Published:Updated:

92 நாள்களில் ரூ.128 கோடி மோசடி! - நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு பயனாளர்களுக்கு எச்சரிக்கை

டெபிட், கிரெடிட் கார்டு... கொள்ளை

கிட்டத்தட்ட 94.52% மோசடிகள் நடந்துள்ளன. 11,508 மோசடி வழக்குகளும் உள்ளன.

92 நாள்களில் ரூ.128 கோடி மோசடி! - நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு பயனாளர்களுக்கு எச்சரிக்கை

கிட்டத்தட்ட 94.52% மோசடிகள் நடந்துள்ளன. 11,508 மோசடி வழக்குகளும் உள்ளன.

Published:Updated:
டெபிட், கிரெடிட் கார்டு... கொள்ளை

பெருகிவரும் தொழிநுட்ப வளர்ச்சிகளால் நன்மைகளும் தீமைகளும் சரிசமமாக உள்ளன. நம்மிடம் இருந்து நமக்கே தெரியாமல் நம் தகவல்களைச் சேகரிக்கிறார்கள் தொழில்நுட்பத்தின் மூலமாக. கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit card) மற்றும் நெட் பேங்கிங் (Net banking) மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் 128 கோடி மோசடி செய்திருக்கிறார்கள் சைபர் குற்றவாளிகள். 2019-ம் ஆண்டு இறுதியில், மொத்தம் 21,041 மோசடிகள் நடந்துள்ளன. ஒவ்வொரு நிமிடமும் ஆறு வழக்குகள் பதியப்படுகின்றன.

இதுபற்றி இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்கள்படி, இந்த 92 நாள்களில், அதிக அளவிலான மோசடி ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாகத்தான் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 94.52% மோசடிகள் நடந்துள்ளன. 11,508 மோசடி வழக்குகளும் உள்ளன. இதைத் தொடர்ந்து 6,117 கிரெடிட் கார்டு மோசடிகள் ரூ.197 கோடி மற்றும் ரூ.3.6 கோடி சம்பந்தப்பட்ட 3,866 நெட் பேங்கிங் மோசடிகளும் நடந்துள்ளன.

ஸ்கிம்மர் மூலம் மோசடி
ஸ்கிம்மர் மூலம் மோசடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிகள் சென்ற ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை ரூ.101 கோடிகளை மோசடிகள் மூலம் இழந்துள்ளன. ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2019 வரை ஒன்பது மாதங்களுக்குள் சைபர் குற்றவாளிகள் ரூ.230 கோடிகள் மோசடி செய்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு வருடங்களில் ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2019 வரை மொத்தமாக 547 கோடி ரூபாய், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் மோசடிகள் பதிவாகியுள்ளன.

சைபர் க்ரைம் நிபுணர் மிர்சா பைசான் ஆசாத் (Mirza faisan azad) கூறியதாவது, ``இந்த மோசடிகள் எல்லாம் ஏ.டி.எம் ஸ்கிம்மர்ஸ் என்னும் சிறிய கருவியை ஏ.டி.எம்மில் பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை இன்டெர்க்கிரேடட் மேக்னெட்டிக் ஸ்ட்ரிப் ரீடர் (Integrated magnetic stripe reader) மூலமாகத் திருடி, இம்மோசடிகளைச் செய்கிறார்கள். இந்த ஏ.டி. எம். ஸ்கிம்மர்களில் ரகசிய கேமராக்களும் உண்டு, இது வாடிக்கையாளரின் பின் (pin)-ஐ கண்காணிக்கும். இதன் மூலம்தான் இம்மோசடிகள் நடைபெறுகின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism