Published:Updated:

மூலப்பொருள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு; 14 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தப்படும் தீப்பெட்டி விலை!

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால், அதன் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு தீப்பெட்டியின் விலையை ரூ1-ல் இருந்து ரூ2-ஆக உயர்த்திட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகாசி, குடியாத்தம், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில்தான் தீப்பெட்டி உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் இவற்றைச் சார்ந்து 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இந்தப் பகுதிகளில் இயங்கி வருகின்றன. தீப்பெட்டித் தொழிலில் நேரடியாகவும், மறைமுகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி

இதில், 90 சதவீதம் பெண்களே பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இது தவிர பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் வாடகைக் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இதனால், தீப்பெட்டி உற்பத்திச்செலவும் அதிகரித்துள்ளதால் தீப்பெட்டியின் தற்போதைய விலை ரூ.1-ல் இருந்து ரூ.2 ஆக உயர்த்திட முடிவு செய்திருப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம். ``தீப்பெட்டி தொழில் மூலமாக 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி
பட்டாசு உற்பத்தியின் முதுகெலும்பும் இவர்களே; சுரண்டப்படுவதும் இவர்களே! - பெண் தொழிலாளர்களின் துயரம்

தீப்பெட்டி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களில் கடந்த மாதத்தில்,

- ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ 410-ல் இருந்து ரூ.850 ஆகவும்,

- மெழுகு ஒரு கிலோ ரூ.62-ல் இருந்து ரூ.85-ஆகவும்,

- குளோரேட் ரூ.70-ல் இருந்து ரூ ரூ.82 ஆகவும்,

- அட்டை ரூ.42-ல் இருந்து ரூ.55 ஆகவும் உயர்ந்துள்ளது.

இது தவிர பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டிருப்பதால் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் வாடகைக் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இதனால், தீப்பெட்டியின் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு தீப்பெட்டி ரூ1-க்கு விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. தீப்பெட்டியின் விலை உயர்த்துவது பற்றி சிவகாசியில் தமிழகத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம். அதில், வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு தீப்பெட்டி 2 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி
`எங்க 22 கிராமங்களுக்கு மட்டும் ஏன் இழப்பீடு இல்ல?' - ஆதங்கத்தில் விவசாயிகள்

அந்தக் காலங்களில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கியில் வாங்கியுள்ள கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கடந்த 2007-ம் ஆண்டு 50 காசுகளாக இருந்த ஒரு தீப்பெட்டியின் விலை, ரூ.1-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், 14 ஆண்டுகள் கழித்து தற்போது ரூ.2 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு