மக்களுக்கான தேவையும், அதில் தனித்துவமான விற்பனை யுக்தியும்தான் பிசினஸ் வெற்றிக்கான வரவேற்பறை. பாலில் இருந்து மதிப்புக்கூட்டல் செய்து தயாரிக்கப் படும் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டிக்கான தேவையும் வரவேற்பும் தற்போது சிறப்பாக இருக்கிறது. வீட்டுத் தேவைக்கும், உணவகப் பயன்பாடுகளுக்கும் தினசரித் தேவை அதிகளவில் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரியாகக் கணித்து சீஸ் தயாரிப்பில் இறங்கிய பரத் பண்டாரி, வெற்றி கரமான தொழில் முனைவோராக சாதித்திருக்கிறார்.

தினமும் 2,000 கிலோ சீஸ் உற்பத்தி செய்பவர், இதிலிருந்து மீதமாகும் பொருளிலிருந்து நெய் தயாரித்து அரேபியன் வகை இனிப்புகளைத் தயாரித்தும் விற்பனை செய்து அசத்துகிறார். சென்னையிலுள்ள ஸ்வீட் தயாரிப்புக்கூடத்தில் நாம் பரத்தைச் சந்தித்தோம்.

லண்டனில் சரவணபவன்!

“என்னுடையது பிசினஸ் குடும்பம். தாத்தாவும் அப்பாவும் ஆட்டோ மொபைல் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தாங்க. சின்ன வயசுல இருந்தே அவங்க தொழில்ல கவனம் செலுத்தினதால எனக்கும் பிசினஸ் ஆர்வம் ஏற்பட்டுச்சு. ஸ்கூல் படிப்பை முடிச்சதும், லண்டன்ல பிசினஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிச்சேன். முன்னணி ஆயில் நிறுவனத்தின் விநியோகஸ்தரா என்னோட தனிப்பட்ட முறையிலான பிசினஸ் பயணத்தைத் தொடங்கினேன். அடுத்து, லண்டன்ல ஹோட்டல் சரவணபவன் ரெஸ்டாரன்ட் கிளையை பார்ட்னர்ஷிப் முறையில ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் கழிச்சு அந்த ரெஸ்டாரன்ட்டை இன்னொருவருக்கு வித்துட்டு, சென்னை வந்துட்டேன்.

மும்பையைத் தலைமையிடமா கொண்டு செயல்படுற ‘க்ரீம் சென்டர்’ங்கிற ரெஸ்டாரன்ட் கிளை களை, பார்ட்னர்ஷிப் முறையில சென்னையில ஆரம்பிச்சேன். அடுத்த சில வருஷத்துல அந்த உணவகத்தின் நாலு கிளைகளும் பெரிய அளவுல வளர்ந்துச்சு. இதுக்கிடையேதான், அந்த ரெஸ்டாரன்டுக்கு வட மாநிலங்கள்ல இருந்து தரமான சீஸ் வாங்கிட்டு இருந்தோம். திடீர்னு ஒருமுறை சீஸ் கிடைக்கிறதுல தடங்கல் ஏற்பட்டுச்சு. அதனால, வேறு இடத்துல சீஸ் வாங்கிப் பயன்படுத்தினோம். ஆனா, அந்த சீஸின் தரம் சரியா இல்லைனு விமர்சனம் வந்துச்சு.உணவுத் துறையைப் பொறுத்தவரை, விற்பனை செய்ற ஒவ்வோர் உணவுப் பொருளின் தரமும் சரியா இருந்தால்தான் நம்ம தயாரிக்கிற உணவின் சுவையும் தரமும் சிறப்பானதா இருக்கும்.

திடீர் சிக்கலும்... சீஸ் தயாரிப்பு யோசனையும்!

இந்த இக்கட்டான நேரத்துல, தென்னிந்தியாவுல நாங்க எதிர்பார்த்த தரத்துல யாருமே சீஸ் தயாரிக்கல. இதனால, சொந்தமா சீஸ் தயாரிச்சுக்கலாம்னு முடிவெடுத்தேன். இது எனக்குப் புது பிசினஸ் களம்ங்கிறதால, முறையான அனுபவத்துடன் 2012-ம் வருஷம் ஒரு நாளைக்கு 5 - 10 கிலோதான் சீஸ் தயாரிச்சோம். அதை எங்க ரெஸ்டாரன்ட்டுல பயன்படுத்தினோம். நல்ல ஃபீட்பேக் கிடைச்சது.

அதே நேரத்துல எங்களோட சீஸ் தயாரிப்பைத் தெரிஞ்சுகிட்டு, மற்ற சில நிறுவனங்களும் ஆர்டர்கள் கொடுத்தாங்க. படிப்படியா உற்பத் தியை அதிகரிச்சு, எங்க தேவைக்குப் போக, ‘இண்டிஸ்கா மேஜிக்’ங்கிற (Indiska magic) பிராண்ட் பெயர்ல சீஸ் விற்பனையையும் தொடங் கினோம்.

உணவகம், சீஸ் தயாரிப்பு பிசினஸ் ரெண்டுமே நல்லபடியா போயிட்டிருந்த நிலையிலதான், திடீர்னு பெரிய சரிவு ஏற்பட்டுச்சு” என்று பீடிகையுடன் இடைவெளி விடுகிறார் பரத்.

சென்னை டு தடா...

சென்னையில் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பரத்தின் சீஸ் தயாரிப்புக்கூடம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உற்பத்தியும் தடைப்பட்டு பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டிருக்கிறார். அதன் பிறகு, சமயோஜிதமாகச் செயல்பட்ட பரத், ஆந்திரா மாநிலம் தடாவில் சீஸ் தயாரிப்புக்கான புதிய உற்பத்திக் கூடத்தைத் தொடங்கியிருக்கிறார்.

“பெருவெள்ளத்தால ஏற்பட்ட சிக்கல் களுக்குப் பிறகு, மறுபடியும் உற்பத்தியை அதிகப்படுத்தினோம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருளான சீஸ் பயன்பாடு பத்தின விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கிச்சு. எனவே, எங்க உணவகங்களுக்கான தேவையுடன், கூடுதலா சீஸ் தயாரிச்சு பெரிய அளவுல விற்பனை செய்ய முடிவெடுத்தேன்.

சீஸ் தயாரிப்புக்குத் தரமான பால் தேவை. ஆந்திரா மாநிலம் தடா பகுதியில மாடுகள் மேய்ச்சல் முறையில வளர்வதால, அங்க தினமும் அதிகளவுல பால் கிடைக்கும்னு தெரிஞ்சது. சென்னை பெருவெள்ளம் கொடுத்த படிப்பினை களால, இந்தத் தொழிலுக்கான எல்லாத் தேவைகளையும் முறையா தெரிஞ்சுகிட்டு, இயற்கை சீற்றங்களால உற்பத்தி பாதிக்காத வகையில தடாவுல புது உற்பத்திக்கூடத்தை மூணு வருஷத்துக்கு முன் தொடங்கினேன். நீண்டகாலமா சீஸ் தயாரிப்பிலும், உணவுத் துறையிலும் இருக்கிறதால, வாடிக்கையாளர்களோட எதிர்பார்ப்பைச் சரியா புரிஞ்சுக்க முடிஞ்சது.

ஒருகட்டத்துல என்னோட நாலு உணவகங்களையும் இன்னொருவருக்கு வித்துட்டேன். பிறகு, தரமான சீஸ் தயாரிப்புக்குச் சிறப்பான விற்பனை வாய்ப்பு இருக்கிறதால, முழுமையா இந்தத் துறையிலேயே கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இப்போ ஒரு நாளைக்கு ரெண்டு டன் அளவுக்கு சீஸ் உற்பத்தி செய்யுறோம். இதுக்காக, தடா சுத்து வட்டாரத்துல மேய்ச்சல் முறையில மாடுகளை வளர்க்கும் விவசாயிகள்கிட்ட இருந்து ஏறத்தாழ 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்றோம்.

ஸ்வீட் விற்பனையும் ஜோர்!

சீஸ் தயாரிப்பு வேலைகளுக்கு இடையே, அரேபியன் இனிப்பு களுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டு ஸ்வீட் விற்பனையையும் ஆரம்பிச்சேன். சில வருஷத்துக்கு முன்னாடி வரை பண்டிகை, விழாக்களுக்கு ஆர்டரைப் பொறுத்துதான் ஸ்வீட் தயாரிச்சு விற்பனை செஞ்சேன்.

அரேபியன் இனிப்புகளுக்கு நகரப் பகுதியில வரவேற்பு அதிகரிச்சுகிட்டே இருக்கு. சென்னையில சாட்ஸ் மற்றும் வட இந்திய உணவுகளுக்கான ஸ்பெஷாலிட்டி உணவகம் ரெண்டை ஆரம்பிச்சு, அதுல அரேபியன் இனிப்பு வகை களையும் அதிக அளவுல விற்பனை செய்றோம். இதுக்காக, இந்த வகை ஸ்வீட் தயாரிப்புல அனுபவமுள்ள எகிப்தைச் சேர்ந்த செஃப் எங்க நிறுவனத்துல வேலை செய்றார்.

ஸ்வீட் தயாரிப்புக்குத் தரமான நெய் தேவை. இது எங்களுக்கு எளிதா கிடைக்குது. சீஸ் தயாரிப்புல கடைசிக் கட்டத்துல மீதமாகும் தண்ணீரைப் பலரும் வீணாக்கிடுவாங்க. அந்தத் தண்ணியில 0.5 சதவிதத்துக்கும் குறைவான அளவுல கொழுப்புச் சத்து இருக்கும். பிரத்யேகமான உபகரணம் மூலம், அந்தக் கொழுப்பைச் சேகரிச்சு அதுல நெய் தயாரிக்கிறோம். 1,000 லிட்டர் சீஸ் தண்ணீர்ல 5 லிட்டர்தான் நெய் கிடைக்கும். ஆனா, சீஸ் தண்ணீர்ல இருந்து கிடைக்கும் நெய்யின் தரம், பால்ல இருந்து நேரடியா தயாரிக்கும் நெய்யைவிட ரொம்பவே தனித்துவமா இருக்கும். ஒரு நாளைக்கு 50 லிட்டர் நெய் கிடைக்குது. சுவை, மணம், சத்துனு எல்லா வகை யிலும் ரொம்பவே சிறப்பானதா இந்த நெய் இருக்கும்.

எங்க தடா ஃபேக்டரியிலயே கொத்தமல்லி, மிளகு, இஞ்சி, மிளகாய் உள்ளிட்ட சில வகை பயிர்களையும் இயற்கை விவசாய முறையில வளர்க்கிறோம். வெறும் சீஸுடன், இந்த விளை பொருள்களையும் சேர்த்து வித்தியாசமான ஃப்ளேவர் கள்லயும் சீஸ் தயாரிக்கிறோம். மேலும், சீஸ் பயன்படுத்தி பல்வேறு இனிப்புகளையும் தயாரிக்கிறோம்.

கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட சீஸ் தண்ணீரை நேரடியா பயிர் வளர்ச்சிக்குப் பயன்படுத்துறோம். இதனால, பயிரின் வளர்ச்சியும் சிறப்பானதா இருக்குது. எங்க தேவைக்குப் போக நெய்யை தனியாவும் விற்பனை செய்றோம்” என்கிறார் புன்னகையுடன்.

பரத்தின் நிறுவனத்தில் இருந்து, சென்னையிலுள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல் களுக்கு சீஸ் சப்ளை செய்யப் படுகிறது. தவிர, சென்னை, பெங்களூரிலுள்ள பல்வேறு உணவகங்கள், சூப்பர் மார்க்கெட் அங்காடிகளுக்கும் சீஸ் சப்ளை செய்பவர், 100 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக் கிறார். ஆண்டுக்கு 25 கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் பரத், கால மாற்றத்துக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப புதிய பிசினஸ் வாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

உழைப்பு வீண்போகாது!

“கோவிட் டைம்ல உற்பத்தியிலும், போக்குவரத்துப் பிரச்னைகளால விற்பனையிலும் பெரிய சிரமம் இருந்துச்சு. அதெல்லாம் இப்போ சரியாகி பிசினஸ் ரொம்பவே வேகமெடுத்திருக்கு. தரமான பொருள்களைக் கொடுத்தா, மக்கள் எப்போதும் நம்மள விட்டுப் போக மாட்டாங்க. அதுக்காக மெனக்கெட்டு உழைக்கணும்.

இந்தத் தொழில் பயணத்துல ஏற்ற இறக்கம், லாப நஷ்டம் எது வந்தாலும், நம்ம உழைப்பு ஒருபோதும் வீண்போகாது. நிச்சயம் வெற்றிப் பாதை வசமாகும். அந்த வகையிலதான் நானும் வெற்றி பெற்றிருக்கேன்” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார் பரத்.