Published:Updated:

அரசு வேலை ஓய்வுக்குப் பின்... திறமை இருந்தும் சமாளிக்க முடியாமல் போவது ஏன்?

வேலை
வேலை

இன்றைக்கு சில அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை 55 வயதிலேயே வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றன. இப்படி வலுக்கட்டாய ஓய்வில் அனுப்பப் படுகிறவர்களில் பலர் மனமுடைந்து போய் விடுகின்றனர்.

கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிச் சொல்கிறார் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் கெம்பா கார்த்திகேயன்.

``தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களுக்கு `எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய வேலை பறிபோகலாம்' என்பது தெரியும் என்பதால், அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வதற்கு அவர்கள் மனதளவில் தயாராகவே இருப்பார்கள். கூடவே, மேற்கொண்டு படிப்பது, அதற்குத் தேவையான வேலைத்திறனில் தங்களை மேம்படுத்திக்கொள்வது என்றும் தயாராக இருப்பார்கள். தனியார் நிறுவனங்களில் `ஒயிட் காலர் ஜாப்' செய்பவர்கள்கூட தங்கள் திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி வேறொரு நிறுவனத்துக்குச் சென்றுவிடுவார்கள்.

இதுவே அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு `இது நமக்கு நிரந்தர வேலை' என்ற நம்பிக்கை இருப்பதால் உயர்படிப்பு, மற்ற வேலைத்திறன்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளாமலே இருந்திருப்பார்கள்.

வேலை
வேலை

அரசு வேலையில் இருந்தவர்கள் அடுத்தவரை அதிகாரம் செய்தே பழக்கப்பட்டிருப்பார்கள். அதிகாரம் செய்வதை மறந்து தன் திறமையை வெளிப்படுத்தி, இன்னொருவரிடம் வேலை வேண்டும் என்று கேட்பதே அவர்களால் முடியாத காரியம். தங்கள் வேலையில் நல்ல திறமை கொண்டிருப்பவர்கள்கூட, அரசு வேலை போன பிறகு, சமாளிக்க முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்.

ஆனால், ராணுவத்தில் சாதாரண வேலையில் இருந்தவர்கள், ஓய்வுக்குப் பிறகு செக்யூரிட்டி வேலைக்குச் செல்வதுபோல சில விதிவிலக்குகளும் உண்டு. எழுதுவது, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்றவற்றில் ஏற்கெனவே ஈடுபாடு கொண்டவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

அரசாங்கத்தில் ஒயிட் காலர் வேலையில் இருந்தவர்களுக்கு அரசு இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது என்பது நன்கு தெரியும். இவர்கள் தனியார் நிறுவனங்களில் ஆலோசகர்களாகப் போகலாம்.

உதாரணத்துக்கு, அரசு வேளாண்துறையில் வேலை பார்த்தவர்கள் விவசாயம் தொடர்பான தொழிலைச் செய்துவரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால், எந்த டெண்டருக்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும், எந்த வேலைக்கு எந்த அரசுத்துறையை அணுக வேண்டும் என ஆலோசனை வழங்கலாம்.

எல்லாவற்றுக்கும் உங்கள் மனது தயாராக இருந்தால், கட்டாய ஓய்வால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்கிறார் கெம்பா கார்த்திகேயன்.

- இன்றைக்கு சில அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை 55 வயதிலேயே வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றன. இப்படி வலுக்கட்டாய ஓய்வில் அனுப்பப் படுகிறவர்களில் பலர் மனமுடைந்து போய் விடுகின்றனர். 55 வயதுக்குப் பின் நல்ல வேலை கிடைக்காது என்ற எண்ணம் அவர்களின் கவலையை பலமடங்கு அதிகரித்து விடுகிறது. இப்படி கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்யலாம்?

வேலை
வேலை

உற்பத்தித் துறையில் வேலைபார்த்தவர்களுக்கு, நிர்வாகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு, நிதித்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு, மார்க்கெட்டிங் அல்லது சந்தைப்படுத்துதல் தொழிலில் வேலை பார்த்தவர்களுக்கு, வேளாண்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு...

இப்படி வெவ்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அறிமுக வழிகாட்டும் கட்டுரையை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > கட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம்! - 55 வயதுக்குப் பின் சாதிக்க யோசனைகள்..! https://bit.ly/3mI2Hpk

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு