Published:Updated:

வதந்திகளை நம்ப வேண்டாம்! - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வேண்டுகோள்

ஜாய் ஆலுக்காஸ்
ஜாய் ஆலுக்காஸ்

ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ், உடல்நலம் குறித்து தவறான தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில், அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாய் அரக்கல் என்பவம் மரணமடைந்தார். கேரளாவின் மானந்தவாடியைச் சேர்ந்த இவர், துபாயைத் தலைமை இடமாகக் கொண்டு இன்னோவா குரூப் நிறுவனங்களை நடத்திவந்தார். தொழிலில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, ஜாய் அரக்கல் துபாய் நகரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

ஜாய் அரக்கல் (மத்தியில் இருப்பவர்)
ஜாய் அரக்கல் (மத்தியில் இருப்பவர்)

இந்த நிலையில், பிரபல ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் தலைவரான ஜாய் ஆலுக்காஸ் மறைந்துவிட்டதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் தவறான தகவல் பரவியது. ஜாய் என்ற பெயர் குழப்பம் காரணமாக இத்தகைய தவறு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ஜாய் ஆலுக்காஸ் நிறவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ''ஜாய் ஆலுக்காஸ் நலமாக உள்ளார். சிறப்பாக நிர்வாகப்பணிகளை மேற்கொண்டுவருகிறார். இவரைப் பற்றி தவறான சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அமீரகத்தில் இறந்தவர், வயநாட்டைச் சேர்ந்த ஜாய் ஆரக்கல்.

News From Joy Alukkas
News From Joy Alukkas

இவருக்கும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இலவசம்... ஏழைத் தொழிலாளர்களுக்கு கட்டணம்... இது நீதியா இந்திய அரசே?

இருப்பினும் அவரின் குடும்பத்தாருக்கு, அன்னாரின் மறைவுக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு