Published:Updated:

பிட்காயினுக்கும் வரி விதிக்க தயாராகிறதா மத்திய அரசாங்கம்? அதிர்ச்சியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள்

இந்திய அரசு கிரிப்டோகரன்சி முதலீட்டை அதிகாரபூர்வமாக அனுமதிப்பது குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி தொடர்பான இறுதி சட்டவரைவுகளைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிட்காயின் முதலீடு குறித்த பேச்சுகள், கொரோனா வைரஸைவிட, மிக வேகமாகப் பரவின. ஏனெனில், 2011-ல் ஒரு அமெரிக்க டாலர் மதிப்புடன் மட்டுமே வர்த்தகமாகி வந்த ஒரு பிட்காயினின் தற்போதைய விலை 68,043.16 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50.33 லட்சம். அதே போல ஷிபா இனு, டோஜ்காயின், எதிரியம் போன்ற பல கிரிப்டோகரன்சிகள் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே பல நூறு சதவிகிதம் விலை உயர்ந்திருக்கின்றன.
Bitcoin (Representational Image)
Bitcoin (Representational Image)

இந்தியாவில் 10.7 கோடி பேர் முதலீடு!

கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் பல கோடி பேர் கிரிப்டோ கரன்சி முதலீடுகளில் களமிறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவில்தான் அதிக பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. `BrokerChooser' என்கிற அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த ஆய்வின்போது, `உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கிறார்கள்' என்று சொல்லியிருக்கிறது.

சந்தை மதிப்பு - 3 டிரில்லியன் டாலர்!

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தபோது, தங்கமும், கிரிப்டோகரன்சி முதலீடுகள் மட்டும் அதிகமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது ஒரு காரணம் என்றாலும், ஒரு சில ஆண்டுகளில் வேறெந்த முதலீடுகளும் கொடுக்காத லாபத்தை கிரிப்டோகரன்சி முதலீடுகள் கொடுத்திருப்பதும் மக்களை அதன் பக்கம் ஈர்த்திருக்கிறது. இதன் காரணமாகப் பல கோடி பேர் இந்த முதலீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.

பிட்காயின் - சந்தை மதிப்பு
பிட்காயின் - சந்தை மதிப்பு
coinmarketcap.com

சில ஆயிரங்கள் முதல் பல லட்சம் வரை இதில் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உலக அளவிலான கிரிப்டோகரன்சி முதலீடுகளின் மொத்த சந்தை மதிப்பு (Market capitalization) சுமார் 3 டிரில்லியன் டாலரைத் தொட்டிருக்கிறது. இதில் பிட்காயின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் மட்டும் 1.28 டிரில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 283.47 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.

இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
பிக்பாஸாக மாறும் ‘பிட்காயின்!’
மாயவலையா... மாபெரும் லாபமா?

இந்திய அரசு கிரிப்டோகரன்சி முதலீட்டை அதிகாரபூர்வமாக அனுமதிப்பது குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி தொடர்பான இறுதி சட்டவரைவுகளைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகள் தடை செய்யப்படும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், பல கோடி இந்தியர்கள் அதிக அளவிலான தொகையை கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பதால், கிரிப்டோகரன்சியைத் தடாலடியாகத் தடை செய்ய முடியாத நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பிட்காயின்
பிட்காயின்
`SQUID GAME' கிரிப்டோ மோசடி, மாயமாய் மறைந்த பல கோடி... நடந்தது என்ன?!

அதே சமயம், ஒரு வரையறைக்குள் வராத இந்தக் கிரிப்டோகரன்சி முதலீட்டை அதிகாரபூர்வ முதலீடாக அறிவிக்கவும் முடியாது. அதனால், இந்திய அரசு இந்த இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்கிற கருத்து நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் கிரிப்டோகரன்சியை அதிகாரபூர்வ முதலீடாக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் இந்த முதலீட்டின் மீது வரி விதிப்பு குறித்த முடிவுகளை நிதி அமைச்சகம் எடுக்கும் என்றும், அதனால் மற்ற முதலீடுகளைப் போல, கிரிப்டோகரன்சி முதலீடுகளின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு வரி விதிப்பு கட்டாயம் இருக்கும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், பிட்காயின் மூலம் கொளுத்த லாபம் கண்டவர்கள், அதை விற்கும்போது வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்!

Note: இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை (பிட்காயின், எதீரியம் போன்றவை) அங்கீகரிக்கவில்லை. கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக எந்த வரையறையும், விதிமுறைகளும் இதுவரை வகுக்கப்படவில்லை. இந்நிலையில், விகடன்.காம் தளத்தில் கிரிப்டோகரன்சி குறித்து வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிடப்படுகிறது. எனவே கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதுகுறித்த முடிவை, இந்த எச்சரிக்கைகளையும் மனதில் வைத்தே எடுக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு