Published:Updated:

பங்குச் சந்தையை அதிரவைத்த கொரோனா! - ஒரே நாளில் 6 பில்லியன் டாலர்களை இழந்த ஜெஃப் பெஸோஸ்

ஜெஃப் பெஸோஸ்
ஜெஃப் பெஸோஸ்

உலகின் டாப் டென் பணக்காரர்கள், நேற்றைய (மார்ச் 9) வர்த்தகத்தில் மட்டும் மொத்தமாக 37.7 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் அச்சுறுத்தல், பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. இதனால், உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டன. பங்குச் சந்தைகளின் இழப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகும் பங்குச் சந்தையான எஸ்&பி 500 (S&P500) 8% இறங்குமுகம் கண்டது. மேலும், அமெரிக்காவின் டாப் 30 கம்பெனிகளின் பங்கு வர்த்தகக் குறியீடான டவ் ஜோன்ஸ் (Dow jones) வர்த்தகத்தில் பெரிய அளவு இழப்பு ஏற்பட்டது. இதனால், உலகின் டாப் 10 பணக்காரர்கள் நேற்றைய (மார்ச் 9) வர்த்தகத்தில் மட்டும் மொத்தமாக 37.7மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

1987-ம் ஆண்டு அக்டோபர் மாத சரிவை நினைவுபடுத்தும் இந்த 9-ம் தேதி பங்குச் சந்தை வீழ்ச்சியை, `black monday' என குறிப்பிடுகிறார்கள், அமெரிக்க பங்குச் சந்தை வல்லுநர்கள். இழப்புகளின் அடிப்படையில் சொகுசுப் பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) நிறுவன சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலர் அளவுக்கு கிட்டத்தட்ட 6% சரிந்துள்ளது. இதனால், பாரிஸ் எல்விஎம்ஹெச் (LVMH) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், உலகின் மூன்றாவது செல்வந்தருமான அர்னால்ட்டின் (Arnault) சொத்து மதிப்பு 98.6 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 92.6 டாலராகச் சரிந்துள்ளது.

பங்குச் சந்தையை அதிரவைத்த கொரோனா! - ஒரே நாளில் 6 பில்லியன் டாலர்களை இழந்த ஜெஃப் பெஸோஸ்

சிஎன்பிசி நேர்காணல் ஒன்றில், உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரென் பஃபெட், `அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் நிறுவனங்களுக்கும் கொரோனா வைரஸால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிஎன்பிசி நேர்காணலில் பஃபெட், கொரோனா வைரஸை "பயமுறுத்தும் விஷயங்கள்" என்று அழைத்தார், இந்தச் சூழ்நிலை யூஎஸ்(U.S) நிறுவனங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் கூறினார். அவரது நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் (berkshire hathway) பங்குகள், கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. பிளாக் மண்டேயில் பெரிய இழப்புகளைச் சந்தித்த மூன்றாவது நபர் இவர்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மெக்ஸிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவன அதிபர் கார்லோஸ் ஸ்லிம். அவரது நிறுவனப் பங்குகள் 5 மில்லியன் டாலர்கள் அளவுக்கு சரிவைச் சந்தித்தது. இதனால் அவரது செல்வத்தில் 8% இழந்து, 56.4 மில்லியன் நிகர மதிப்புடன் அன்றைய வர்த்தக நேரம் முடிந்தது. ஸ்பெயினின் அமன்சியோ ஒர்டேகா (Amancio Ortego), கிட்டத்தட்ட 4 மில்லியன் டாலர்களை இழந்தார். ஜாரா நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டிடெக்ஸின் (inditex) நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான இவர், 67.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடையவர் இவர்.

பங்குச் சந்தையை அதிரவைத்த கொரோனா! - ஒரே நாளில் 6 பில்லியன் டாலர்களை இழந்த ஜெஃப் பெஸோஸ்

கொரோனா வைரஸ் பரவல், முன்னணி நிறுவனங்களான அல்பாபெட்டுக்கான சந்தைகளைப் பாதித்துள்ளது. மார்க் சக்கர்பெர்க் (Mark zuckerberg) மற்றும் லாரி பேஜ் (Larry page) 9-ம் தேதி வர்த்தகத்தில் மட்டும் 4.2 பில்லியன் டாலர் மற்றும் 3.3 பில்லியன் டாலர்களை இழந்தனர்.

பேஜின் சக கூகுள் கோஃபவுண்டரான செர்ஜி பிரின் (sergey brin) 3.1 பில்லியன் டாலர்களை இழந்ததால், உலகின் டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து வெளியேறினார். மைக்ரோசாஃப்ட் பங்கு மற்றும் பிற பொது மற்றும் தனியார் பங்குகளை உள்ளடக்கிய பில் கேட்ஸின் (bill gates) சொத்து மதிப்பு, அன்றைய வர்த்தகத்தில் மட்டும் 3.8 பில்லியன் டாலர் குறைந்தது. ஆரக்கிள் கார்ப்பரேஷனின் நிறுவனரான லாரி எலிசனின் (larry ellison) சொத்து மதிப்பில் 1.8 பில்லியன் டாலர்கள் சரிந்தன.

அடுத்த கட்டுரைக்கு