Published:Updated:

தமிழகத்தின் பிற நகரங்கள் நோக்கி நகரும் தொழில் வாய்ப்புகள்... சென்னை இனி?

தொழில் வாய்ப்புகள்
தொழில் வாய்ப்புகள்

இனி ஐ.டி தொழில் சென்னையைவிட்டுச் சென்றுவிடவே வாய்ப்பு அதிகம். ஐ.டி தொழில் மட்டுமல்ல, உற்பத்தி சார்ந்த வேறு தொழில்களும் சென்னை தவிர, பிற நகரங்களையும் நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றன.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 50% அளவுக்கு சென்னையை மையமாகவைத்தே நடந்துவந்தது. மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளெல்லாம் சென்னையைச் சுற்றியே அமைக்கப்பட்டுவந்தன. இதனால், சென்னையில் மட்டும் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சென்னையை நோக்கிவரும் நிலை ஏற்பட்டது.

துறைமுகம், விமான சேவை போன்ற வசதிகள் சென்னையில் இருந்ததால், பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெரும்பாலான தொழில்கள் சென்னையை மையமாக வைத்தே நடந்தன. ஆனால், இன்று கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் சென்னையைவிட்டுச் சென்று பல்வேறு நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தமிழக தலைவரும் டான்பாஸ் நிறுவனத்தின் தலைவருமான ரவிச்சந்திரன் புருஷோத்தமனிடம் சென்னையின் தொழில் சூழல் குறித்துக் கேட்டோம். "கோவிட் 19-க்குப் பிறகு சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் வேண்டுமானால் சென்னையைவிட்டு இடம்பெயரலாம். உதாரணமாக, ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த நிறுவனங்கள்.

ஆனால், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சென்னையைவிட்டு பெரிய அளவில் செல்வதற்கு வாய்ப்பு குறைவு. இதற்குக் காரணம், சென்னையிலிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள். எல்லா நகரங்களுக்கும் போய் வருவதற்கேற்ப சாலை வசதிகள், விமான நிலையம், துறைமுகம் அமைந்திருப்பது, ஐ.ஐ.டி, லெதர் இன்ஸடிட்யூட் போன்ற ஆய்வு நிறுவனங்கள் இருப்பதால் ஆர் அண்ட் டி வசதிகள் இருப்பது, திறமையான நபர்கள் அதிக அளவில் வேலைக்குக் கிடைப்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கேற்ற சூழல் இருப்பது எனப் பல அம்சங்கள் சாதகமாக உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களும் சென்னையில் தொழில் தொடங்கவே விரும்புகின்றன. எனவே, குறுகியகாலத்தில் எல்லா நிறுவனங்களும் சென்னையைவிட்டுச் சென்றுவிட வாய்ப்பில்லை" என்றார்.

அதேவேளையில், ஐ.டி தொடர்பான பணியாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இந்த நிலை தொடர்கிறது. இன்னும் சில மாதங்கள் இதே நிலைமை தொடரும்பட்சத்தில், இனி ஐ.டி தொழில் சென்னையைவிட்டுச் சென்றுவிடவே வாய்ப்பு அதிகம். ஐ.டி தொழில் மட்டுமல்ல, உற்பத்தி சார்ந்த வேறு தொழில்களும் சென்னை தவிர, பிற நகரங்களையும் நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றன.

இன்டர்நெட் வசதி அதிகரித்திருப்பது, சாலை வசதிகள் மற்றும் மின் கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பது, தரமான பள்ளி, கல்லூரிகள் எல்லா நகரங்களிலும் இருப்பது போன்ற காரணங்களால் இனி சென்னையில் மட்டும்தான் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைச் சிறப்பாக நடத்த முடியும் என்ற நிலை மாறியிருக்கிறது.

தொழில் வாய்ப்புகள்
தொழில் வாய்ப்புகள்

இத்தனை நாளும் சென்னைக்குக் கிடைத்துவந்த தொழில் வாய்ப்பு, இனி தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் கிடைக்கப்போகிறது. என்றாலும், ஒவ்வொரு நகரத்திலும் என்னென்ன புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலுள்ள தொழில்துறை சார்ந்தவர்களிடம் பேசினோம்.

> மதுரையைச் சுற்றி..! : வாய்ப்புகளுக்குக் காத்திருக்கும் நெல்லை!

> மைய நகரம் திருச்சி!

> கோவைக்குப் புதிய வாய்ப்புகள்!

> மதிப்புக்கூட்டலுக்கு ஏற்ற ஈரோடு!

> சகல தொழிலுக்கும் ஏற்ற சேலம்!

- இந்த ஐந்து நகரங்களின் தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக நாணயம் விகடன் இதழ் கட்டுரையை வாசித்து அறிய க்ளிக் செய்க.. > பை பை சென்னை... வரவேற்கும் பிற நகரங்கள்..! - கொரோனாவுக்குப் பிறகு தொழில்..! https://bit.ly/31Odcjd

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

பை பை சென்னை... வரவேற்கும் பிற நகரங்கள்..! - கொரோனாவுக்குப் பிறகு தொழில்..!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு