Published:Updated:

WhatsApp மெசேஜ் போதும்; தேவையான பொருள்கள் டெலிவரியாகும்! - கேரள ஸ்டார்அப் நிறுவனம் எர்ரண்டோ

எர்ரண்டோ

2016-ஆம் ஆண்டு கேரளாவின் முதல் ஹைபர்லோக்கல் விநியோக நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது எர்ரண்டோ நிறுவனம்.

WhatsApp மெசேஜ் போதும்; தேவையான பொருள்கள் டெலிவரியாகும்! - கேரள ஸ்டார்அப் நிறுவனம் எர்ரண்டோ

2016-ஆம் ஆண்டு கேரளாவின் முதல் ஹைபர்லோக்கல் விநியோக நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது எர்ரண்டோ நிறுவனம்.

Published:Updated:
எர்ரண்டோ

விண்டோ ஷாப்பிங் கேள்விப்பட்டிருப்பீர்கள், வாட்ஸ்அப் ஷாப்பிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை அளித்து வருகிறது கேரளாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். கேரளாவைச் சேர்ந்த அஸ்கார் பூந்தலா, நஸ்லி முஹம்மத், ஷமீர் பத்தயக்கண்டி மற்றும் வினய் ஜேம்ஸ் கைநாடி ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் எர்ரண்டோ. விநியோக ஸ்டார்ட் அப் நிறுவனமான எர்ரண்டோ நாம் தினமும் சாட் செய்யப் பயன்படுத்தும் செயலியான வாட்ஸாப்பை பயன்படுத்தி பொருட்களை விநியோகம் செய்யும் உலகத்தின் முதல் நிறுவனம் என்கிற பெயரைப் பெறுகிறது.

எர்ரண்டோ நிறுவன நிறுவனர்கள்
எர்ரண்டோ நிறுவன நிறுவனர்கள்

2016-ஆம் ஆண்டு கேரளாவின் முதல் ஹைபர்லோக்கல் விநியோக நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது இந்நிறுவனம். தற்போது, கொச்சி, கோழிக்கோடு , திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் தங்களது சேவையை வழங்கி வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைப்பேசியில் இருக்கும் வாட்ஸாப்பை பயன்படுத்தி '7994834834' என்ற எண்ணிற்கு 'ஹலோ' என்று குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், அதனைத் தொடர்ந்து நமக்குத் தேவையானதை வாட்ஸ்அப் மூலமே தேர்வு செய்து, இந்த நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் மூலம் உணவு, மருந்து, வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பிக்-அப், ட்ராப்-அப் சேவைகளை வாட்சப்பைப் மட்டும் பயன்படுத்தியே பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப்பற்றிப் பேசிய இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான ஷமீர் பத்தயகண்டி "ஓரிரு மெஸ்சேஜுகள் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். டெலிவரி மற்றும் பிக்- அப் முகவரிகளைச் சுலபமாகக் குறுஞ்செய்தி மூலமோ அல்லது வாட்ஸ்அப்பில் இருக்கும் லொகேஷன் வசதியின் மூலமோ மிக எளிதாகப் பெற்றுக் கொண்டு எங்களால் டெலிவரி சேவையை வழங்க முடிகிறது."என்றார். மேலும் பேசிய அவர், "இதற்கான கட்டணத்தை பேமென்ட் லிங்கின் மூலம் அதே வாட்ஸப் விண்டோவில் இருந்து கொண்டே சேவைக்கான கட்டணத்தையும் கட்டி விட முடியும் . இப்படி வாட்ஸாப்பை மட்டுமே பயன்படுத்தி சேவைகளைப் பெறுவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் போன்களில் தேவையற்ற பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது தவிர்க்கப்படும்" என்கிறார் இதன் நிறுவனர்.

எர்ரண்டோ நிறுவன இணையதளம்
எர்ரண்டோ நிறுவன இணையதளம்

தற்போது ஒரு மாதத்திற்கு மட்டும் ஏறத்தாழ 1.5 லட்சம் ஆர்டர்களை இந்நிறுவனம் டெலிவரி செய்து வரும் எர்ரண்டோ, அடுத்ததாகத் தென்னிந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்களான சென்னை, ஹைதராபாத், மைசூர், மங்களூர் மற்றும் கோயமுத்தூர் ஆகிய நகரங்களிலும் தன்னுடைய சேவையை விரிவுபடுத்தவிருக்கிறது. தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்பட்டு வரும் இதன் சேவைகளை இனி வரும் காலங்களில் இனிமேல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான ஷமீர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism