Published:Updated:

எல்.ஐ.சி-யின் புதிய சலுகை - இனி காலாவதியான பாலிசிகளையும் புதுப்பிக்கலாம்!

2014-ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட விதிமுறையைத் தற்போது எல்.ஐ.சி நிறுவனம் தளர்த்தியிருக்கிறது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

பிரீமியம் செலுத்தாமல், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி லேப்ஸ் ஆனால், செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பாலிசியைப் புதுப்பிக்க முடியாது என அறிவித்திருந்தது எல்.ஐ.சி. இந்த விதிமுறையானது 'ஐ.ஆர்.டி.ஏ.ஐ புராடெக்ட் ரெகுலேஷன் 2013-ன் படி, ஜனவரி 1, 2014-ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையைத் தற்போது எல்.ஐ.சி நிறுவனம் தளர்த்தியிருக்கிறது.

தொடர்ச்சியான ஆயுள் காப்பீட்டின் பயனை நீட்டிக்கும் நோக்கில், எல்.ஐ.சி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பை அணுகி, ஜனவரி 1, 2014-ம் ஆண்டுக்கு முன்பு பாலிசிகளை வாங்கிய பாலிசிதாரர்களின் பாலிசிகள், பிரீமியம் நிறுத்தப்பட்டு லேப்ஸ் ஆகியிருந்தால், அதைத் தற்போது புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய சலுகையை எல்.ஐ.சி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறது. 

Vikatan

இந்தச் சலுகையின்படி 2014, ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு, தங்கள் பாலிசிகளை வாங்கிய எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் 5 ஆண்டுகளுக்குள் நான் - லிங்டு பாலிசிகளைச் செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்குள்ளும் யுனிட் லிங்டு பாலிசிகளை செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம்.