Published:Updated:

ஏற்றம் காணுமா இந்தியப் பொருளாதாரம்? - கொரோனாவுக்குப் பிறகு..!

இந்தியப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியப் பொருளாதாரம்

கொரோனா வைரஸ் பிரச்னை ஓய்ந்த பிறகு அந்நிய முதலீடுகள் இந்தியாவை நோக்கி வரும் வாய்ப்புகள் அதிகம்!

ஏற்றம் காணுமா இந்தியப் பொருளாதாரம்? - கொரோனாவுக்குப் பிறகு..!

கொரோனா வைரஸ் பிரச்னை ஓய்ந்த பிறகு அந்நிய முதலீடுகள் இந்தியாவை நோக்கி வரும் வாய்ப்புகள் அதிகம்!

Published:Updated:
இந்தியப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியப் பொருளாதாரம்
யிர்க்கொல்லி நோயான கொரோனாவின் கோரப்பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம். கொரோனா தாண்டவம் முடிந்த பிறகு, நம் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிக்குத் திரும்பவே வாய்ப்புகள் அதிகம். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

மிகவும் குறைந்த கச்சா எண்ணெய் விலை

இந்தியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி நிலை என்பது 1982-87 காலகட்டத்தில் (கூடவே நடந்த பெரிய அளவிலான சென்செக்ஸின் புல்ரன்னுடன் கூடிய) ஆரம்பித்தது. அதற்கு முன்னர் அமெரிக்காவில் ரொனால்டு ரீகனின் ஆட்சிக்காலத்தில் (1979-82-ல்) மந்தநிலை நிலவியது. இந்தியாவின் இரண்டாவது பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி என்பது 1991-ம் ஆண்டில் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களால் வந்தது. இந்தச் சீர்திருத்தங்கள் ஹர்ஷத் மேத்தாவின் நடவடிக்கைகளுடன்கூடிய பெரியதொரு புல்ரன் உருவாவதற்கான தூண்டுதலாக இருந்தன. இரண்டு பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியின் காலகட்டங்களான 2004-08 மற்றும் 2009-11 வருடங்களில் இருந்த பொதுவான விஷயங்கள், கச்சா எண்ணெயின் விலைச் சரிவும், அமெரிக்க அரசாங்கக் கடன் பத்திரங்களின் வருமானக் குறைவும்தான். இவைதான் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையைத் தூண்டுவதாக இருந்தன.

ஏற்றம் காணுமா இந்தியப் பொருளாதாரம்? - கொரோனாவுக்குப் பிறகு..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திப்பதற்கும், கச்சா எண்ணெயின் விலை சரிவதற்குமுள்ள தொடர்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும், எப்போதெல்லாம் இந்த இரண்டும் சேருகின்றனவோ அந்தச் சூழல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏன் தூண்டுதலாக அமைகிறது என்பதே கேள்வி.

குறைவான வட்டியில் கிடைக்கும் பணம்!

1991-ம் ஆண்டில் இந்தியா தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடு (FDI) ஆகிய இரண்டு மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்துவருகின்றன. ஏனென்றால், நம் நாட்டிலேயே உருவாகும் உள்நாட்டு சேமிப்பில் 80% அளவுக்கு தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டை நோக்கியே செல்கிறது. இதனாலேயே அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் (எப்போதெல்லாம் குறைவான வட்டி விகிதம் அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களில் கிடைக்க ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் அதிகமாக) இந்தியாவை நோக்கி வருகின்றன. இதனால் இந்த வகை முதலீடுகள் இந்தியாவுக்கு முக்கியமானதாகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உதாரணமாக, 10 வருட அமெரிக்கக் கடன் பத்திர வருமானம், 2000-ம் (ஜனவரி) ஆண்டிலிருந்த 6.7 சதவிகிதத்திலிருந்து 2003-ம் (ஜூன்) ஆண்டில் 3.4 சதவிகிதமாகக் குறைந்தது. இந்த வட்டி வருமானக் குறைவுதான் 2003-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையிலான சீனா மற்றும் இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்தது. அதேபோன்றதுதான் லேமன் பிரதர்ஸ் (Lehman Brothers) நிறுவன திவாலுக்குப் பிறகு, இந்தியாவை நோக்கி எஃப்.டி.ஐ மற்றும் எஃப்.பி.ஐ வேகமாக வந்த 2009 முதல் 2010 ஆண்டு வரையிலான காலகட்டமும். அப்போது பல மடங்கு முதலீட்டுக்கு விண்ணப்பித்த நட்பு முதலாளித்துவ நிறுவனங்களின் ஐ.பி.ஓ மற்றும் க்யூ.ஐ.பி வளர்ச்சிக்கு வித்திட்டன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குறையும் வட்டி

2015-ம் ஆண்டு முதலே ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய லாபமற்ற நிலை என்பது இந்தியர்களின் சேமிப்பைப் பங்குச் சந்தை முதலீடுகளை நோக்கி பயணிக்கச் செய்தது. அதே சமயம், துரதிர்ஷ்டவசமாக இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு விகிதம் 25 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதத்துக்குக் குறைந்துவிட்டது. இதனாலேயே இன்றைக்கும் இந்தியா தன்னுடைய பொருளாதார மீண்டெழுதலுக்கு அந்நிய முதலீட்டை எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் தொழிலுக்குப் பணம் தரத் தயாராக இருப்பவர்கள் கடனாக தரத் தயாராக இருக்கிறார்களே தவிர, ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீடாகத் தருவதற்குத் தயாராக இல்லை. இதனாலேயே அமெரிக்க முதலீட்டாளர்களை நாம் நம்பி இருக்கவேண்டியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தரைதட்டச் செய்யும் அளவுக்குக் குறைத்திருக்கும் காரணத்தால், இந்தியா இரண்டு மடங்கு பலனைப் பெறும்.

கொரோனா வைரஸ் பிரச்னை ஓய்ந்த பிறகு அந்நிய முதலீடுகள் இந்தியாவை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவதாக, இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் கணிசமாகக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன (கச்சா எண்ணெயின் விலை குறைவால் மொத்த விலைக் குறியீடு குறைய வாய்ப்பிருப்பதால்). இதைத் தொடர்ந்து இந்திய அரசும் சிறுசேமிப்பு வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது. அப்படிக் குறைக்கும்பட்சத்தில் வங்கிகள் டெபாசிட்டுக்கான வட்டியைக் குறைக்கும். அத்துடன் வங்கிகள் கடன் தரும்போது வாங்கும் வட்டியையும் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் எஸ்.எம்.இ-களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நிச்சயமாக ஜி.டி.பி உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 83 டாலர் என்ற அளவிலிருந்து 30 டாலர் என்ற நிலையை எட்டியிருக்கிறது. மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி என்பது பூஜ்யம் என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா பொருளாதார மந்தநிலைக்குச் சென்றுவிடும் வாய்ப்பே தற்போது தென்படுகிறது.

இவையெல்லாமே இந்தியா வளர்ச்சிப் பாதைக்குச் செல்வதற்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், இன்னும் இரண்டு முக்கிய விஷயங்களும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜி.எஸ்.டி-யை முறைப்படுத்தும் முயற்சி

இந்தியாவில் பணிபுரியும் 600 மில்லியன் பணியாளர்களில் என்னுடைய அனுமானப்படி, கிட்டத்தட்ட 25 கோடி பணியாளர்கள் சில்லறைப் பொருள் விற்பனைத்துறையில் பணிபுரிகின்றனர்.

ஐந்து கோடி பேர் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணிபுரிகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இந்தியாவில் பணிபுரிவோர்களில் 50% பணியாளர்கள் சில்லறைப் பொருள் விற்பனைத்துறையிலேயே பணிபுரிகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஜி.எஸ்.டி என்பது நடைமுறைப்படுத்தப்படும் வரை இந்தத் துறையில் செயல்படுவோர் வரி ஏதும் கட்டாமல் கிட்டத்தட்ட 12-15% அளவிலான (வரி கட்டாமல்) லாபத்தை அடைந்துவந்தனர். ஜி.எஸ்.டி தீவிரமாக அமல்படுத்தப்படும் வேளையில், இவர்களுடைய லாபம் 2 - 4% அளவுக்குக் குறைந்துவிட்டது. இந்தவித லாபக் குறைவு செயல்பாட்டு மூலதனத்துக்கான தேவையை அதிகரித்துவிட்டது. இந்தவித அதிகரிப்பு இவர்களை ஒருங்கிணைக்கப்பட்ட கடன் தரும் நிறுவனங்களை நோக்கி நகர்த்த ஆரம்பித்தது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், கோட்டக் பேங்க், போன்ற தனியார் வங்கிகளும், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற என்.பி.எஃப்.சி-களும் ஏசியன் பெயின்ட், பிடிலைட், ரிலாக்ஸோ போன்ற பிராண்டடு பொருள்களை விற்கும் வியாபாரிகளுக்கும், பிராண்ட் அல்லாத பொருள்களை விற்கும் வியாபாரிகளுக்கும் இடையே பாரபட்சம் காட்டுகின்றன. பிராண்டடு பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு 8% வட்டிவிகிதத்திலும், பிராண்ட் அல்லாத பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு 15% வட்டிவிகிதத்திலும் கடன் தருகின்றன. இந்தவிதமான வட்டிவிகித வேறுபாட்டால், பிராண்ட் லீடர்கள் தங்களுடைய பொருள்களை வெற்றிகரமாக அதிக அளவில் விற்க ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக, சாதாரணமாக 6% வரை விற்பனை அதிகரிக்கும் ஏசியன் பெயின்ட் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு

கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைத்தது. `புதிதாக மூலதனச் செலவைச் செய்யும் நிறுவனங்கள் 15% வரியைச் செலுத்தினால் போதும்’ என்று சொன்னார் நிதியமைச்சர். அவர்கள் செயல்படும் துறையில் மார்க்கெட் லீடராக இருக்கும் நிறுவனங்களின் ஆர்.ஓ.சி.இ (Return On Capital Employed - ROCE), அவர்களுடைய மூலதனத்துக்கான செலவைவிட (Cost of Capital) நன்கு அதிகமாக இருக்கும். அதனால் இந்த நிறுவனங்கள் அதிக அளவிலான பண வரத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும். இந்தத் திறன், விரிவாக்கத்துக்கு வழிவகை செய்யும். எனவே, இந்த 15% வரி என்பது இந்த நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த விரிவாக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தவித நிறுவனங்களின் வருமான வரிவிகிதம் கிட்டத்தட்ட 20% என்ற அளவைத் தொடும். அதே சமயம், பிராண்ட் அல்லாத இந்த நிறுவனத்தின் போட்டியாளர்கள் விரிவாக்கம் செய்ய முடியாமலும், அதிக வருமான வரியைச் செலுத்தியும் (சுமார் 25% அளவில்) செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். 500 அடிப்படைப் புள்ளிகள் அளவிலான லாப மாறுதல் என்பது, மார்க்கெட் லீடர்கள் சிறிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதைச் சுலபமாக்கிவிடும். உதாரணமாக, பிடிலைட் நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியக்கூடும்.

முதலீட்டு முடிவுகளில் இதன் தாக்கம் எப்படியிருக்கும்?

தொழிலில் நுழைவதற்கு அதிகப்படியான தடை இருக்கும் துறைகளிலுள்ள அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பிராண்ட் லீடர்களாக இருக்கும் (கணக்குவழக்குகளை நேராக வைத்திருக்கும்) நிறுவனங்களின் மீது கவனம் வைக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் அதிக ஆர்.ஓ.சி.இ-யுடன் செயல்படும். இந்தவித அதிக ஆர்.ஓ.சி.இ., பண வரத்தை அதிகரிக்கச் செய்து பேலன்ஸ்ஷீட்டை செழிப்பாக்கும்; கொரோனா வைரஸால் வரக்கூடிய நீண்டநாள் செயல்படாதிருக்கும் (தேவை குறைவாக இருக்கும்) சூழலைச் சமாளிக்க உதவுவதாகவும் இருக்கும்.

ஏற்கெனவே கூறியபடி, எப்போதெல்லாம் குறைந்த வட்டிக்குக் கிடைக்கும் பணமும், மிகக் குறைவான கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையும் தென்படுகின்றனவோ, அப்போதெல்லாம் நிச்சயமாக இந்தவித நிறுவனங்களுக்குச் சாதகமான சூழலே உருவாகும். கடந்த 40 ஆண்டுக்காலத்தில் இதுதான் நடந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism