Published:Updated:

மீண்டும் ₹100-ஐத் தொட்ட பெட்ரோல் விலை; கச்சா எண்ணெய் விலை மட்டும்தான் காரணமா?

கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தபோது மத்திய அரசு அதிக வரி விதித்திருந்தது. அப்போது விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியில் ஒரு சிறு சதவிகிதத்தை நீக்கினால்கூட எரிபொருள் விலை குறையும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. கடந்த மே மாதத்தில் நூறு ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலையில் தி.மு.க அரசு ரூ.3 குறைத்தது. அதனால் 100 ரூபாய்க்கு சற்று கீழ் குறைந்த பெட்ரோல் விலை, படிப்படியாக அதிகரித்து தற்போது 100 ரூபாயைத் தமிழகத்தின் பெரும் பகுதிகளில் கடந்துள்ளது.

Petrol
Petrol
Photo: Vikatan / K.Rajesekaran

இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை 104 ரூபாய்க்கும் மேல் உள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் 109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையும் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் 92 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை, நூறு ரூபாய்க்கு சற்றுக் குறைந்து ரூ.99.55 ஆக விற்பனையாகிறது. மாநிலங்களுக்கிடையே விலை வேறுபடுவதற்கு அந்தந்த மாநில அரசு விதிக்கும் வரி காரணமாக இருக்கிறது.

இந்த விலை ஏற்றத்துக்கு மிக முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் சொல்லப்படுகிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 81 டாலராக உள்ளது. சென்ற ஆண்டு கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் கச்சா எண்ணெய் விலை இருமடங்கு தற்போது உயர்ந்துள்ளது.

oil refinery
oil refinery
AP / Gregory Bull
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

2011 முதல் 2015-ம் ஆண்டு வரை கச்சா எண்ணெய் விலை சராசரியாக 95 டாலராக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 80 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது. அந்தக் காலகட்டத்தோடு ஒப்பிட்டால் கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்தே உள்ளது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பெட்ரோல் விலை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமையலுக்குப் பயன்படும் சிலிண்டர் விலையும் இந்த மாதத் தொடக்கத்தில் 15 ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது 14.2 கிலோ எடை உள்ள இண்டேன் நிறுவனத்தின் ஒரு சிலிண்டரின் விலை ரூ.915.50 ஆக உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஆகிய அனைத்தும் கடந்த காலங்களுடன் ஒப்பிட்டால் புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

Gas Cylinder | கேஸ் சிலிண்டர்
Gas Cylinder | கேஸ் சிலிண்டர்
Photo: Vikatan / Muthuraj.R.M
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! - 18/10/2021

எரிபொருள் விலை என்பது பணவீக்க விகிதத்தோடு நெருங்கிய தொடர்புடைய காரணி ஆகும். பொருள்களை ஏற்றிச்செல்லும் செலவினங்கள் அதிகரிப்பதால் அனைத்துப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு வரியைக் குறைத்து எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சாமானிய மக்களின் வேண்டுகோளாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தபோது மத்திய அரசு அதிக வரி விதித்திருந்தது. அப்போது விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியில் ஒரு சிறு சதவிகிதத்தை நீக்கினால்கூட எரிபொருள் விலை குறையும். மக்களின் சிரமத்தைப் போக்குவதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு