமும் பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் லட்சக்கணக் கானோர் முதலீடு செய்தனர். அந்த நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததால் மக்கள் அனைவரும் பணத்தை இழந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism