பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விமான பைலட் to டீ, காபி டெலிவரி... மதுரையில் அசத்தும் ‘மாத்தி யோசி’ ஸ்டார்ட்அப்!

பிரபாகரன் வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபாகரன் வேணுகோபால்

தொழில்

உள்ளே நுழையும்முன் வாசல் வரை வந்து நம்மை வரவேற்றது, காபி யின் மணம். டெலிவரிக்காக ஆள்கள் வெளியே போய்க் கொண்டும், உள்ளே பெரிய பெரிய பாய்லர்களில் டீ, காபி போடுவதற்கான பணி களுமாக பயங்கர பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த நிறுவனம்.

“பைலட் ஆகுறதுக்கான பயிற்சியும் தேர்ச்சியும் பெற் றிருந்தேன். எல்லா முன்னணி நிறுவனங்களிலும் வேலை கிடைச்சது. ஆனா, அப்பா அவருடைய நகைக்கடையை பார்த்துக்கொள்வதற்காக கூப்பிட்டாரு. எனக்கும் சொந்தமா தொழில் பண்ண ஆசை இருந்தது. அப்படி உருவானதுதான் ‘கப்டைம்’ என்கிற இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்” என மனம் திறக் கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகரன் வேணுகோபால். அவர் தனது பிசினஸ் பயணத்தை சுவாரஸ் யமாக எடுத்துச் சொன்னார்.

பிரபாகரன் வேணுகோபால்
பிரபாகரன் வேணுகோபால்

‘‘அப்பாவோட நகைக் கடையைத்தான் முதல்ல பார்த்துட்டு இருந்தேன். பிறகு தனியா புதுசா ஏதாச்சும் பண்ணணும்னு ஆர்வம் இருந்துச்சு. ஆனா, என்ன பண்ணணும்னு தெரியல. பிறகு, நகைக்கடையையே ரொம்ப உன்னிப்பா பார்க்க ஆரம்பிச்சப்ப, இதைக் கவனிச்சேன். எல்லாக் கடை களிலும் டீ, காபி வாங்கு வதற்குனே ஒரு ஆள வச்சிருப்பாங்க. அலைஞ்சு, வாங்கிட்டு வந்து, அதை எல்லாருக்கும் கொடுத்து, திரும்ப பாத்திரங்களை அடுத்த வேளைக்காக சுத்தம் பண்ணணும். இதைச் செய்ற துக்கு தனியா ஒரு ஆள், அவருக்கு மாசம்தோறும் சம்பளம் தரணும்.

இன்னும் சில கடைகள்ல, வேலையாள்களே வெளியே போய் டீ காபி குடிச்சிட்டு வாங்கன்னு சொன்னா, அந்தா இந்தானு ஒரு ஒன்றரை மணி நேரம் ஆயிடும். இதனால அவங்க வேலை நேரமும், உற்பத்தித் திறனும் குறையும். இதனால் வேலை யாள்களுக்கும் அலைச்சல், நிறுவனத்துக்கும் நேரம் விரயம்.

சில ஐ.டி கம்பெனிகள்ல மெஷின் வெச்சிருப்பாங்க. அங்கேயும் அந்த மெஷினுக்கு காசு, அதைப் பராமரிப்பு பண்ற செலவுன்னு இருந்துச்சு.

இதையெல்லாம் ஈடுகட்ட, நாமலே டீ, காபி மட்டும் தயாரிச்சு நேரடியா அவங்க டேபிளுக்கே போய் தரலாம்னு தோணுச்சு. டைமுக்கு கப் சரியா அவங்க டேபிள்ல போய்ச் சேரனும். அப்படிங்கற நோக்கத்தில் தான் ‘கப் டைம்’ என நிறுவனத்துக்குப் பெயர் வச்சேன். பிறகு, நிறுவனத்தைத் தொடங்குற வேலைகள்ல இறங்கினேன்.

நாம என்ன பண்ணாலும் அதை விமர்சனம் செய்யவே நாலு பேர் இருப்பாங்க. அதே நாலு பேரு என் வாழ்க்கையிலையும் கரெக்டா ஆஜர் ஆயிட்டாங்க. ‘பைலட்டுக்கு படிச்சிட்டு, வானத்துல பறப்பனு பார்த்தா, நீ டீ விக்கப் போறியா... உனக்கு இதெல்லாம் தேவையா’ என வார்த்தையிலேயே என்னை நோக்கி, கற்களை வீச ஆரம்பிச்சாங்க. அதையெல்லாம் கண்டுக்காம நான் பாட்டுக்கு வெற்றிப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்.

‘மதுரையில முக்குக்கு முக்கு டீக்கடை இருக்கு. அதுல இருந்து நமக்கான வாடிக்கையாளர்களை எப்படி பிடிக்கிறது’ன்னு யோசிச்சப்பதான் டெலிவரி பண்ணலாமுன்னு ஐடியா வந்துச்சு.

ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 10 டீ மட்டும்தான் வித்துச்சு. ஒரு நாள் வாங்குவாங்க; சில நாள் இல்ல வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அப்ப நேரம், உழைப்பு, மூலப்பொருள்கள்னு எல்லாமே வீணா யிடும். ரொம்ப ஏமாற்றமா இருந்துச்சு. நிறைய சறுக்கல்களுக்கு அப்புறம்தான் தெளிவான திட்டம் வர ஆரம்பித்தது.

விமான பைலட் to டீ, காபி டெலிவரி... மதுரையில் அசத்தும்    ‘மாத்தி யோசி’ ஸ்டார்ட்அப்!

2020-ல கொரோனா நேரத்துலதான் என் பிசினஸ் ரொம்ப நல்லா டெவலப் ஆச்சு. அந்த நேரத்துல எந்த டீக்கடையும் இல்லை; நாங்க தனியா கவர்ன்மென்ட்கிட்ட அனுமதி வாங்கி, டீ காபி டெலிவரி பண்ண ஆரம்பிச்சோம். அதற்கு ரொம்ப நல்ல வரவேற்பு இருந்துச்சு. ஒரு நாளைக்கு 10 டீயில் ஆரம்பிச்சு காபி, டீ, மசாலா டீ, சர்க்கரை இல்லாத காபி, டீ, மசாலா டீ-ன்னு இப்போ ஒரு நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்ட கப்புகள் டீ காபி டெலிவரி பண்ணிட்டு வர்றோம்.

எங்களுக்குத் தேவையான பொருள்களை பெரும்பாலும் நாங்களே தயார் பண்ணிப்போம். டீக்குத் தேவையான ஏலக்காய், இஞ்சி, தேயிலை, கிராம்பு எல்லாம் தனித்தனியா காய வச்சு அரைச்சு வச்சுப்போம். அதே மாதிரி, காபி கொட்டையை மொத்தமா சிக்மங்களூரில் இருந்து வாங்கி, நாங்களே வறுத்து அரைச்சு டிக்காஷன் தயார் பண்ணுவோம். எதுவும் மொத்தமா முன்னாடியே அரைச்சு வச்சுக்க மாட்டோம். அப்பப்ப தேவைப் படுற அளவுக்கு ரெடி பண்ணிக்குவோம்.

நாங்க கேஸ் அடுப்பை பயன்படுத்துறதில்ல. ஏன்னா அதிக அளவில் டீ, காபி பண்ணும்போது பால் சீக்கிரமே கொதிச்சு அடிப்பிடிக்க ஆரம்பிச் சுரும். அதனால நீராவி முறைல வெப்பநிலை, அளவுன்னு தனி ஃபார்முலா வச்சு பெரிய பாய்லர்களையே பயன்படுத்துறோம். பசும் பாலில், கொழுப்பின் அளவு, தினமும் ஒரே மாதிரி இருக்காது. அதனால பதப்படுத்தப்பட்ட தரமான பாலையே வாங்குவோம்.

உணவுனு வந்துட்டாலே அதுல வீணாகுறத தடுக்க முடியாது. முழுசும் தடுக்க முடியலனாலும், அதைக் குறைக்க QR Code முறையை அறிமுகப் படுத்தினோம். இதன் மூலம் கஸ்டமர்கள் அவங்களுக்கு எவ்வளவு டீ, காபி வேணும்னு முன்னாடியே சொல்லிட்டா, அதுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிடுவோம். யாருக்கு எவ்வளவு தேவை என்பதைக் கணக்கெடுக்க ஒரு டீம், அதுக்கேத்த மாதிரி ஃப்ளாஸ்க் 350 மி.லி, 500 மி.லி, 1000 மி.லி-ன்னு ரெடி பண்ண ஒரு டீம், அதை சுத்தம் பண்ணி அடுக்கி வைக்க ஒரு டீம், டீ காபி ரெடி பண்ண ஒரு டீம், யாரு எந்த இடத்தில போய் டெலிவரி பண்ணணும்னு நோட் பண்றதுக்கு ஒரு டீம், அதை டெலிவரி பண்றதுக்கு ஒரு டீம், மூலப்பொருள்கள் வாங்குறதுக்கு ஒரு டீம்னு தனித்தனியா உருவாக்கி வச்சிருக்கேன். இவங்க எல்லாரும்தான் என் பலம்.

விமான பைலட் to டீ, காபி டெலிவரி... மதுரையில் அசத்தும்    ‘மாத்தி யோசி’ ஸ்டார்ட்அப்!

டீக்கடையில ஒரு டீ ரூ.12- லிருந்து ரூ.15, காபி ரூ.15 - ரூ.18 வரைக்கும் இருக்கும். ஆனா, இங்க ஒரு லிட்டர் டீ ரூ.80, ஒரு லிட்டர் காபி ரூ.100. 10 பேர் வரை தாராளமா குடிக்கலாம். அப்படிப் பார்த்தா ஒரு டீக்கு ரூ.8-தான் செலவு. ஒரே நேரத்துல நிறைய டீ, காபி ரெடி பண்ற தாலதான் எங்களால இந்த விலைக்குத் தர முடியுது.

டெலிவரிக்கான வாகனங்கள், டீ காபி ரெடி பண்றதுக்கான மெஷின்னு லோனுக்கு நபார்டு வங்கி ரொம்பவே உதவி பண்ணி இருக்காங்க. அது பெரிய உதவி.

இந்த 2022-ல நிறைய பேர் கிட்ட முதலீடு செய்ய பணம் இருக்கு. ஆனா, ஐடியாதான் இல்ல. அரசுத் தரப்புலயும் நிறைய ஸ்கீம்கள் இருக்கு. கொஞ்சம் வித்தியாசமான சிந்தனையும், வாடிக்கையாளர் களுக்கு என்ன தேவைன்றதையும் புரிஞ்சிக்கிட்டாலே போதும்... நாமளும் லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம், ‘நாம ஜெயிச்சுட் டோம் மாறா’னு சத்தமா சொல்ல லாம்..!’’ என்று பேசி முடித்தார் பிரபாகரன். பிசினஸை ஆரம்பிக்க நீங்க ரெடியா?