Published:Updated:

இந்தியா முழுக்க வெங்காயம் சப்ளை... பரபரக்கும் லாசல்காவ் மார்க்கெட்!

மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கெட்

மார்க்கெட்

இந்தியா முழுக்க வெங்காயம் சப்ளை... பரபரக்கும் லாசல்காவ் மார்க்கெட்!

மார்க்கெட்

Published:Updated:
மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கெட்

எந்த வகையான உணவைச் சமைக்க வேண்டும் என்றாலும் அதற்கு வெங்காயம் மிக அவசியம் தேவை. சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்ததற்குக் காரணமே இந்த வெங்காயம்தான். அதனால்தான் மத்திய அரசு எப்போதும் வெங்காயத்தின் விலையை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருக்கிறது.

வெங்காயமானது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் விளைந்தாலும் மகாராஷ்டிரா வில்தான் அதிகமாக விளைகிறது. மகாராஷ்டிரா வில் நாசிக் மாவட்டம் தவிர, அகமத் நகர், புனே, சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் குறைந்த அளவில் வெங்காயம் விளைகிறது. நாசிக் மாவட்டத்தில் மட்டும் ஏ.பி.எம்.சி எனப்படும் வேளாண் உற்பத்தி விற்பனை கமிட்டி மார்க்கெட்டுகள் இருபதுக்கு மேல் இருக்கிறது. இந்த மார்க்கெட்டுகளின்தான் மகாராஷ்டிரா விவசாயிகள் வேளாண் பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

இந்தியா முழுக்க   வெங்காயம் சப்ளை... பரபரக்கும் லாசல்காவ் மார்க்கெட்!

நாசிக் மாவட்டத்தில் இருக்கும் மார்க்கெட்டு களில் லாசல்காவ் வெங்காய மார்க்கெட்டுதான் இந்தியா மட்டுமல்லாது, ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது. 1947-ம் ஆண்டில் இருந்தே செயல்படும் இந்த மார்க்கெட் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க நேரடி விசிட் செய்தோம். மிகப் பிரமாண்டமான இந்த வெங்காய மார்க்கெட்டைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கினோம்.

இரண்டு மாதம் குடோன்களில்....

இந்த மார்க்கெட்டுக்கு தினமும் விவசாயிகள் கொண்டுவரும் வெங்காயம் பொது ஏலத்தில் விடப்பட்டு, அவற்றை வியாபாரிகள் வாங்கு கின்றனர். வியாபாரிகள் வெங்காயத்தை ஏலத்தில் எடுத்தவுடன் எடை போட்ட பிறகு, அருகில் உள்ள தங்களது குடோன்களுக்கு கொண்டு செல்கின்றனர். குடோன்களில் அந்த வெங்காயம் தொழிலாளர்கள் மூலம் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு, உள்நாட்டுக்கானது எது, வெளிநாட்டுக்கானது எது என்றும் முடிவு செய்கின்றனர். வெங்காயத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகவே லாசல்காவ் வெங்காய மார்க்கெட்டைச் சுற்றி ஏராளமான ஏற்றுமதி நிறுவனங்கள் குடோன்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த குடோன்களில் இருக்கும் வெங்காயம் இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும். அதற்குள் வெங்காயத்தை மும்பைத் துறைமுகம் மூலம் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இரண்டு மாதத்துக்குள் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனில், உள்ளூர் விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

விவசாயிகளுக்கு வெங்காயத்தின் விலை குறித்து தினமும் இரண்டு முறை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப் படுகிறது. காலையில் முந்தைய நாள் விலை விவரத்தையும், மதியம் அன்றைய தினம் காலையில் உள்ள விலை விவரத்தையும் அனுப்புகின்றனர்.

இந்தியா முழுக்க   வெங்காயம் சப்ளை... பரபரக்கும் லாசல்காவ் மார்க்கெட்!

அதிகாலை 4 மணிக்கே...

மார்க்கெட்டில் வெங்காய ஏலம் காலை மற்றும் மாலை என 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, அன்றைய விலையைத் தெரிந்துகொண்டு உடனே அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வெங்காயத்தை விவசாயிகள் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்துவிடுகின்றனர். மார்க்கெட்டுக்கு விவசாயிகள் அதிகாலை 4 மணியில் இருந்தே சாரை சாரையாக சிறிய டிராக்டர்கள், டெம்போக்கள் போன்ற வாகனங்களில் வெங்காயத்தை மார்க்கெட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அவர்கள் மார்க்கெட்டுக்குள் வண்டியை வரிசையாக நிறுத்திவிட்டு ஏலம் விடுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

காலை 9 மணிக்கு ஏலம் தொடங்குவதற்கு முன்பு விவசாயிகள் தங்களது வாகனத்தில் இருந்து சிறிதளவு வெங்காயத்தை வெளியில் கொட்டிவிட்டு வியாபாரிகளின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏலம் முடிந்ததும் விவசாயிக்கு விலை அடங்கிய துண்டுச் சீட்டு கொடுத்து அனுப்பிவிடுகின்றனர். சில மணி நேரத்தில் மார்க்கெட் மற்றும் புரோக்கர் கமிஷன் 5.5% பணத்தை எடுத்துக்கொண்டு விவசாயிகளிடம் பணத்தைக் கொடுத்து விடுகின்றனர்.

மார்க்கெட்டுக்கு தினமும் சராசரியாக 1,500 வண்டிகளில் விவசாயிகள் வெங்காயத்தைக் கொண்டு வருகின்றனர். தினமும் 22,000 குவிண்டால் (100 கிலோ) வரை வெங்காயம் ஏலம் விடப்படுகிறது. ஆண்டுக்கு வெங்காய ஏலத்தில் மட்டும் 152 மில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் சுமார் 1,100 கோடி) அளவுக்கு வியாபாரம் நடந்து வருகிறது.

இந்தியா முழுக்க   வெங்காயம் சப்ளை... பரபரக்கும் லாசல்காவ் மார்க்கெட்!

எட்டு மாதம் வரை...

வெங்காய மார்க்கெட்டுக்கு இந்த ஆண்டில் மட்டும் 15-வது முறையாக வெங்காயத்தை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்த விவசாயி பாலா சாஹேப்புடன் நாம் பேசினோம். ‘‘நான் ஐந்து ஏக்கரில் வெங்காயத் தைப் பயிரிடுகிறேன். ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை வெங்காயம் பயிரிடுவோம். தீபாவளியையொட்டி குளிர் காலத்தில் பயிரிடப்படும் வெங்காயத்தை எட்டு மாதங்கள் வரை சேமித்து வைத்திருப்போம்.

மழைக்காலத்தில் பயிரிடப் படும் வெங்காயம் அதிக ஈரத் தன்மையுடன் இருப்பதால், அதிக நாள் தாக்குப் பிடிக்காது. அவற்றை உடனே மார்க் கெட்டுக்குக் கொண்டு வந்து விடுவோம். அதிகப்படியான வெங்காயம் மார்க்கெட்டுக்கு வருவதால், விலையும் மிகவும் குறைவாகவே இருக்கும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 250 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கும். தண்ணீர் இருப்பைப் பொறுத்து இதன் அளவு மாறுபடும்.

திடீர் மழை காரணமாகச் சில நேரங்களில் வெங்காய விளைச்சல் குறைந்துவிடும். தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வெங்காயம் பயிரிடுவோம்’’ என்றார்.

ஆண்டு முழுவதும் செயல்படும் மார்க்கெட்...

நாசிக் மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் வெங்காய மார்க் கெட்டுகளில் ஆண்டு முழுவதும் வெங்காயம் ஏலம் நடந்துகொண் டிருக்கிறது. விவசாயிகள் வெங்காயத்தை அறுவடை செய்தவுடன் மார்க்கெட்டுக்குக் கொண்டு வருவது கிடையாது. வெங்காயத்தைக் காற்று வசதி யுடன் சிறப்பு சேமிப்புக் கிடங்கு களில் சேமித்து வைக்கின்றனர். ஏ.பி.எம்.சி நிர்வாகம் விவசாயி களுக்குத் தினமும் மார்க்கெட்டில் வெங்காயம் என்ன விலைக்கு விற்பனையாகிறது என்ற விவரத்தை அனுப்பிக்கொண் டிருக்கிறது. இதனால் விவசாயிகள் விலையைப் பார்த்து அதற்குத் தக்கபடி மார்க்கெட்டுக்கு வெங்காயத்தைக் கொண்டு வருகின்றனர். அதுவும் பணத் தேவையைப் பொறுத்து சிறிய அளவே கொண்டு வருகின்றனர். ஒரு விவசாயி ஓர் ஆண்டில் அதிக பட்சம் 20 முறை வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார். எனவேதான், மார்க்கெட் ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டி ருக்கிறது.

நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் தாலுகாவில் இருக்கும் 62 கிராம விவசாயிகள்தாம் லாசல்காவ் மார்க்கெட்டுக்கு தங்களது விளைபொருள்களைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், புனே, சோலாப்பூர், அகமத் நகர் மாவட்டங்களில் இருந்துகூட விவசாயிகள் வெங்காயத்தை லாசல்காவ் மார்க்கெட்டுக்குக் கொண்டு வருகின்றனர்.

சில நேரங்களில் அதிகப்படி யான விளைச்சல் காரணமாக ஒரு குவிண்டால் ரூ.100 ரூ.200 வரைகூட சென்றுதுண்டு என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். இங்கு கிடைக்கும் வெங்காயத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் 5 ரூபாய் வரை செலவாகிறது. வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க விலை குறைவான நேரத்தில் மத்திய அரசின் நபார்டு வங்கியும் வெங்காயத்தை வாங்கி அங்கேயே சேமித்து வைத்து தேவைப்படும் நேரத்தில் சந்தைக்கு அனுப்புகிறது.

அசோகன்
அசோகன்

வெங்காய ஏற்றுமதியில் தமிழர்...

லாசல்காவ் மார்க்கெட் அருகில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் என்ற இடத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் வெங்காயத்தை மார்க்கெட்டில் வாங்கி மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். இது குறித்து அவருடன் பேசினோம். ‘‘நாங்கள் 1993-ம் ஆண்டில் இருந்து வெங்காயத்தை வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம்.

கொரோனா காலத்தில் இரண்டு வாரம் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் வெங்காயத்தை எங்களுக்குத் தெரிந்த விவசாயிகளிடம் பேசி நேரடியாகக் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தோம்’’ என்றார். மத்திய அரசு திடீரென ஏற்றுமதிக்கு தடை விதித்தால் குடோன் களில் வைத்திருக்கும் வெங்காயத்தை உள்ளூர் சந்தைக்கு அனுப்புகிறார் அசோகன்.

இந்த மார்க்கெட்டுக்கு ஒருமுறை வந்துபோனவர்கள், உணவில் வெங்காயத்தை சாப்பிடும்போதெல்லாம் இந்த லாசல்காவ் மார்க்கெட்டை நிச்சயம் நினைப்பார்களாம்!

படங்கள்: கோவிந்தன் கேசவன்