Published:Updated:

ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் கலக்கும் சென்னை ஃபின்டெக்..!

மதுசூதனன், பிரபு, முத்து
பிரீமியம் ஸ்டோரி
மதுசூதனன், பிரபு, முத்து

ஃபின்டெக்

ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் கலக்கும் சென்னை ஃபின்டெக்..!

ஃபின்டெக்

Published:Updated:
மதுசூதனன், பிரபு, முத்து
பிரீமியம் ஸ்டோரி
மதுசூதனன், பிரபு, முத்து

தற்போது வேகமாக வளர்ந்துவரும் சில துறைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஃபின்டெக். இந்தத் துறையில் நாளுக்கு நாள் பல புதுமைகள் நடந்துவருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் போன் மூலம் பணம் அனுப்பலாம் என்று யாராவது சொல்லியிருந்தால், நாம் நம்பி இருக்க மாட்டோம். இன்று அது சர்வ சாதாரணமான விஷயமாகிவிட்டது. இது போல, பல புதுமையான விஷயங்கள் இந்தத் துறையில் நடந்துவருகின்றன.

இந்தத் துறையில் அண்மைக் காலமாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது எம்2பி நிறுவனம். இந்த நிறுவனத்தை மதுசூதனன், அவரின் சகோதரர் பிரபு மற்றும் மதுசூதனின் நண்பர் முத்து ஆகிய மூவரும் சேர்ந்து 2014-ம் ஆண்டு தொடங்கினார்கள். விசா, காக்னிசன்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியாற்றிய இவர்கள், எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஃபின்டெக் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்கள். இத்தனைக்கும் அப்போது ஃபின்டெக் என்னும் வார்த்தையே பிரபலம் ஆகவில்லை. எம்2பி நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து இந்த நிறுவனத்தின் சி.ஓ.ஓ-வாக இருக்கும் பிரபு நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

மதுசூதனன், பிரபு, முத்து
மதுசூதனன், பிரபு, முத்து

‘‘எங்கள் முதல் ஐடியா, தங்கத்துக்கு அடமானக் கடன் தரும் நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான். இந்த நிறுவனங்களுக்கு உள்ள சிக்கல், பணத்தை எப்படித் தருவது என்பதுதான். பணத்தை ரொக்கமாகத் தர வேண்டும் எனில், எவ்வளவு தொகையை வங்கிக்கிளையில் வைத்திருப்பது, எத்தனை கிளைகளில் எவ்வளவு தொகையை வைத்திருப்பது என்பதில் பலவிதமான சிக்கல். சமயங்களில் கூடுதல் தொகை தேவைப்படும். சில சமயங்களில் அதிகமான தொகை வங்கிக் கணக்கில் இருக்கும். இந்த ரொக்கத்தைக் கையாளுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. செக் தரலாம் எனில், அது வாடிக்கையாளர்களுக்குச் சிக்கல். அவர்கள் அதை எடுத்து வங்கிக்குச் சென்று மாற்ற வேண்டும். இதனால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டியிருக்கும். அதனால் அவர்களுக்கு பிரீபெய்டு கார்டு தந்்தால் என்ன என்பதில் தொடங்கிய ஐடியாதான் எம்2பி.

முதலில், டி.சி.பி வங்கியுடன் இணைந்து ஐ.ஐ.எஃப்.எல் வாடிக்கையாளர்களுக்கு பிரீபெய்ட் கார்டு கொடுத்தோம். ஆரம்பத்தில் சில கிளைகளுக்கு மட்டுமே இந்த சேவை தந்தோம். அதை பிறகு படிப்படியாக விரிவாக்கம் செய் தோம். இதில் அந்த கிரெடிட் கார்டு டெக்னாலஜி மட்டுமே எங்களுடையது. ஆனால், கார்டு வேறு நிறுவனம் மூலம் வாங்கியிருந்தோம். அதைத் தொடர்ந்து நாங்களே சொந்தமாக கார்டு விநியோகம் செய்யத் தொடங்கினோம்.

தற்போது கிரெடிட் கார்டு, பிரீபெய்டு கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட கார்டு சேவைகளை வழங்குகிறோம். இப்போது வளர்ந்துவரும் பிரிவாக ‘பை நவ் பே லேட்டர்’ இருந்து வருகிறது. இதில் பொருள் வாங்கும் இடமும் முக்கியம். அதே போல, கடன் கொடுக்கும் நிறுவனங்களும் முக்கியம். இந்தப் பிரிவில் அதிக நிறுவனங்களை இணைத்து வருகிறோம்.

வெளிநாடுகளில்...

இப்போது அதிகம் வாய்ப் புள்ள துறையாக ‘கிராஸ் பார்டர்’ (ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது) வர்த்தகம் இருக்கிறது. சமீபத்தில் திரட்டப் பட்ட நிதி மூலம் வெளிநாடுகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். இதற்காக சமீபத்தில் துபாயில் அலுவலகம் ஒன்றைத் திறந்திருக் கிறோம். ஆனால், இந்தியா என்பது மிகப் பெரிய சந்தை. அடுத்த சில ஆண்டுகளுக்கு எங்களுடைய வருமானத்தில் இந்தியாவின் பங்குதான் கணிசமானதாக இருக்கும்.

ஆனால், வெளிநாட்டுச் சந்தையில் நாங்கள் கவனம் செலுத்த இருக்கிறோம். இப்போது இந்தியா மட்டு மல்லாமல், மத்திய கிழக்கு நாடுகள், வங்க தேசம், பிலிப் பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் செயல் பட்டு வருகிறோம். இந்தியாவில் தரப்படும் அதே சேவைகளை அந்த நாடுகளிலும் நாங்கள் தருவோம். தவிர, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு நடக்கும் பணப் பரிவர்த்தனைதான் எங்கள் இலக்கு.

டெக்னாலஜியில் வேலை செய்பவர்கள் எளிதாகப்பணத்தை மாற்றுகின்றனர். ஆனால், பணியாளர்கள் பணத்தை மாற்ற கஷ்டப்படுகின்றனர். உதாரண மாக, அரபு நாடுகளில் சம்பாதிப் பவர்கள், அங்கிருக்கும் ஏ.டி.எம் -களில் பணத்தை எடுக்க சேவைக் கட்டணம் செலுத்துகின்றனர். அந்தப் பணத்தை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப இன்னும் கொஞ்சம் சேவைக் கட்டணம் என மொத்தமாக 7% அளவுக்கு சேவைக் கட்டணத்தைச் செலுத்து கின்றனர். இந்தப் பிரிவில் டெக்னாலஜியைப் புகுத்தும் பட்சத்தில் வெறும் 1.5 சதவிகிதத் தில் பணத்தை இந்தியாவுக்கு மாற்றிவிட முடியும். இந்த சிக்கல் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தற்போது சர்வதேச அளவில் பல நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கிறது. அதனால் ‘கிராஸ் பார்டர்’ பரிவர்த்தனையில் பெரிய சந்தை காத்திருக்கிறது.

பணியாளர்கள்

எங்கள் நிறுவனத்தில் பணி யாளர்களுக்குத் தேவையான சலுகைகளை வழங்குகிறோம். விடுமுறை வேண்டும் என்று மெயில் அனுப்பினால் ஆட்டோ அப்ரூவல் கிடைத்துவிடும். எங்கள் நிறுவனத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் எனில், அதற்குப் பெரிய தலைமை தேவை. 2020-ம் ஆண்டு வரையில் நிறுவனர்கள் நாங்கள் மூவர் மட்டுமே பல முக்கிய பொறுப்பு களைக் கவனித்துக்கொண்டோம். பூஜ்ஜியத்திலிருந்து 1 என்னும் நிலைக்கு வந்துவிட்டோம் ஆனால், அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த முக்கிய நபர்கள் இருந்தால்தான் பெரிய நிறுவனமாக வளர முடியும்.

நாங்கள் சம்பளம் அதிகமாக எடுத்துக்கொண்டால் பணியாளர்களுக்கு சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அதனால் எங்களுடைய சம்பளத்தை நாங்கள் பெரிய அளவில் ஏற்றவில்லை. தவிர, எங்களுக்கு நிறுவனத்தில் கணிசமான அளவுக்கு பங்குகள் இருக்கிறது. பங்குகளைத் தாண்டி கூடுதல் சம்பளத்தை எடுத்துக்கொண்டால், பட்ஜெட் இருக்காது. திறமையான பணியாளர்களை நிறுவனத்துக்குள் கொண்டு வர முடியாது என்பதால், எங்களுடைய சம்பளத்தை நாங்கள் உயர்த்தவில்லை. எங்களைவிட கூடுதல் சம்பளத்தில் முக்கியப் பொறுப்புகளில் சிலரை நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுக்கு கணிசமான அளவுக்கு பங்குகளும் கொடுத்திருக்கிறோம்.

ஸ்டார்ட்அப் துறைக்கு...

நாங்கள் பல தவறுகளைச் செய்துதான் வளர்ந்திருக்கிறோம். இதே தவறுகள் பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுக்கிறோம். நாங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதில்லை. மாறாக, பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம். இதுவரை 33 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம். எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்கி வழியும் காட்டி வருகிறோம். அதேபோல, ஸ்டார்ட்அப் துறையை மேம்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்’’ எனக் குதூகலமாகப் பேசி முடித்தார் பிரபு.

சென்னையில் ஃபின்டெக் நிறுவனங்கள் பெருகும் நாள்கள் வெகுதொலைவில் இல்லை.

20 நாடுகளில் 30 வங்கிகளுடன்..!

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 30 மேற்பட்ட வங்கிகளுடன் இணைந்து பணியாற்றுகிறது எம்2பி. தவிர, பல ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங் களுடன் இணைந்து பணியாற்றுகிறது. கடந்த அக்டோபரில் நிதி திரட்டும்போது 30 கோடி டாலர் சந்தை மதிப்பு (ரூபாய் 2,250 கோடி) உடைய நிறுவனமாக எம்.2பி இருந்தது. ஜனவரியில் இதன் சந்தை மதிப்பு 60 கோடி டாலராக (ரூபாய் மதிப்பில் 4,500 கோடி) உயர்ந்திருக்கிறது. இன்சைட் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், பெட்டர் கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களும், பல சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism