Published:Updated:

பேக்கரி எந்திரங்கள் ஏற்றுமதியில் கலக்கும் கும்பகோணம் நிறுவனம்! - உலகம் முழுக்க அனுப்புவது எப்படி?

சபாபதி, சந்திரசேகர், ஆண்டாள் சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
சபாபதி, சந்திரசேகர், ஆண்டாள் சந்திரசேகர்

பேக்கரி எந்திரங்கள் தயாரிப்பில் நம் நாட்டை உலக அரங்குக்குக் கொண்டு சென்றிருக்கிறார் கும்பகோணம் சபாபதி!

பேக்கரி எந்திரங்கள் ஏற்றுமதியில் கலக்கும் கும்பகோணம் நிறுவனம்! - உலகம் முழுக்க அனுப்புவது எப்படி?

பேக்கரி எந்திரங்கள் தயாரிப்பில் நம் நாட்டை உலக அரங்குக்குக் கொண்டு சென்றிருக்கிறார் கும்பகோணம் சபாபதி!

Published:Updated:
சபாபதி, சந்திரசேகர், ஆண்டாள் சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
சபாபதி, சந்திரசேகர், ஆண்டாள் சந்திரசேகர்
கோயில் நகரம் எனப் பெயரெடுத்த கும்பகோணத்தில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவுதான் என்ற நிலை மாறி, இந்தப் பகுதிகளிலும் பல நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்து, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பைத் தந்துவருகிறது. இந்த ஊருக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் கேக், பிரட் உள்ளிட்ட பேக்கரி பொருள்கள் செய்வதற்குப் பயன் படுத்தப்படும் எந்திரங்கள் உற்பத்தி செய்து அவற்றை உலக நாடுகள் பலவற்றுக்கும் விற்பனை செய்து வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு, அவருடைய நிறுவனத்துக்குச் சென்றோம்.
பேக்கரி எந்திரங்கள் ஏற்றுமதியில் கலக்கும் கும்பகோணம் நிறுவனம்! - உலகம் முழுக்க அனுப்புவது எப்படி?

கும்பகோணத்தில் ‘ஸ்ரீசாமுண்டி பேக்கிங் எக்யூப்மென்ட்’ என்ற பெயரில் பேக்கரியில் கேக் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெஷின்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சலையை நடத்திவருகிறார் சபாபதி. 73 வயதாகும் இவர், தரத்துக்கு முன்னுரிமை தந்து, தனித்துவமிக்க செயல்பாடுகளால் சிறந்த முறையில் மெஷின்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து, பேக்கரி எந்திரங்கள் தயாரிப்பில் நம் நாட்டை உலக அரங்குக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சபாபதியிடம் நாம் பேசினோம்.

லாரி டு பேக்கரி

‘‘எங்க அப்பா 1952-ல் கார், டிராக்டர், லாரி, போட் உள்ளிட்டவையில் பழுதான மற்றும் தேய்ந்துபோன பொருள்களை ரீகண்டிஷன் செய்து கொடுக்கும் இன்ஜினீயரிங் வொர்க் ஷாப் நடத்தி வந்தார். நான் பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அப்பாவுடன் வொர்க் ஷாப் வேலையைக் கற்றுக்கொண்டு தேர்ந்தவனாக இருந்தேன்.

1980-ல் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு முழு நேரமாக அப்பாவுடன் தொழிலில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது பேக்கரி நடத்திவந்த என் நண்பர் ஒருவர் பேக்கரியில் கேக் செய்வதற்கான மாவு பிசையும் எந்திரம் ஒன்றைத் தயார் செய்து தரச் சொன்னார். அதற்கு முன் அந்த மெஷினை நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் நண்பருக்காகப் பல கம்பெனிகளின் தயாரிப்பு முறையைப் பார்த்து துல்லியமாகச் செய்து கொடுத்தேன். இதில் மனநிறைவு அடைந்த என் நண்பர் என்னைப் பாராட்டி என்னோட இந்தத் தொழிலுக்கு முதல் விதையை ஊன்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனியாக ஒரு கம்பெனி..!

அதன் பிறகு, பேக்கரி பொருள்கள் உற்பத்தி செய்யும் மெஷின்களை வடிவமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டதுடன் அதற்காகத் தனியாக 1983-ல் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் புது கம்பெனி ஒன்றைத் தொடங்கினேன். அதன் பிறகு, மும்பை செல்வதற்காக வாய்ப்புக் கிடைத்தது. அங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கப்பலில் பேக்கரியில் பயன்படுத்தப்பட்ட மெஷின்களை வாங்கி மறுவிற்பனை செய்து கொண்டிருந்தார். அவருடைய நட்பு கிடைத்தது. அவர் மூலம் நல்ல நிலையில் உள்ள பொருள்களை வாங்கி எடுத்து வந்து தரமாக ரீகண்டிஷன் செய்து விற்கத் தொடங்கினேன்.

சபாபதி, சந்திரசேகர், ஆண்டாள் சந்திரசேகர்
சபாபதி, சந்திரசேகர், ஆண்டாள் சந்திரசேகர்

‘வீட்டில் உள்ளவர்கள் இவனுக்கு என்ன புத்தி கெட்டுப்போச்சா? லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பழைய பொருள்களை வாங்கிக் கொண்டு வர்றானே’ என்று புலம்பியதுடன், ‘இவன் எங்கே தேறப்போகிறான்’ என என் மீது கவலையும் கொண்டனர். ஆனால், நான் அதில் விடாப்பிடியாக இருந்தேன். உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனத்தின் தயார் செய்யப்பட்ட பழைய பொருள் ஒன்றை வாங்கி, எப்படித் தயார் செய்துள்ளனர் என்ற தொழில்நுட்பத் தையும் தெரிந்துகொண்டேன். யாருடைய தொழில்நுட்பத்தையும் காப்பி அடிக்காமல் புதிய முறையில் துல்லியமாக மெஷின்களை ரீகண்டிஷன் செய்து விற்பனை செய்து வந்தேன். தமிழகத்தின் பல மாவட்டங்களி லிருந்தும் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். தரத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல், பொருள்களை வடிவமைத்ததுதான் இவற்றுக்கு முதல் முக்கியக் காரணமாக அமைந்தது.

மகனின் பிசினஸ் என்ட்ரி

பழைய எந்திரங்களை வாங்கி விற்பனை செய்வதைவிட நாமே புதிதாக எந்திரங்களைத் தயார் செய்யலாம் என்ற எண்ணம் உருவானது. டிப்ளோமா இன்ஜினீயரிங் படிப்பை முடித்த என் மகன் சந்திரசேகர் எனக்கு உதவியாக கம்பெனியில் இணைந்தான். இதற்காக முறையான பயிற்சியையும் பெற்று இந்தத் துறையில் ஈடுபட்டான்.

பின்னர், நாங்களே பேக்கரி பொருள் செய்யக்கூடிய மெஷின்களை வடிவமைக்கத் தொடங்கினோம். பிரட், பன், பப்ஸ் செய்யக் கூடிய டோ மிக்ஸர் எனச் சொல்லக்கூடிய மெஷின், ஸ்பாஞ்ச், பிளம், புட்டிங், கூடை உள்ளிட்ட கேக்குகள் செய்யக்கூடிய கேக் மிக்‌ஷர், டோ ஷீட்டர், ஓவன் உள்ளிட்ட பேக்கரிக்குப் பயன்படக்கூடிய குறிப்பிட்ட எந்திரங்கள் தயார் செய்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவும், விருப்பப்படியும் தயார் செய்து வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூ.20 லட்சம் வரை

இந்தப் பொருள்களின் விலை ரூ.1 லட்சம் - ரூ.5 லட்சம் வரையிலும், ஓவன் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புகொண்டதாக உள்ளது. அவை தரமாகவும் துல்லியமாகவும் நீண்ட நாள்கள் உழைக்கக்கூடிய வகையில் தயார் செய்ததால் பேக்கரி உரிமையாளர்கள் பலரும் வெளிநாட்டில் செய்யப்படும் மெஷின்களுக்கு இணையாக நாங்கள் உற்பத்தி செய்யும் பொருள் இருப்பதாகக் கூறி பாராட்டுகின்றனர். தமிழகத்தைத் தாண்டி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, கல்கத்தா, மகாராஷ்டிரா என இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் எங்கள் வியாபாரம் விரிவடைந் துள்ளது. பல வெளிநாடுகளிலும் எங்களுக்கு கஸ்டமர்கள் உள்ளனர்.

பேக்கரி எந்திரங்கள் ஏற்றுமதியில் கலக்கும் கும்பகோணம் நிறுவனம்! - உலகம் முழுக்க அனுப்புவது எப்படி?

மாதம் ரூ.15 லட்சம் லாபம்!

தொடக்கத்தில் ரூ.3 லட்சத்தில் தொடங்கப் பட்ட இந்த நிறுவனம் இன்றைக்குப் பெரிய அளவில் வளர்ந்திருப்பதுடன் வங்கிகளில் கடன் பெற்று பெரிய தொகையும் முதலீடாகச் செய்திருக்கிறோம். இப்போது என் மருமகளான ஆண்டாள் சந்திரசேகரும் எங்களுடன் இணைந்து கம்பெனியைக் கவனித்து வருகிறார். சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுட்டு இதில் தடம் பதித்தேன். இன்றைக்கு மாதம் சுமார் ரூ.15 லட்சம் வரை லாபம் வருகிறது. மனசுக்கு நிறைவான வேலையை முழு ஈடுபாட்டுடன், தரமாகவும் துல்லியமாகவும் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து செயல்பட்டால் வெற்றிதான்’’ என மகிழ்ச்சியுடன் பேசினார் சபாபதி.

பேக்கரி எந்திரங்கள் ஏற்றுமதியில் கலக்கும் கும்பகோணம் நிறுவனம்! - உலகம் முழுக்க அனுப்புவது எப்படி?

வெளிநாட்டவர்கள் வியந்தார்கள்..!

அடுத்து, அவர் மகன் சந்திரசேகரிடம் பேசினோம். ‘‘ஐ.பி.ஏ எனச் சொல்லப்படும் உலக பேக்கரி எந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான கண்காட்சி வெளிநாட்டில் நடைபெறும். சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டு ஸ்டால் அமைத்து நாங்கள் எங்க கம்பெனியில் தயார் செய்யப்பட்ட மெஷினை காட்சிக்கு வைத்திருக்கிறோம். இந்தக் கண்காட்சியில் தமிழகத்திலிருந்து வந்துள்ள நிறுவனம் என்று சொன்னபின் அதை நம்பாமல், மெஷினுக்குள் என்னென்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று கழற்றிக் காட்டச் சொன்னார்கள். எங்கள் வடிவமைப்பையும் துல்லியத்தையும் பார்த்தவர்களில் ஒருவர், உடனே எங்க மெஷினை வாங்கினார். இதேபோல் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் 1,800 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட ஒரே கம்பெனி எங்களுடையது என்பதும் எங்களைப் பெருமைகொள்ள வைத்தது’’ என்றார்.

ஆர்வமும் தரமும் சிறந்த சேவையையும் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதற்கு கும்பகோணத்தில் இருக்கும் இந்த நிறுவனம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism