Published:Updated:

`கொரோனாவால் வேலை இழந்தவர்கள் எங்களிடம் வரலாம்!’ - அமேசான் நிறுவனர் அழைப்பு

ஜெப் பெசோஸ்
ஜெப் பெசோஸ்

பல்பொருள் அங்காடி தொடங்கி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால். மக்கள் எங்களைப் போன்ற ஆன்லைன் நிறுவனங்களைத்தான் பெரிதும் நம்பி இருக்கின்றனர் - ஜெப் பெசோஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா நோய் பாதிப்பால் உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்து இருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீண்டு வர பல மாதகாலங்கள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச்சந்தை, ஆட்டோ மொபைல் துறைகளில் தொடங்கி உற்பத்தித் துறை வரை இந்தக் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் தொழிற் நிறுவனங்களின் உற்பத்தி அளவு மிகுதியாக சரிந்துள்ளது.

அமேஸான், ஃப்ளிப்கார்ட்டில் ஃபிட்னெஸ் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை! #HomeFitness

சூப்பர் மார்க்கெட், காய்கறிக்கடை என அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட மக்கள் வெளியில் சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் நம்பி இருப்பது ஆன்லைன் விற்பனை நிறுவனங்களைத்தான். கடந்த 2 மாத காலமாக ஆன்லைன் வர்த்தகத்தின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக வர்த்தகத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கான தன் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அமேஸான்
அமேஸான்

``உலகப் பொருளாதாரம் இந்தக் கொரோனா நோய்த் தொற்றால் வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித்துள்ளது. உலகின் எல்லா தொழிற்துறைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இந்தநேரத்தில் அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி அளவு மிகக் குறைவாக உள்ளது. அதேசமயத்தில் தேவையோ மிக மிக அதிகமாக உள்ளது.

நோய்த் தொற்றின் காரணமாக மக்கள் வெளியில் வருவதற்குப் பயந்து வீட்டுக்குள் இருக்கின்றனர். பல்பொருள் அங்காடி தொடங்கி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால். மக்கள் எங்களைப் போன்ற ஆன்லைன் நிறுவனங்களைத் தான் பெரிதும் நம்பி இருக்கின்றனர். அந்தப் பொறுப்பும் பயமும் எங்களுக்கும் இருக்கிறது.

எந்த ஒரு பொருளுமே அதே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அதே நாட்டில் விற்கப்படுதில்லை. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இன்று பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இந்த ஆண்டு இவர்கள்தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்! #VikatanPhotoCards

அந்தச் சவால்களையும் சிறப்பாகவே இதுவரை அமேசான் எதிர்கொண்டு வருகிறது. வரும் காலங்களிலும் அப்படியே செயல்பட எல்லா வகையிலும் முயன்று வருகிறோம். எங்களின் தேவை இந்த நேரத்தில் மக்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது அதிலும் வயதில் முதியவர்களுக்குத்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்களைத்தான் இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது.

நாங்கள் எங்கள் தொழில்முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறோம். ஆன்லைன் விற்பனை அவ்வளவு எளிதான காரியமல்ல... இந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து மக்களுக்குப் பணியாற்றி வருகிறோம். குறிப்பாக இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்கள் ஒருபோதும் தவறியதில்லை. இருந்தாலும் எங்கள் நிறுவனத்துக்கு இன்னமும்கூட இணைந்து பணியாற்ற ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளதால் அந்தந்த துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த கோடிக்கணக்கான ஊழியர்கள் உலகம் முழுவதும் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உலகம் இந்தக் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். அதுவரை, வேலை இல்லாமல் இருப்பவர்கள் தாராளமாக எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். நாங்கள் நல்ல சம்பளம் தருவதற்குத் தயாராக இருக்கிறோம். மீண்டும் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தற்காலிகமாக எங்களுடன் சேர்ந்து மக்களுக்கு உதவலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்

முக்கியமாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருள்கள், முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் தேவைதான் மக்களிடத்தில் மிக அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுமே கொரோனாவால் மூடப்பட்டுள்ளதால் எங்களுக்கும் மிகச் சிரமமாக உள்ளது. எங்கள் நிறுவனம் இதுபோன்ற இக்கட்டான நிலையை இதுவரை சந்தித்ததில்லை.

என்னைப் பொறுத்தவரையில் என் சிந்தனை முழுவதும் இந்தக் கொரோனா பாதிப்பைப் பற்றித்தான். இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம் என்று நினைக்கிறேன். நான் மக்களுக்கு இந்த நேரத்தில் பணியாற்ற புதிய வாய்ப்புகளைத் தேடவில்லை. மாறாக, இருக்கும் வாய்ப்புகளை மட்டும் சிறப்பாகச் செயல்படுத்த திட்டமிட்டு முயன்று வருகிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டெழுந்து வர முடியும்" என்று கூறியிருக்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு