Published:Updated:

`இது சிறு குறு வணிகர்களுக்கான வரப்பிரசாதம்!' - மத்திய அரசின் புதிய நடவடிக்கையால் என்ன நன்மை?

மளிகை கடை ( Pixabay )

சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை எம்.எஸ்.எம்.இ பிரிவுக்குள் இணைத்துக்கொள்கிறபோது, பல்வேறு சலுகைகளை வியாபாரிகளால் பெற முடியும்.

`இது சிறு குறு வணிகர்களுக்கான வரப்பிரசாதம்!' - மத்திய அரசின் புதிய நடவடிக்கையால் என்ன நன்மை?

சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை எம்.எஸ்.எம்.இ பிரிவுக்குள் இணைத்துக்கொள்கிறபோது, பல்வேறு சலுகைகளை வியாபாரிகளால் பெற முடியும்.

Published:Updated:
மளிகை கடை ( Pixabay )
சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அனைவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (Micro, Small and Medium Enterprises) வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி வர்த்தகர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் அமைச்சர் நிதின் கட்கரி, தனது ட்விட்டர் பக்கத்தில், ``சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் எம்.எஸ்.எம்.இ துறையிலிருந்து விடுபட்டிருந்தனர். தற்போதைய புதிய விதிமுறைகளின்படி, சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளையும் எம்.எஸ்.எம்.இ பிரிவுக்குள் கொண்டுவரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு அரசின் சலுகைகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவதில் முன்னுரிமை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசின் இந்த அறிவிப்பு குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம். ``கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்திரு ஆண்டுகளாக சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடுமையான சூழ்நிலையிலிருந்து எங்களை மீட்டெடுக்க மத்திய அரசு செய்த பேருதவியாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை எம்.எஸ்.எம்.இ பிரிவுக்குள் இணைத்துக்கொள்கிறபோது, பல்வேறு சலுகைகளை வியாபாரிகளால் பெற முடியும். அதனால், வணிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பும் முழு மனதுடன் வரவேற்கிறது.

எம்.எஸ்.எம்.இ-யில் பதிவு செய்வது அவசியம்!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழகத்தின் சாமான்ய வணிகர்கள் முதல் அனைத்து வணிகர்கள் வரை, மத்திய அரசின் இந்த அறிவிப்பை எடுத்துச் செல்வது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மிக முக்கிய கடமையாகும். ஏனெனில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, ஊடகங்களைப் பார்க்கும் வணிகர்களை மட்டுமே சென்றடையும்.

ஆனால், அறிவிப்பைப் பார்க்காத, பார்க்க முடியாத, கிராம வணிகர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவர்களையும் எம்.எஸ்.எம்.இ துறையில் பதிவு செய்ய வைப்பது எங்களின் நோக்கம். அப்படிப் பதிவு செய்யும்போதுதான் மானியம் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் அவர்களால் எளிதாகப் பெற முடியும்.

அரசின் சலுகைகள்!

உதாரணத்துக்கு, எளிதில் கெட்டுப்போகக்கூடிய விவசாய விளைபொருள்களை சேமித்து வைக்கும் `குளிர்பதன கிடங்குகள்' பெரும்பாலும் தனியார் வசம் இருக்கின்றன. அதற்கான வாடகைகள் சிறு வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது, எம்.எஸ்.எம்.இ பிரிவுக்குள் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை சேர்த்திருப்பதால், அரசு தரப்பில் குளிர்சாதன கிடங்குகளை அமைப்பதற்கான வசதிகளை சலுகை அடிப்படையில் எங்களால் கேட்டு பெற முடியும். அதே போல, மின்சாரம், காஸ் சிலிண்டர், குடிநீர் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கட்டுமானம் உள்ளிட்ட பல விஷயங்களில் இரண்டு மடங்கு தொகையை செலவு செய்து வருகிறோம்.

ஜவுளி வியாபாரம்
ஜவுளி வியாபாரம்
மாதிரி புகைப்படம்

இந்தச் செலவுகளை நாங்கள் விற்கக்கூடிய பொருள்களின் விலையில்தான் வைத்து விற்கிறோம். ஆனால், இனிவரும் காலங்களில், சலுகைகளை அரசிடமிருந்து பெற முடியும் என்கிற போது, பொருள்களின் விலையை எங்களால் நிச்சயமாகக் குறைக்க முடியும். நுகர்வோர்களும் இதனால் அதிகம் பலனடைவார்கள்.

ஒரே ரேஷன்; ஒரே லைசென்ஸ்!

தற்போதைய நிலையில், ஒரு மளிகைக் கடையை ஆரம்பிக்க வேண்டுமானால்கூட, கார்ப்பரேஷன், ஜி.எஸ்.டி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக 13 வகையான லைசென்ஸ்களை அந்தக் கடையின் உரிமையாளர் எடுக்க வேண்டும். இது மிகவும் சிரமமான விஷயம்.

ஒரு கடைக்கு பல லைசென்ஸ் நடைமுறையை மாற்றி, ஒரே ரேஷன் கார்டு திட்டம் போல, ஒரே லைசன்ஸ் என்கிற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அப்போது தொழில் தொடங்குவது மிகவும் எளிதாக இருக்கும். மளிகைக் கடை ஆரம்பிக்க நினைப்பவர்கள் எளிதில் தொழில் தொடங்குவார்கள். அதிக தொழில் முனைவோர்கள் உருவாவதால், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். குறிப்பாக லஞ்சம், ஊழல் குறையும்" என்றார் தெளிவாக.

மேலும், இந்த அறிவிப்பில் இருக்கும் சாதகங்கள் பற்றி கேப்பிடல் மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எஸ்.சிவகுமாரிடம் பேசினோம்.

எஸ்.சிவகுமார்
எஸ்.சிவகுமார்

``எம்.எஸ்.எம்.இ-க்கு என்றே தனியாக அமைச்சகம் அமைத்து, அது சார்ந்த நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் செய்து வருகிறது. ஏனெனில் எஸ்.எம்.இ மற்றும் எம்.எஸ்.எம்.இ துறையானது இந்திய ஜி.டி.பி-யில் 40-45% பங்காற்றக் கூடிய ஒரு துறையாகும். இப்படியான ஒரு துறையில், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை இணைத்து, அதற்கான அங்கீகாரம் மற்றும் அந்தஸ்து கொடுப்பதற்கு வழிவகை செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

இந்த மாற்றத்தின் மூலம், இனி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் தொழில் தொடங்க அல்லது விரிவாக்கம் செய்ய மற்றும் இதர தேவைகளுக்காக வங்கிகளுக்கு சென்று எளிதாக கடன்களை பெற முடியும். மேலும், எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் இதர சலுகைகளும் இனி இவர்களுக்கும் கிடைக்கும்.

எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு தனி வங்கி!

ஏற்கெனவே எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் பல்வேறு தடைகள் மற்றும் நடைமுறைப் பிரச்னைகள் இருக்கிற வேளையில், தற்போது சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களும் அந்தப் பிரிவில் இணைக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் மேலும் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதனால், எம்.எஸ்.எம்.இ துறைக்கென்று தனியாக அமைச்சகம் உருவாக்கியதுபோல, எம்.எஸ்.எம்.இ துறைக்கென்று தனியாக ஒரு வங்கியை வடிவமைத்து, அந்த வங்கிக் கிளைகளை நாடெங்கிலும் அமைப்பது நல்லது. இந்த யோசனையை மத்திய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அல்லது செயல்பாடுகளில் இருக்கும் சிறு வங்கிகள் சிலவற்றை ஒன்றிணைத்து, அதை எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான வங்கியாக அறிவிக்கலாம்.

Bank (Representational Image)
Bank (Representational Image)

அல்லது நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் பரந்து விரிந்து கிடக்கும் அஞ்சல் அலுவலகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை, தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்தி அதை எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனமாக மாற்றலாம்.

எம்.எஸ்.எம்.இ-க்களுக்காக உருவாக்கப்படும் வங்கி, கடன் கொடுப்பது, கடனை முறையாக வசூலிப்பது, எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த இதர நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்கிற நிலை வரும்போது, ஏற்கெனவே உள்ள வங்கிகளின் மீதான சுமை குறைவதோடு, கூடுதல் சுமையும் அதிகமாகாது" என்றார் தெளிவாக.

ஆக, மத்திய அரசின் இந்த முடிவு, கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism