Published:Updated:

ஆன்லைன் பிசினஸ்... சின்ன முதலீடு, பெரிய லாபம் - மார்க்கெட்டிங் உத்திகள்!

உங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் உங்களின் பொருள்கள் பற்றிய சிறிய வீடியோக்களை வெளியிடுவது நல்லது

பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19-க்குப் பிறகு பலரும் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். இந்தச் சூழலை அடிப்படையாகக் கொண்டு பலரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் எனச் சமூக வலைதளங்களில் குறைந்த செலவில் பிசினஸ்களைத் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் பிசினஸில் எளிதில் ஜெயிக்கும் வழிகாட்டுதல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் மார்கெட்டிங் ஆலோசகர் சந்தோஷ் ஸ்ரீனிவாசன்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துங்கள்

‘‘புதிதாக ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிக்கும்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எல்லா சமூகவலைதளப் பக்கங்களிலும் ஒரே பெயரில் பிசினஸ் அக்கவுன்ட் தொடங்குங்கள். அனைத்து சமூகவலைதளப் பக்கங்களையும் இன்டர்லிங்க் செய்வதன் மூலம் நிறைய ஃபாலோயர்களைப் பெற இயலும்.எல்லா சமூக வலைதளப் பக்கங்களிலும் உங்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண் அல்லது மெயில் ஐ.டி பதிவிடுவது நல்லது.

ஆன்லைன் பிசினஸ்... சின்ன முதலீடு, பெரிய லாபம் - மார்க்கெட்டிங் உத்திகள்!

உங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் உங்களின் பொருள்கள் பற்றிய சிறிய வீடியோக்கள் பதிவிடுங்கள். எப்படிப் பயன்படு்த்துவது, எங்கெல்லாம் தேவை இருக்கும் என்பது பற்றிய தகவல்களையும் சேர்த்து பதிவிட வேண்டும். எக்ஸ்பர்ட்டுகள் அல்லது வாடிக்கையாளர்களின் பாசிட்டிவ் கமென்ட்ஸ் போன்றவற்றையும் சிறிய வீடியோ, ஆடியோவாகப் பதிவு செய்து வெளியிடலாம். தகவல்களாகப் பதிவிடுவதைவிட சிறிய வீடியோ அல்லது ஆடியோவாகப் பதிவிடுவது நல்ல பயனைத் தரும்.

போட்டியாளர்களைக் கண்டறிவது

உங்கள் பிசினஸுடன் தொடர்புடைய போட்டியாளர்களின் இணையதளப் பக்கங்கள், மற்ற பிராண்டுகளின் சமூகவலைதளப் பக்கங்களைக் கவனமாகப் பாருங்கள். அதில் வாடிக்கையாளர்களின் கேள்விகள், தேவைகள் போன்றவற்றை ஆராயுங்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக உங்களின் இணையதளப் பக்கம் இருக்க வேண்டும். ஒரு பொருளை வடிவமைத்தபின் அல்லது உற்பத்தி செய்தபின் அதற்குத் தகுந்தாற் போல் வாடிக்கையாளர்களைத் தேடுவதை விட, வாடிக்கையாளர்களைக் கண்டறிந்துவிட்டு அதற்குத் தகுந்தாற்போல் பொருள்களை வடிவமைத்து, மார்கெட்டிங் செய்தால் எளிதில் வெற்றி பெற முடியும்.

ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

இணையதளப் பக்கம்

பிசினஸை அடுத்தடுத்த வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல உங்களுக்கென தனி இணையதளப் பக்கத்தை (வெப்சைட்) உருவாக்குவது நல்லது. உங்களின் இணையதளப் பக்கம் பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். கூடுமானவரை வெளிர்நிற பேக்ரவுண்டைத் தேர்வு செய்வது நல்லது. பொருள்களை வாங்க, புகார் அளிக்க, ஆன்லைன் பணப் பரிமாற்றம் என எல்லாவற்றுக்கும் வசதியானதாக இருக்க வேண்டும். உங்களின் டொமைன் உங்களின் நிறுவனப் பெயருடன் தொடர்புடையதாக இருப்பது அவசியம். உங்களின் வருமானம் மற்றும் ஆர்டர்களுக்கேற்ப இணையதளப் பக்கத்தை வடிவமமைத்துக் கொள்ளலாம்.

டெக்னாஜியில் கவனம்...

ஆன்லைன் பிசினஸைப் பொறுத்தவரை, டெக்னாஜியில் அதிக கவனம் செலுத்துபவர் கள்தான் எளிதில் வெற்றி பெறுவார்கள். உங்களின் பொருள்களைச் சரியான விளக்கத்துடன் பதிவிடுவது, ஹேஸ்டேக் பதிவிடுவது, சரியான எஸ்.இ.ஓ-வுடன் பதிவிடுவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களின் எஸ்.இ.ஓ-வைப் பொறுத்தே உங்கள் பொருள் அதிகமான மக்களைச் சென்றடையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதிப்பைத் தக்கவைப்பது

உங்களைத் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளியுங்கள். சோஷியல் மீடியாவில் விலை கேட்கிறார்கள் எனில், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுந்தகவல் அனுப்புவது நல்லது. ஆன்லைனில் ஒருவர் ஒரு பொருளை வாங்கும்முன் நிச்சயமாக அந்தப் பொருளுக்கான ரிவியூக்களை ஆராய்வார்கள். எனவே, உங்களின் சர்வீஸ் பற்றிய பாசிட்டிவ் கமென்டுகளைப் பெற முயற்சி செய்யுங்கள். அப்படி வரும் பாசிட்டிவ் கமென்டுகளுக்கு நன்றி சொல்லுங்கள். நெகட்டிவ் கமென்டுகளுக்குகூட ‘நன்றி... உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். இனி இதுபோன்று தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பதிவிடலாம். இது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும்.

ஏதேனும் ஒரு புது பொருள் அறிமுகம் செய்தாலோ, அல்லது ஏதேனும் அப்டேட் இருந்தாலோ வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் அளிக்கலாம். இது உங்களின் விற்பனையை அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுடன் எப்போது தொடர்பிலேயே இருக்க முடியும்.

ஒப்பீடு செய்யுங்கள்...

உங்கள் போட்டி நிறுவனத்துடன் உங்கள் பொருள்களின் தரம், விற்பனையாகும் பொருளின் எண்ணிக்கை, பயன்படுத்தும் டூல்ஸ், டெக்னாலஜி விஷயங்களை அவ்வப்போது ஒப்பீடு செய்வது நல்லது. உங்களின் போட்டி நிறுவனம் ஒரு பொருளை உங்களைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் விலையைக் குறைத்து விற்க வேண்டும் என்பதில்லை. உங்கள் பொருளின் தரத்திலும், தனித்துவத்திலும் வித்தியாசம் காட்டினால் போதும்.

அப்டேட் அவசியம்

உங்களுடைய இணையதளப் பக்கத்தை ஒரு நாளைக்கு எத்தனை பேர் பார்வையிடு கிறார்கள். என்ன மாதிரியான பொருள்களை விரும்புகிறார்கள் என்பதை அடிக்கடி செக் செய்து அதற்கேற்ற மாதிரி உங்களின் சர்வீஸையும், பிசினஸ் பக்கங்களையும் அப்டேட் செய்யுங்கள். வித்தியாசமான விளம்பர உத்திகளைக் கையாளுங்கள். இப்படியெல்லாம் செய்தால் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் பார்க்கலாம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு