Published:Updated:

பெட்ரோல் விலைக் குறைப்பு முதல் புதிய டைடல் பூங்காக்கள் வரை; தமிழக பட்ஜெட்டின் டாப் 10 ஹைலைட்ஸ்!

தமிழக பட்ஜெட் 2021
தமிழக பட்ஜெட் 2021

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது 3 மணி நேர பட்ஜெட் உரையில், நலத்திட்டங்கள் குறித்தும், துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதிலுள்ள முக்கிய 10 அம்சங்களின் தொகுப்பு இதோ...

இந்தியாவின் பொருளாதாரமும், தமிழக நிதி நிலையும் மிகவும் மோசமாக உள்ள நிலையில் தாக்கல் ஆகியிருக்கிறது தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கை.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது 3 மணி நேர பட்ஜெட் உரையில், நலத்திட்டங்கள் குறித்தும், துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதிலுள்ள முக்கிய 10 அம்சங்களின் தொகுப்பு இதோ...

காகிதமில்லா பட்ஜெட்!

தமிழக பட்ஜெட் 2021
தமிழக பட்ஜெட் 2021

வரலாற்றில் முதல்முறையாக `மத்திய பட்ஜெட் 2021-2022' காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் ஆனது. அதே போன்றொரு `காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்'டைத்தான் தமிழக அரசும் தற்போது முன்னெடுத்திருக்கிறது. இதற்கான கணிணிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அமைப்புகள் கலைவாணர் அரங்கத்தில் பொருத்தப்பட்டிருந்தன. நிதி அமைச்சரும் டேப்லெட் திரையைப் பார்த்தபடி பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2021: Live Updates: ``பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு!"

இந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால், இது ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையாகவே இருக்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதே போன்றொரு பட்ஜெட் உரையாகத்தான் இந்த திருத்த பட்ஜெட் உரையும் அமைந்திருந்தது.

பெட்ரோல் விலை குறைப்பு!

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை அதிகரிப்பால், அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த செய்தி ஆறுதலாக இருக்கும். ஏனெனில், தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3-ஐ குறைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் வருவாயில் ஒவ்வொரு வருடமும் ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்றாலும், உழைக்கும் வர்க்கத்தினர் பயன்படும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது. இருப்பினும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் குறைப்பதாக தேர்தல் வாக்குறுதிகளில் தி.மு.க அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்காரச் சென்னை 2.0!

தற்போதைய சென்னையை பசுமை சென்னையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுவரொட்டிகள் இல்லா நகரமாகவும் மாற்றப்படும். இதற்காக சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும். சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி!

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி அளவில் கோவிட் கால கடன் வழங்குவது உறுதி செய்யப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஊரக வளர்ச்சி
ஊரக வளர்ச்சி

ஊரக வளர்ச்சி!

79,375 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை. 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் அனைத்து கிராம மக்களுக்கும் குடிநீர் இணைப்பு. இதற்காக ரூ.2,000 கோடி செலவில் `ஜல்ஜீவன் இயக்கம்' செயல்படுத்தப்படும். அண்ணா மறுமலர்ச்சி இயக்கம் மீண்டும் தொடங்கப்படும். கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதை இத்திட்டம் உறுதிசெய்யும் என பட்ஜெட் வாயிலாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கார்டு மற்றும் கடைகள்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் தேவையுள்ள இடங்களில், புதிய ரேஷன் கடைகள் அமைத்துத் தரப்படும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்காக பயனாளிகளைத் தேர்வு செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதையடுத்து பலரும் குடும்ப அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவராக மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள்.

தமிழகத்தில், இன்று முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது!
தமிழகத்தில், இன்று முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது!

ஆனால், இது தேவையற்றது.பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற செய்தி தவறானது. குடும்பத் தலைவரின் புகைப்படத்தை மக்கள் மாற்றம் செய்ய வேண்டாம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல, இல்லத்தரசிகளுக்கான உதவித்தொகை நிச்சயமாக அவர்களை வந்து சேரும். தமிழக குடும்பங்களின் நிதிநிலை விவரங்களை திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரியான நபர்களுக்கு இந்த ரூ.1,000 உதவித் தொகையும் போய் சேரும் என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கல்விக்கு முக்கியத்துவம்!

ஆன்லைன் கல்வி
ஆன்லைன் கல்வி

மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் 77.88% நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் பின்னடைவை சரிசெய்வதே தமிழக அரசின் முன்னுரிமை என பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக கல்வி தொடர்பான திட்டங்களுக்கு மொத்தம் ரூ.32,599 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில் பூங்காக்கள்!

தொழில்துறை
தொழில்துறை

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடி செலவில் புதிய நிதிநுட்ப நகரம் (Fin-tech City) உருவாக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் அமைந்து நெய்வேலியில் தொழில்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்காவும், திருவள்ளூரில் மின்வாகனப் பூங்காவும், மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனத்தில் உணவுப் பூங்காவும், ராணிப்பேட்டையில் தோல் பொருள் தயாரிப்பு பூங்காவும் அமைக்கப்படும், விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

அதிமுக இமேஜை காலி செய்கிறதா தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை?!

கோவையில் ரூ.225 கோடி செலவில் பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி பூங்காவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், திருவண்ணாமலை, தேனி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் நிதி நிலை!

முதல்வர் ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் பி.டி.ஆர்
முதல்வர் ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் பி.டி.ஆர்

நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டின் மொத்த வருவாய் ரூ.2,18,991 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.50 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல 2021-2022-ம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

`வெள்ளை அறிக்கை' - அதிமுக ஆட்சியின் ஆவணப்படமா, திமுக ஆட்சியின் வரி வசூலுக்கான ட்ரெய்லரா?

வணிக வரி, பத்திரப்பதிவு, மோட்டார் வாகன வரி போன்ற துறைகளில் வரி சீரமைப்பை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருகிற நிதி ஆண்டில் இந்தத் துறையின் மூலம் வரி வருவாயை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வோரைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

போக்குவரத்து மற்றும் மெட்ரோ!

மெட்ரோ
மெட்ரோ

ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் புதிய பேருந்துகளை வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்கீழ் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க ரூ.703 கோடி மானியமாகவும், ரூ.750 கோடி டீசல் மானியமாகவும் வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் - `எங்களுக்குக் கிடைத்த வெற்றி... அது பழைய கோரிக்கை' - பாமக Vs திமுக!

கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான புறவழி மெட்ரோ சேவை அடுத்த 4 ஆண்டுகளுக்குள் தொடங்கும். அதே போல கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ பணிகள் தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்த ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு