உலகையே அச்சுறுத்திவருகிறது கொரோனா. இந்தச் சிக்கலான சூழ்நிலையில், `பி.எம் கேர்ஸ்’ (PM CARES) திட்டத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்பை, சமூகப் பொறுப்பு நிதி (Corporate Social Responsibility (CSR) Fund) செலவாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு சொல்லியுள்ளது.

இதனால் நம் நாட்டிலுள்ள பெரும் நிறுவனங்கள் கணிசமான தொகையை நன்கொடையாகத் தந்திருக்கின்றன. நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் ஃபண்ட் என்பது என்ன?

கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, `ரூ.500 கோடி நிகர மதிப்பு கொண்ட அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் அல்லது ஏதாவது ஆண்டில் ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள் தங்கள் முந்தைய மூன்று ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் இரண்டு சதவிகிதத்தைச் சமூக வளர்ச்சிக்காகச் செலவு செய்ய வேண்டும்.’ சமூக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை அதாவது, சி.எஸ்.ஆர் ஃபண்டை கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவோ, சொந்த அறக்கட்டளை மூலமாகவோ, லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவோ செலவழிக்கலாம்.

கம்பெனிகள் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் 12 காரணங்களுக்காகத்தான் சி.எஸ்.ஆர் ஃபண்ட் செலவழிக்கப்பட வேண்டும். பெரும்பாலும் அவை மத்திய அரசின் திட்டங்களுக்காக அல்லது கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுக்காகத்தான் இருக்கும். நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் திட்டங்கள், மராத்தான் போட்டி / விருதுகள் / நன்கொடைகள் / விளம்பரங்கள் / தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஸ்பான்ஸர்ஷிப் போன்ற நிகழ்வுகள், அரசியல் கட்சிக்கு நன்கொடையாகத் தரப்படும் தொகை ஆகியவை சி.எஸ்.ஆர் ஃபண்டிலிருந்து வழங்கப்படக் கூடாது.

இரண்டு சதவிகிதத் தொகையை முறையாகச் செலவு செய்யாவிட்டால், கம்பெனிகள் சட்டத்தின்படி அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.13,624 கோடி 21,397 நிறுவனங்களால் சி.எஸ்.ஆர் நிதியாகச் செலவழிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தேசியப் பேரிடராகக் குறிப்பிட்டிருக்கும் மத்திய அரசு, `அதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிடும் நிதியை கார்ப்பரேட் சி.எஸ்.ஆர் நிதியின்கீழ் சேர்க்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

ஆனால், ஊரடங்கு காலத்தில் எல்லா வகையான பணியாளர்களுக்கும் தரப்படும் ஊதியம் சி.எஸ்.ஆர் செலவாகத் தகுதி பெறாது.

அது முதலாளிகளின்/நிறுவனங்களின் கடமை. ஊதியமாக அல்லாமல் கொரோனா தொற்று தடுப்புக்காகத் தந்தால், அந்தத் தொகையை சமூகப் பொறுப்பு செலவாக எடுத்துக் கொள்ளலாம்.

சி.எஸ்.ஆர் நிதியை அரசு அறிவித்திருக்கும் நிவாரண நிதிக்கு வழங்கலாமா என்கிற கேள்வியும் இருக்கிறது. மத்திய அரசின் பி.எம் கேர்ஸ் நிதிக்கு அளிக்கும் நன்கொடை மட்டுமே சி.எஸ்.ஆர் செலவாகத் தகுதி பெறுகிறது. ஆனால், முதலமைச்சரின் நிவாரண நிதி அல்லது மாநில நிவாரண நிதிக்கான பங்களிப்புகள் கார்ப்பரேட் சி.எஸ்.ஆர் செலவாகத் தகுதி பெறாது.