Published:Updated:

நரேந்திர மோடியின் ஒரு மாத யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?

நரேந்திர மோடி
News
நரேந்திர மோடி ( Narendra Modi )

2007 அக்டோபரில் தொடங்கப்பட்டது இந்த யூடியூப் சேனல். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். ஆனால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே அவரது யூடியூப் சேனல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தற்போது அவரது யூடியூப் சேனலுக்கு 9.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் கொரோனாவுக்கு நிகராகப் பரவிய இன்னொரு விஷயம், யூடியூப் சேனல் ஆரம்பிப்பதுதான். சமைக்கத் தெரிந்தவர்கள், மோடிவேஷன் பேச்சாளர்கள், அழகு குறிப்பு தெரிந்தவர்கள் இப்படி பலரும் தங்களுடைய மொத்தத் திறமையையும் காட்ட யூடியூப் சேனல் ஏற்றதாக இருக்க, பல லட்சம் புதிய சேனல்கள் சில மாதங்களுக்குள் ஆரம்பித்து, அகில உலகை ஆச்சர்யப்பட வைத்தார்கள் நம்மவர்கள்.

இந்த யூடியூப் சேனலில் அவ்வப்போது அவர் ஆற்றும் உரைகள், நிகழ்வுகள், யோகா போன்ற பிற பொது விஷயங்கள் என அனைத்தையும் அதில் பதிவேற்றுகிறார்கள். அவருடைய வீடியோக்கள் அனைத்துமே யூடியூபில் ஹிட் அடித்துக்கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில் மிகப் பெரிய யூடியூபர்களின் வெற்றிக்கதைகளை நீங்கள் நிறையவே கேட்டிருக்கலாம். ஆனால், நாட்டின் பிரதமரும் தனது பெயரில் ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்த சேனலை உடனடியாகப் பார்க்க நினைக்கிறவர்கள் இந்த லிங்க்கை சொடுக்குக: https://www.youtube.com/c/NarendraModi

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாக, வீடியோவுக்கு ஏற்ப, அதன் பார்வைகள், விளம்பரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் யூடியூப் ஒவ்வொரு 1,000 பார்வைகளுக்கும் 3 டாலர் முதல் 7 டாலர் வரை வழங்குகிறது. இதுபோக, தனியாகவும் யூடியூபில் விளம்பரம் செய்வது, பொருள்கள், சேவைகள் விற்பது ஆகியவற்றின் மூலம் கூடுதலாகவும் வருமானம் பார்க்கலாம்.

மோடியின் யூடியூப் சேனல்
மோடியின் யூடியூப் சேனல்

2007 அக்டோபரில் தொடங்கப்பட்டது இந்த யூடியூப் சேனல். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். ஆனால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே அவரது யூடியூப் சேனல் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

தற்போது அவரது யூடியூப் சேனலுக்கு 9.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இதுவரை அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோக்களின் மொத்த எண்ணிக்கை 15,116. மொத்தமாக 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து சென்றுள்ளது. ஒரு நாளைக்கு தோராயமாக 6,47,490 பார்வைகளை ஈர்க்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் ஆராய்ந்து அறிந்து social Blate என்கிற இணையதளம், ``இந்த யூடியூப் சேனல் மூலம் மோடி மாதத்துக்கு 12,000 டாலர் முதல் 1,99,500 டாலர் வரை வருமானம் ஈட்டுகிறார்" என்று கணக்கிட்டுச் சொல்லி இருக்கிறது. இந்த யூடியூப் சேனல் மூலம் ஆண்டு வருமானம் 1,44,600 டாலர் முதல் 2.4 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. (ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 75 எனில், எவ்வளவு வருமானம் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்).

PM Modi
PM Modi

அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்துக் கணக்கைப் பொது தளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கொண்டுவந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டில் பிரதமர் மோடி வெளியிட்ட சொத்து விவரங்களின்படி, அவருடைய சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.22 லட்சம் உயர்ந்து, ரூ.3.07 கோடியாக உள்ளது. இந்த வருமானத்தில் யூடியூப் வருமானம் குறித்த விவரம் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா என்கிற விவரம் எதுவும் தரப்படவில்லை.
நரேந்திர மோடி யூடியூப் சேனல் மூலம் வருகிற வருமானம் அவருடைய தனிப்பட்ட கணக்கில் சேர்கிறதா அல்லது அதை அவர் வேறு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்கிறாரா என்கிற விவரங்களுக்கும் பதில் இல்லை!