Published:Updated:

இம்முறை அதிக அபராதம்; நாளையே கடைசி நாள்... வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா?

வருமான வரி
வருமான வரி

வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சம்பளதாரர்கள், தொழில்முனைவோர்கள் என அனைவரும் பொருளாதார ரீதியான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக இந்திய அரசு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்களையும் அறிவித்திருந்தது. அந்த வகையில் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் பல முறை நீட்டித்திருந்தது.

 Income tax
Income tax

இதன் காரணமாக, ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில் பெற்ற வருமானத்துக்கான வரி விதிப்புகளைத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு வருடமும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

கொரோனா பேரிடர் காலத்தை காரணம் காட்டிக் கொடுக்கப்பட்ட இந்த கால அவகாசத்துக்குள், வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், ஜனவரி மாதம் முதல் கூடுதல் அபராதம் மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என வருமான வரித்துறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமான வரி...  புதிய முறை Vs பழைய முறை - உங்களுக்கு ஏற்றது எது?

"வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளுக்கு மட்டுமே ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை கணக்கு தேவைப்படாதவர்கள் தங்கள் வரியை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் ஜனவரி முதல் அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யவேண்டும்” என்று வருமான வரித்துறை இதுகுறித்துத் தெரிவித்துள்ளது.

வருமான வரி
வருமான வரி

எப்போதுமே தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, வருமான வரித்துறை 5,000 ரூபாயை அபராதமாக விதிக்கும். ஆனால், இந்த முறை, டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, செய்யப்படும் வரித்தாக்கல் அறிக்கைக்கு அதிக அபராதக் கட்டணத்தை வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்.

நீங்கள் மார்ச் 31, 2021-ம் தேதியும் வருமான வரி செலுத்தவில்லை எனில், அபராதமாக உங்கள் வருமானத்துக்கு 50% வரையிலான வரி விதிக்கப்படும். மேலும், டிசம்பர் 31-ம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால், வருமான வரித்துறை வழங்கும் பல்வேறு சலுகைகளை இழக்க நேரிடும். அதனால் நாளை வியாழக்கிழமைக்குள் வருமான வரியை செலுத்திவிடுவது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு