Published:Updated:

தொழிற்கூடங்களுக்கு தரவரிசை: ஸ்ரீதர் வேம்பு யோசனை முக்கியமானது... ஏன்?

தொழிற்கூடங்கள்
தொழிற்கூடங்கள்

எந்தத் தொழிற்கூடத்துக்கு எந்த அளவு ஊக்கமும், ஆக்கமும், நிதி ஆதரவும் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் அரசுக்கு இந்தத் தரவரிசை பயன்படும்.

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. ஜோஹோ கார்ப்பரேஷன் என்ற கொடி கட்டிப் பறக்கும் நிறுவனத்தை நிறுவியவர். பல காலமாக அவர் இந்த யோசனையை முன்வைத்துவருகிறார்.

தொழில்நுட்பம் உட்பட பல முக்கியமான துறைகளில் செயல்பட்டுவரும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, தரவரிசை கொடுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு தேர்தல் கமிஷனைப்போல சர்வ சுதந்திரமும், அதிகாரமும், ஆற்றலும்கொண்ட ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.

நாம் உற்பத்தி செய்யும் உதிரி பாகங்களின் தரம் எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று ஒப்பீடு செய்து உலகத் தரத்துக்கு நம்மை உயர்த்திக்கொள்ள நம் தொழிற்கூடங்களுக்கு இந்தத் தரவரிசை பயனுள்ளதாக இருக்கும்.

எந்தத் தொழிற்கூடத்துக்கு எந்த அளவு ஊக்கமும், ஆக்கமும், நிதி ஆதரவும் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் அரசுக்கு இந்தத் தரவரிசை பயன்படும்.

- இது ஒரு யோசனைதான். இதேபோல் மொத்தம் 5 யோசனைகளை அரசுக்கு முன்வைத்திருக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன்.

எதற்காக?

ஒரு கோடு கிழித்து 'வீட்டைத் தாண்டி வெளியே வராதீர்கள்' என்று 130 கோடி மக்களை அரசு கோட்டுக்கு உள்ளே வெற்றிகரமாக நிற்கவைத்தது.

தொழிற்கூடங்களுக்கு தரவரிசை: ஸ்ரீதர் வேம்பு யோசனை முக்கியமானது... ஏன்?

இப்போது அதே அரசு, அந்தக் கோட்டைத் தாண்டி வெளியேவர அனுமதித்திருக்கிறது என்றால், வீட்டுக்குள்ளிருக்கும் மற்றவர்கள் அனைவரும் பசியும் பிரச்னைகளும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.

இந்த எண்ணம் ஈடேற, அரசின் பரிசீலனைக்காக சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் முன்வைத்துள்ள 5 யோசனைகளும் முழுமையாக இங்கே > கோவிட் போட்ட பூட்டை உடைக்க... ரீபூட் இந்தியா! - புத்தாக்கத்துக்குப் புதிய யோசனைகள்! https://bit.ly/3fW3e3M

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு