Published:Updated:

5-ல் 4 பேர் வேலை மாறுகிறார்களா? லிங்க்ட்இன் சர்வே சொல்வது என்ன?

வேலை மாறுதல்...
பிரீமியம் ஸ்டோரி
வேலை மாறுதல்...

சர்வே

5-ல் 4 பேர் வேலை மாறுகிறார்களா? லிங்க்ட்இன் சர்வே சொல்வது என்ன?

சர்வே

Published:Updated:
வேலை மாறுதல்...
பிரீமியம் ஸ்டோரி
வேலை மாறுதல்...

லிங்க்ட்இன் வலைதளம், தற்போதைய வேலைச்சூழல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அண்மை யில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்தியாவில் வேலை செய்பவர்களில் 82% பேர் வேலை மற்றும் வாழ்க்கைச்சூழலைச் சமாளிப்பதில் இருக்கும் சிக்கல்களைக் காரணம் காட்டி, நடப்பு 2022-ம் ஆண்டில், தற்போது செய்துவரும் வேலையிலிருந்து மாற நினைப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

லிங்க்ட்இன் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1,111 பணியாளர்களிடம் இந்த சர்வேயை மேற் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலான வர்கள், தற்போதைய கொரோனா கால கட்டத்தில் அலுவலகப் பணிகளையும், தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலையும் சமன் செய்ய சிரமமாக இருப்பதைக் காரணமாகச் சொல்லியிருக்கிறார்கள். 28% பேர் போதுமான சம்பளம் இல்லாததால் வேலை மாற நினைப்பதாகவும், 23% பேர் திறன் மேம்பாடு மற்றும் பணி வாழ்க்கையில் வளர்ச்சிக்காக வேலை மாறப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

5-ல் 4 பேர் வேலை மாறுகிறார்களா?  
லிங்க்ட்இன் சர்வே சொல்வது என்ன?

இந்தப் பெருந்தொற்றுக் காலமானது அலுவலக வேலைகளில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான பயத்தை உண்டு பண்ணியிருப்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது செய்துவரும் வேலைகளில் நிலையற்ற தன்மை அவர்களுக்கு அதன் மீது ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், தங்களின் திறமைகள் மீதும் திறன்கள் மீதும் அவர்களுக்கே ஒருவித சந்தேகம் (Impostor syndrome) உருவாகியிருப்பதாகவும், அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வேலை செய்யும் சூழல் இன்னும் திரும்பாததால், தங்களின் வேலை மற்றும் பணி வாழ்வின் வளர்ச்சியில் சீனியர்களின் உதவி கிடைக்காமல் பணியாளர்கள் திண்டாடுவதாலும் இந்த மனநிலை அவர்களுக்கு வந்திருப்பதாக லிங்க்ட்இன் தெரிவிக்கிறது.

அதே போல, இந்த லிங்க்ட்இன் சர்வேயில் பங்கெடுத்துக்கொண்ட பெண்களில் 43% பேர் தீவிரமாகப் புதிய வேலையைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். வேலை மாறுவதற்காக அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மிக முக்கியமான காரணம், பெருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தற்போதைய வேலையில் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்பதுதான்.

இதே போல, இன்டீட் இந்தியா ஹையரிங் டிராக்கர் இரண்டாம் அரையாண்டு 2021 (Indeed India Hiring Tracker H2, 2021) என்கிற சர்வேயைச் செய்து வெளியிட்டிருக்கிறது. இந்த சர்வேயை வேல்யூவோக்ஸ் நிறுவனம் செய்தி ருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களும் லிங்க்ட்இன் சமூக வலைதளத்தின் சர்வேயில் உள்ள தகவல்களைப் போன்றே உள்ளது.

இந்த சர்வேயானது கடந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. முதலில் 1,219 பணியாளர்களிடமும், இரண்டாவது முறையாக 1,511 பணியாளர்களிடமும் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

இந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் 51% பேர் தற்போது செய்து வரும் வேலை தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறதா என்று சிந்தித்து வருகிறார்கள். 61% பேர் தாங்கள் சரியான வேலையில்தான் இருக்கிறோமா என்று கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுவருவதாகச் சொல்லியிருக்கின்றனர். 71% பேர், கோவிட்டுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை மாறியதற்கேற்ப தங்கள் வேலையையும் மாற்றுவதற்கு யோசித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 10% பேர் இப்போது செய்துவரும் வேலையை விட்டுவிட லாமா என்று யோசித்து வருகின்றனர். இந்த யோசனை ஆண்களில் 31% பேரிடமும் பெண்களில் 19% பேரிடமும் இருந்துவருவதாகவும் இந்த சர்வே சொல்கிறது. இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 68% பேர் ‘வேலையில் திருப்தி’ என்பதே முக்கியம் எனச் சொல்லியிருக்கின்றனர். 62% பேர் சம்பளமே முக்கியம் என்று சொல்லி யிருக்கின்றனர். 61% வேலை, பணி வாழ்க்கை சமனே முக்கியமான விஷயம் என்று சொல்லியிருக்கின்றனர்.

இந்த இரண்டு சர்வேக்களையும் பார்க்கும்போது, கோவிட் தொற்றுக்குப் பிறகு வேலை தொடர்பான பணியாளர்களின் சிந்தனை வெகுவாக மாற்றம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. இந்த சர்வே முடிவுகளை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம் என்கிற மாதிரி பார்க்க வேண்டும். பணியாளர்கள் மனதிருப்தியுடன் பணிபுரியத் தேவையான நடவடிக் கைகளை வேலை தரும் நிறுவனங்கள் எடுக்க வேண்டும். அப்போதுதான் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism