Published:Updated:

ஏர் இந்தியாவின் புதிய CEO; யார் இந்த இல்கர் அய்சி?

Ilker Ayci ( Twitter Photo )

1971-ல் இஸ்தான்புல்லில் பிறந்தார் அய்சி, பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டம் பெற்றபின், ஐக்கிய நாட்டிலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இல்கர் அய்சி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக டாடா குழுமம் அறிவித்திருக்கிறது. துருக்கி ஏர் லைன்ஸின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய இல்கர் அய்சி, இவரின் பதவிக் காலத்தில் துருக்கி ஏர்லைன்ஸை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், டாடா சன்ஸின் தலைவர் என்.சந்திரசேகரன் புதிய பதவி நியமனத்தைக் குறித்து அறிவிக்கையில், ``இல்கரை டாடா குழுமத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இவர் ஏர் இந்தியாவை புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்துவார்" என்று சொல்லி இருக்கிறார். 2022, ஏப்ரல் மாதமோ, அதற்கு முன்னரோ அய்சி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என அவர் அறிவித்தார்.

ஏர் இந்தியா ( Air India )
ஏர் இந்தியா ( Air India )

இது குறித்து இல்கர் அய்சி பேசும்போது, ``ஒரு புகழ்பெற்ற விமான நிறுவனத்தை வழிநடத்த டாடா குழுமத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ஏர் இந்தியாவின் வலுவான பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் வகையில், அனைவருடனும் சேர்ந்து பணியாற்றி, சிறந்த ஏர்லைன்ஸாக ஏர் இந்தியாவை மாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

1971-ல் இஸ்தான்புல்லில் பிறந்தார் அய்சி, பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டம் பெற்றபின், ஐக்கிய நாட்டிலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

1994-ல் இஸ்தான்புல் மெட்ரோபாலிடன் முனிசிபாலிட்டியில் பல பதவிகளில் பணியாற்றினார். பின்னர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட அய்சி, அதை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.

ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிவந்த நிலையில், மத்திய அரசு அதை விற்க முடிவு செய்தது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஷ் பிரைவேட் லிமிடெட் மற்ற போட்டியாளர்களைவிட அதிக விலைக்குக் கேட்டதால், ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துக்கு விற்கப்பட்டது.

Ilker Ayci
Ilker Ayci

இந்த நிலையில் ஏர் ஏஷியா, ஏர் எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனமும் வந்தது. ஏர் இந்தியாவின் முன்னேற்றத்துக்காகப் பல மாற்றங்களைக் கொண்டு வந்த நிலையில், விமானத் துறையில் சிறந்து விளங்கும் இல்கர் அய்சியைப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்துள்ளது டாடா குழுமம்.

விமானப் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஏர் இந்தியா மற்றும் ஏர் ஏசியா விமானங்களுக்கு இடையில் பயணிகளை மாற்றிக் கொள்ளலாம் என இரண்டு நிறுவனமும், இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.