Published:Updated:

`ரத்தன் டாடாவை நெகிழ வைத்த அந்த ஒரு தருணம்!' - யார் இந்த சாந்தனு?

ரத்தன் டாடாவுடன் சாந்தனு

கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவருக்கு டாடாவிடம் இருந்து `என் அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளது நீங்கள் என் உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா?' என்று அழைப்பு வந்துள்ளது.

`ரத்தன் டாடாவை நெகிழ வைத்த அந்த ஒரு தருணம்!' - யார் இந்த சாந்தனு?

கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவருக்கு டாடாவிடம் இருந்து `என் அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளது நீங்கள் என் உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா?' என்று அழைப்பு வந்துள்ளது.

Published:Updated:
ரத்தன் டாடாவுடன் சாந்தனு

பலரும் பார்த்து வியந்துபோன ஒருவர்தான் ரத்தன் டாடா. இளம் வயதிலேயே ரத்தன் டாடாவின் உதவியாளரக சாந்தனு நாயுடு பணி புரிந்து வருகிறார். இது பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் சாந்தனுக்கு மட்டும் எப்படி சாத்திய பட்டது, இது குறித்து பார்ப்போம்.

2014-ல் புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டத்தைப் பெற்ற சாந்தனு நாயுடு ஆரம்பத்தில் டாடாவில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றினார். ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் நடுரோட்டில் நாய் ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு வேதனைப்பட்ட சாந்தனு நாயுடு, இதற்கு மேல் இது போன்று நாய்கள் சாலை விபத்தில் இறக்கக் கூடாது என்று தோன்றவே, தன்னுடன் சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ரிஃப்ளெக்டர் காலர் (Reflector Collar) என்ற புதிய கண்டுபிடிப்பை வடிவமைத்தார். இந்த காலர் மூலம் ஓட்டுனர்கள் தூரத்தில் இருந்து நாயைக் கவனித்து செயல்பட முடியும்.

ரத்தன் டாடா - சாந்தனு நாயுடு
ரத்தன் டாடா - சாந்தனு நாயுடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த நாள் அவரும் அவருடைய நண்பர்களும் தெருநாய்களுக்கு காலர்களை கட்டி விட்டனர் .

அவர்கள் வடிவமைத்த அந்த காலர் வேலை செய்யுமா என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால் அடுத்த நாள் காலர் காரணமாக ஒரு நாய் விபத்திலிருந்து உயிரோடு காப்பாற்றப்பட்டதாகச் செய்தி அவரை வந்தடைந்தது. இது அவருக்கு ஆச்சர்யமாக இருந்த நிலையில் இந்தச் செய்தி டாடா குழுமத்தின் செய்திக் குறிப்பில் இடம்பெற்றது. பிறகு, அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தகவலைக் கேட்டறிந்த சிலர் நாய்களுக்கான காலர்களை செய்து தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்த நேரத்தில் அவரிடம் போதுமான பணம் இல்லாததால் அவருடைய தந்தை ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுதும்படி கூறினார். ஏனெனெனில், அவருக்கும் நாய்கள் மீது பிரியம் இருப்பதால் அவரால் உதவக்கூடும் என்று தன் மகனிடம் கூறினார்.

தொடக்கத்தில் சாந்தனு தயங்கினாலும் நாம் ஏன் எழுதக் கூடாதென்று தோன்றவே கைப்பட கடிதம் ஒன்றை எழுதுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கடிதத்துக்கான பதில் கடிதம் ரத்தன் டாடாவிடமிருந்து வருகிறது. அந்தக் கடிதத்தில் இளம் ஊழியரைச் சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரத்தன் டாடா- சாந்தனு
ரத்தன் டாடா- சாந்தனு
FB/@humansofbombay

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். பிறகு, சாந்தனு கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காகச் சென்றார். ஆனால், படித்து முடித்தவுடன் டாடா அறக்கட்டளைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவருக்கு டாடாவிடம் இருந்து `என் அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளது நீங்கள் என் உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா?' என்று அழைப்பு வந்துள்ளது. அதன் பிறகே சாந்தனு ஜூலை 2018 முதல் ரத்தன் டாடாவின் அலுவலகத்தில் துணைப் பொது மேலாளராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.

பலரும் அவரை பாஸ் என்று அழைக்கும் நிலையில் நான் அவரை `மில்லினியல் டம்பில்டோர்' என்றே அழைக்க விரும்புகிறேன். அந்தப் பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன் என சாந்தனு ரத்தன் டாடாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.