Published:Updated:

பிராசஸிங் பீஸ் உஷார்! - ஜீரோ பர்சன்ட் வட்டிக் கடன்... சில தகவல்கள்!

ஜீரோ பர்சன்ட்
ஜீரோ பர்சன்ட் ( pixabay )

உண்மையில் ஜீரோ பர்சன்ட் வட்டி பாதுகாப்பானதா... அல்லது மக்களுக்கு விரிக்கப்படும் மாய வலையா?

நீங்கள் பொருள்கள் வாங்கும் கடையுடன் தொடர்பிலிருக்கும் நிதி நிறுவனங்கள் ஜீரோ பர்சன்ட் வட்டியில் கடன் தருவதாகக் கூறினாலும், உங்களுக்குப் பணத்தைக் கடன் வழங்கிய உடனேயே பிராசஸிங் ஃபீஸ் (Processing fees) என்று ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலித்துவிடும். இந்தத் தொகை முழுவதும் அந்த நிதி நிறுவனத்தின் லாபக் கணக்கில் சேரும்.

மேலும், இதுபோன்று ஜீரோ பர்சன்ட் வட்டியில் கடன் தருவதாகக் கூறும் நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத் தொடர்பில் இருக்கும். அந்தத் தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் மக்களிடையே அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதற்கு அதனுடன் தொடர்பில் இருக்கும் இந்த நிதி நிறுவனங்களின் ஜீரோ பர்சன்ட் வட்டிக் கடன் முக்கியமான காரணமாக உள்ளது.

Representational Image
Representational Image

இதனால் அந்த நிறுவனங்களிடமிருந்து கணிசமான தொகையை இந்தக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் பெற்றுவிடும் என்பதால், ஜீரோ பர்சன்டில் கடன் தர முடிகிறது.

நீங்கள் வாங்கும் பொருளுக்கான தொகையை உங்களுக்காக அந்த நிறுவனமே கடையிடம் வழங்கிவிடும். நீங்கள் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களின் கடனை அடைக்கும் விதமாக அந்த நிதி நிறுவனத்துக்குத் தவணை கட்ட வேண்டும்.

இந்தத் தொகையைக் கட்டத் தவறும்பட்சத்தில் உங்களுக்குக் குறிப்பிட்ட தொகை அபராதமாகப் போடப்படும். இதையும் செலுத்தத் தவறினால் எதிர்காலத்தில் நீங்கள் பர்சனல் லோன் போன்றவற்றைப் பெறுவதற்குத் தகுதியற்றவராகிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

- இன்றைய வணிக உலகில் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் ஜீரோ பர்சன்ட் (0%) வட்டியில் கடன் தருவதாகக் கூறி மக்களை ஈர்ப்பதைக் காண முடிகிறது.

உண்மையில் ஜீரோ பர்சன்ட் வட்டி பாதுகாப்பானதா... அல்லது மக்களுக்கு விரிக்கப்படும் மாயவலையா... இதன் பின்னிருக்கும் வியாபார உத்திதான் என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் என்.விஜயகுமாரிடம் பேசினோம்.

முழுமையான கைடன்ஸ் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > ஜீரோ பர்சன்ட் வட்டிக் கடன்... என்ன உண்மை? - வியாபார உத்தியா..? https://bit.ly/3dW2qey

ஜீரோ பர்சன்ட்
ஜீரோ பர்சன்ட்

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு