Published:Updated:

Fact Check: காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மாநில அரசுதான் காரணமா? உண்மை என்ன?

காஸ் சிலிண்டர்
News
காஸ் சிலிண்டர்

காஸ் சிலிண்டர் விலையில் ஒன்றிய அரசின் வரி 5% மட்டும்தான் என்றும், மாநில அரசின் வரி 55% என்றும் விவரங்களுடன் ஒரு செய்தி பல மாதங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை மாதம் மாதம் உயர்ந்துகொண்டே இருப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்த விலை உயர்விற்கு யார் காரணம் என்கிற விவாதம் எழும்போது, மாநில அரசுகள் மட்டுமே அதற்கு முழுக் காரணம் என குற்றச்சாட்டும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

`இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நிர்ணயிப்பதில், அடிப்படை விலை ரூ.495, மத்திய அரசின் வரி ரூ.24.75 மற்றும் போக்குவரத்து செலவுடன் ரூ.529.75. அதனுடன் மாநில வரியாக ரூ.291.36, மாநில போக்குவரத்து ரூ.15, டீலர் கமிஷன் ரூ.5.50 மற்றும் மானியம் ரூ.19.57 என சேர்த்து மொத்தமாக 861.18 ரூபாயாக பயனாளர்களுக்கு வந்துசேர்கிறது. இதில், ஒன்றிய அரசின் வரி 5% மட்டுமே, மாநில அரசின் வரி 55%' என்கிற விவரங்களுடன் ஒரு செய்தி பல மாதங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

சமூக வலைதளத்தில்  பகிரப்பட்ட செய்தி
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட செய்தி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஸ் சிலிண்டர் விலை நிர்ணயத்தில் இருக்கும் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள முற்பட்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒன்றிய அரசு 5% வரி விதிப்பதாகவும், மாநில அரசு 55% வரி விதிப்பதாகவும் பரப்பப்படும் தகவல் பொய்யானது எனத் தெரிய வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் போல் இல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப்படுகிறது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய ஜி.எஸ்.டி - 2.5% மற்றும் மாநில ஜி.எஸ்.டி - 2.5% என இரண்டும் சேர்ந்து மொத்தம் 5% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. வீட்டு பயன்பாடு இல்லாத வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசுக்கென்றும், மாநில அரசுக்கென்றும் தனிப்பட்ட வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

வரி பங்கீடு
வரி பங்கீடு

மேலும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டிருந்த `Snapshot of India's Oil & Gas data - November, 2021' பட்டியலிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடுதலாக வேறு வரிகள் இல்லை என்பதையும் இதில் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.