Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகு தொழில்துறை..! - சி.கே.ஆர் சொல்லும் ஆலோசனைகள்!

சி.கே.ரங்கநாதன்
பிரீமியம் ஸ்டோரி
சி.கே.ரங்கநாதன்

இப்போதுள்ள சூழலில் லாபம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், பண மூலதனத்தை அதிகரிக்கலாம்.

கொரோனாவுக்குப் பிறகு தொழில்துறை..! - சி.கே.ஆர் சொல்லும் ஆலோசனைகள்!

இப்போதுள்ள சூழலில் லாபம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், பண மூலதனத்தை அதிகரிக்கலாம்.

Published:Updated:
சி.கே.ரங்கநாதன்
பிரீமியம் ஸ்டோரி
சி.கே.ரங்கநாதன்
டுங்கவைக்கும் கொரோனாநோய் காரணமாக தொழில்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கிறது.

இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர தொழில்முனைவோர்களுக்குச் சிறப்பாக வழிகாட்டிவருகிறது ‘டை சென்னை’ (TiE). இந்த அமைப்பு ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுக்கவிருக்கும் தொழில்முனைவோர்களுக்கு ஆலோசனை தந்தார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும், ‘டை’ சென்னை அமைப்பின் தலைவருமான சி.கே.ரங்கநாதன். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் இங்கே...

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குக் கட்டுமானத்துறையில் பிசினஸ். தற்போது என்னால் வீட்டிலிருந்து வேலை பார்க்க இயலவில்லை; விற்பனையும் இல்லை.இப்போது நான் என்ன செய்வது?

“கட்டுமானத்துறை பற்றி உங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த நேரத்தில் உங்கள் துறை பற்றி நிறைய படிக்கலாம். வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய தேவைகளையும் அறியலாம். இப்போதிருக்கும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, எதிர்கால வாடிக்கையாளர்களிடமும் பேசலாம். `இந்தத் துறை எதிர்காலத்தில் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கை இல்லையெனில், புதிய தொழிலுக்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள முயலுங்கள்.”

இப்போதுள்ள சூழலில் லாபம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், பண மூலதனத்தை அதிகரிக்கலாம்.

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜவுளித்துறை வர்த்தகம், எந்த நிலையில் இருக்கும்?

“உலகச் சந்தை நிச்சயமாக மந்தநிலையைச் சந்திக்கும். இதில் ஜவுளித்துறையும் விதிவிலக்கல்ல. இந்த பாதிப்புக்குப் பிறகு அனைத்து வாடிக்கையாளர்களும் பொருளாதாரரீதியான நெருக்கடியைச் சந்திப்பதால், செலவுகளைக் குறைக்கவே விரும்புவார்கள். உலகப் பொருளாதாரம் செப்டம்பருக்குப் பிறகுதான் மெள்ள மீண்டுவரத் தொடங்கும். இதனால் இந்த வருடம் தொழில்துறைக்கு சற்றுக் கடினமானவே இருக்கும். அடுத்த 2021-2022-ம் ஆண்டில் தொழில்துறைகள் அனைத்தும் முழுமையாக மீள வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கையுடன் இருப்போம்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போதுள்ள சூழலில், கடனுக்குப் பொருள்கள் கொடுப்பதை நிறுத்தலாமா அல்லது எப்போதும்போலத் தொடரலாமா?

“கடன் விற்பனையை நிறுத்தினால், நீங்கள் வாடிக்கையாளர்களை இழக்கக்கூடும். நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் உங்களிடம் மட்டுமே மக்கள் பொருள்களை வாங்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தால் மட்டும் கடன் விற்பனையை நிறுத்தலாம். அப்படி இல்லையெனில், கடன் விற்பனையை நிறுத்தாதீர்கள். உங்களுடைய தொழிலிலிருக்கும் அனைத்துத் தரப்பினரும் கடன் விற்பனையை நிறுத்தினால் மட்டுமே உங்களாலும் நிறுத்த முடியும்.”

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

சீக்கிரம் கெட்டுப்போகும் பொருள்களை தற்போதிருக்கும் நிலையில் எப்படிச் சேமிப்பது?

“அப்படிப்பட்ட பொருள்களைக் குளிர்ப்பதன சேமிப்பின் மூலம் பாதுகாக்கலாம். கொரோனா தொற்றுக்குப் பிறகு உணவுப் பொருள்களின் தேவை அதிகரிக்கும். அதனால் நிச்சயம் இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம்.”

தொழில்முனைவோர்கள் மனரீதியாக எப்படித் தயார் செய்துகொள்ளலாம்?

“இப்போதுள்ள சூழலில், தொழில் முனைவோர்கள் தொழில்துறையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களையும், புதிய தொழில் உத்திகளையும் இந்த நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் வாய்ப்புகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். அண்மைக் காலமாக இணையம் மூலம், ஆப்ளிகேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்கள் வளர்ச்சியடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி உங்கள் பிசினஸ் தொடர்பான அறிவை அப்டேட் மற்றும் அப்கிரேடு செய்து கொள்ளுங்கள்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாஜிஸ்டிக் தொழிலைத் தொடங்கலாம் என்றிருந்தேன். இப்போது என்ன செய்வது?

“லாக்டௌன் முடிந்துவிட்டால், கொரோனா தொற்று முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. அரசாங்கம் கொரோனாவைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். அதனால் கொரோனா தொற்று முழுமையாக முடிந்த பிறகே லாஜிஸ்டிக் தொழிலைத் தொடங்கச் சரியான நேரமாக இருக்கும். சந்தை வாய்ப்புகளையும், கொரோனா சார்ந்த அறிவிப்புகளையும் கூர்ந்து கவனித்து வாருங்கள்.”

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

சேகரிப்பு மேலாண்மையில் (Collection Management) எந்தவிதமான உத்தியைப் பின்பற்றலாம்?

“கொரோனா தொற்று முடிவடைந்த பிறகே பணத்தைப் பெறும் சூழல் ஏற்படும். தற்போதைய சூழலில் அனைத்துத் தொழில்களுமே மூடப்பட்டிருப்பதால், கொரோனா காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.”

என் பிசினஸில் இப்போது விற்பனை சுத்தமாக இல்லை. இந்த நிலையில் வாடகை, ஊழியர்களின் சம்பளத்தை எப்படித் தருவது?

“உங்கள் நில உரிமையாளர்களிடம் வாடகையை மூன்று மாதங்களுக்குச் செலுத்தாமல் இருப்பதற்காகப் பேசிப் பார்க்கலாம். ஆனால், ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவில்லையெனில், அவர்கள் வேலையைவிட்டுச் செல்லும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால் இப்போது வாடகைச் செலவை மட்டுமே உங்களால் கட்டுப்படுத்த முடியும்.”

இப்போதுள்ள சூழலில் பண மூலதனத்தை (Working Capital) அதிகரிக்கலாமா, தற்போதுள்ள சந்தையைவிட புதிய சந்தையை நோக்கி நகரலாமா?

“புதிய சந்தையில் வாய்ப்புகள் அதிகமாக இருந்தால் நிச்சயமாகச் செல்லலாம். அதே நேரம் பழைய வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதுள்ள சூழலில் லாபம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், பண மூலதனத்தை அதிகரிக்கலாம். இல்லையெனில் பணத்தை எதிர்காலத்துக்குச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம்.”

வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது, உங்கள் ஊழியர்களை எப்படி வழிநடத்துகிறீர்கள்?

“வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது ஊழியர்களின் வேலையைப் பற்றித் தொடர்ந்து மேலதிகாரிகளுக்குத் தகவல்கள் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறோம். இதனால் சில வேலைகளில் உற்பத்தித்திறன் 120% வரை உயர்ந்திருக்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர்களின் வேலை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள பல வேலைகளைத் தருகிறோம். ஊரடங்கு முடிந்து, இயல்பான வேலைக்குத் திரும்பிய பிறகு அவர்கள் கற்றதை நடைமுறைக்குக் கொண்டுவர முயலுவோம்.”

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா?

“கொரோனாவுக்குப் பிறகு வேலை இழப்பு ஏற்படும் என்பதால், புதிய வேலைவாய்ப்புகள் வருவது கடினமான ஒன்றே. ஒருவேளை புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டாலும் சற்று குறைந்த அளவிலேயே இருக்கும்.”

பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? உங்களுடைய கருத்து என்ன?

“தற்போது பங்குச் சந்தையில் நீண்டகால முதலீடுகளைச் செய்யலாம். ஆனால், முழுப் பணத்தையும் முதலீடு செய்யக் கூடாது. அடுத்த 12 மாதங்களுக்கு பங்கு சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பதால், பொறுத்திருந்து பார்க்க வேண்டியது அவசியம்.”

ரியல் எஸ்டேட் துறையில் இப்போது முதலீடு செய்வது உகந்ததா?

“இப்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது நல்லதல்ல. கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் முதலீட்டு வாய்ப்புகள் பெருகலாம். அப்போது ரியல் எஸ்டேட் துறை நல்ல நிலையில் இருந்தால் முதலீடு செய்யலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism