Published:Updated:

எல்.ஐ.சி வாடிக்கையாளர்களே, காலாவதியான உங்கள் பாலிசிகளைப் புதுப்பிக்க சலுகைகளுடன் வாய்ப்பு!

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

இந்தச் சலுகை அக்டோபர் 22-ம் தேதி வரை செல்லுபடியாகும். கடைசி ப்ரீமியம் செலுத்தப்பட்டு ஐந்து வருடத்துக்கு மேல் ஆகாத பாலிசிகளை இந்த சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா நோய் தொற்று காரணமாக பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர் ஊரடங்கு காரணமாக பல பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு ப்ரீமியத்தை சரிவர செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகை அக்டோபர் 22-ம் தேதி வரை செல்லுபடியாகும். கடைசி ப்ரீமியம் செலுத்தப்பட்டு ஐந்து வருடத்துக்கு மேல் ஆகாத பாலிசிகளை இந்த சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்

Insurance
Insurance
விரைவில் வெளியாகும் LIC IPO; போட்டி போடும் 16 வியாபார வங்கிகள்; என்ன காரணம்?

இவ்வாறு பாலிசிகளை புதுப்பிக்கும் போது அபராத கட்டணம் விதிக்கப்படும். இந்த அபராத கட்டணத்திலும் சில சலுகைகளை எல்.ஐ.சி வழங்குகிறது. அதன்படி செலுத்த வேண்டிய ப்ரீமியத் தொகை ரூ. 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதற்கான அபராதத் தொகையில் 20% வரை தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.2,000 வரை அபராதத் தொகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று எல்.ஐ.சி அறிவித்துள்ளது.

அதேபோல் ப்ரீமியத் தொகை ரூ.1-3 லட்சத்துக்குள் இருந்தால், அபராதத் தொகையில் 25% வரை தள்ளுபடி என அதிகபட்சம் ரூ. 2,500 வரை தள்ளுபடி வழங்கப்படும். மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் ப்ரீமியத் தொகை இருந்தால், அபராதத் தொகையில் 30% வரை தள்ளுபடி என அதிகபட்சம் ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 75% வரை அதிகரித்த ஏஜென்ட் பங்களிப்பு!

இந்தச் அபராதத் தொகைக்கான சலுகை டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் சில வகை அதிக ரிஸ்க் உடைய பாலிசிகளுக்கு பொருந்தாது. ஆனால் சிலவகை மருத்துவ காப்பீடுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

அதனால் காலாவதியான பாலிசிகளை எல்.ஐ.சி வழங்கும் இந்தச் சலுகையை பயன்படுத்தி தமது காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு