ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனம். இந்த நிறுவனம் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப்பின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சாலின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவருடைய அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மட்டுமில்லாமல், நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்புடைய வளாகங்களும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலையில் இருந்து இந்த சோதனை நடந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism