Published:Updated:

இனிக்கும் வேப்ப எண்ணெய் பிசினஸ்! - கலக்கும் சிங்கப்பூர் ரிட்டர்ன் இளைஞர்!

சசிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சசிக்குமார்

எனக்குப் போராட்ட குணம் கொஞ்சம் ஜாஸ்தி. இந்த பிசினஸ்ல தனி ஆளா இறங்கி ஒரு கை பார்த்துடணும்னு நினைச்சேன்!

இனிக்கும் வேப்ப எண்ணெய் பிசினஸ்! - கலக்கும் சிங்கப்பூர் ரிட்டர்ன் இளைஞர்!

எனக்குப் போராட்ட குணம் கொஞ்சம் ஜாஸ்தி. இந்த பிசினஸ்ல தனி ஆளா இறங்கி ஒரு கை பார்த்துடணும்னு நினைச்சேன்!

Published:Updated:
சசிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சசிக்குமார்
மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் தரும் வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு, அழுக்கு உடையுடன் வேப்ப எண்ணெய், புண்ணாக்கு பிசினஸில் இறங்க எத்தனை பேருக்கு துணிவு வரும்? நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்தவர் 36 வயதாகும் சசிக்குமார். இவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பி சொந்த ஊருக்கு வந்து, இன்று சொந்தத் தொழிலை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்தோம்.

சின்ன வயசிலிருந்தே பிசினஸ் கனவு

“எனக்கு சின்ன வயசிலிருந்தே பிசினஸ் செய்யணும்கிற ஆசை இருந்தது. எந்த பிசினஸைப் பார்த்தாலும் ‘இதுல என்ன செய்றாங்க, இதுக்கான மார்க்கெட் எது, லாபம் எப்படி இருக்கும்’னு மனசுக்குள்ளயே ஒரு கணக்குப் போடுவேன். 12 வது படிச்சு முடிச்சதுமே ஏதாவது பிசினஸ்ல இறங்கிடலாம்னு நினைச்சேன். ‘படிக்கிற பையனை ஏனப்பா படிக்க விடாம தொழில்ல போட்டு வாட்டியெடுக்கிற’னு யாரும் அப்பாவை சொல்லிடக் கூடாதுன்னு அந்த நினைப்பை அப்ப விட்டுட்டேன்.

சசிக்குமார்
சசிக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சதும் 2006-ல் கோவை ஹெச்.சி.எல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைச்சது. இரண்டு வருஷம் அங்க வேலை பார்த்தேன். நல்ல நிறுவனம், சிறப்பான சம்பளம்னு இருந்தாலும் அதைத் தாண்டி ஏதாவது செய்யணும்னு மனசு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. அந்தச் சமயத்துலதான் உலகத்திலுள்ள டாப் 10 யுனிவர்சிட்டியில் ஒன்றான சிங்கப்பூரிலுள்ள ‘நன்யாங் பல்கலைக் கழகத்தில்’ எம்.எஸ் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வாய்ப்பு கிடைச்சது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளிநாட்டுக்குப் போகணும்கிறது எனக்கு ஒரு பெரிய கனவா இருந்தது. ஏன்னா... என்னோட கிராமம், சுற்றுவட்டாரத்தைத் தாண்டி பெருசா நான் எங்கயும் போனதில்லை. காலேஜ் படிக்கிறப்ப பெங்களூரு, மும்பை டூர் கூட்டிக்கிட்டு போனப்பதான், உலகம் எவ்வளவு பெருசுன்னு எனக்குத் தெரிய வந்துச்சு. அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு சிங்கப்பூர்ல உள்ள ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புன்னா எப்படின்னு யோசிச்சு பாருங்க. இரண்டு வருஷ கோர்ஸை முழுநேரமாகப் படிச்சு ஒரே வருஷத்துல முடிச்சேன்” என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

சசிக்குமார்
சசிக்குமார்

“படிச்சு முடிச்சதும் 2009-ல் சிங்கப்பூரில் ஸ்டூல்ட்ஸ் (STULZ) என்னும் ஒரு ஜெர்மன் கம்பெனியில் வேலை கிடைச்சது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, விண்வெளி ஆய்வு மையங்கள் போன்றவற்றின் சாதனங்களைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கும் ‘உயர்தர வெப்ப கட்டுப்பாட்டுக் கருவிகள்’ (Critical Climate Control System) தயாரிக்கும் கம்பெனி அது. 2017 வரை எட்டு வருஷம் அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தேன். மாசம் 5 லட்சம் ரூபாய் சம்பளம், சொகுசான வேலை, வசதிகள்னு ஒரு சொர்க்க வாழ்க்கை வாழ்ந்தேன்.

அப்பாவுக்கு ஆக்சிடென்ட்..!

அந்த நேரத்துல என் அப்பாவுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆச்சு. அவர் நடத்திவந்த வேப்ப எண்ணெய், புண்ணாக்கு பிசினஸை அவருக்குப் பின்னாடி நான்தான் நடத்தணும்னு சொல்லி ஊருக்கு வரச் சொன்னாரு. அப்பாவோட பேச்சை மீறக் கூடாதுன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு 2008-ல் சொந்த ஊருக்கே வந்துவிட்டேன்.

கிராமத்துல பிறந்து வளர்ந்த அடிமட்ட விவசாயக் குடும்பம் எங்களோடது. அப்பா படிக்காவிட்டாலும் கணக்கு வழக்கு, வேலையில கொஞ்சம் கறாரா இருப்பாரு. நான் வெளிநாட்டுல இருந்துவந்ததும் அவரோட சிம் கார்டை கழட்டி என்கிட்ட கொடுத்து, ‘இனிமேல் இந்த பிசினஸை நீயே கவனிச்சிக்க. நான் மில் பக்கமே வர மாட்டேன்’னு சொல்லிட்டுப் போயிட்டார். எனக்குப் போராட்ட குணம் கொஞ்சம் ஜாஸ்தி. அப்பா இல்லாம இந்த பிசினஸ்ல தனி ஆளா இறங்கி ஒரு கை பார்த்துடணும்னு நினைச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொழிலைக் கற்றுக்கொள்ள 2 வருஷமாச்சு...

ஆனா, வேப்பங்கொட்டையை எங்க வாங்கணும், என்ன ரேட்ல வாங்கணும், தரத்தை எப்படிப் பார்க்கணும்னு எனக்கு எதுவுமே தெரியலை. அவற்றையெல்லாம் தெரிஞ்சுக்கவே எனக்கு 2 வருஷம் ஆச்சு. மண்வளம், மழை, சூழலைப் பொறுத்து ஒவ்வொரு பகுதிக்கும் வேப்பங்கொட்டையோட தரம் இருக்கும். சில கொட்டைகள் மட்டும்தான் எண்ணெய்க்குப் பயன்படும். மற்றவற்றிலிருந்து புண்ணாக்குதான் கிடைக்கும். கல், மண், ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஜூன் டு ஆகஸ்ட் வரைதான் சீஸன். அப்பவே ஒரு வருஷத்துக்கான வேப்பங்கொட்டைகளை வாங்கிச் சேகரிச்சு வச்சிக்கணும். இல்லை ன்னாஅதுக்கப்புறம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

இனிக்கும் வேப்ப எண்ணெய் பிசினஸ்! - கலக்கும் சிங்கப்பூர் ரிட்டர்ன் இளைஞர்!

தமிழ்நாட்டுல வேப்பங்கொட்டை கிடைப்பதில் டிமாண்ட் இருக்கு. அதனால, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களிலிருந்தும் பர்ச்சேஸ் பண்றோம். வேப்பங்கொட்டையைச் சரியான பதத்துல காயவச்சு, மெஷின்ல போட்டு ஆட்டி எண்ணெய், புண்ணாக்கு போன்றவற்றைத் தயாரிக்கிறோம். சமயங்கள்ல மூட்டை தூக்குறது, ஆள் வரலைன்னா நானே மெஷின் ஓட்டுறது, புழுதியில வேலை பார்க்கிறதுன்னு என்னோட லைஃப் ஸ்டைலே மாறிடுச்சி. ‘சிங்கப்பூர்ல இருந்து வந்து ஏன் தம்பி கஷ்டப்படுறீங்க’னு பார்க்குறவங்க எல்லாம் சொல்லுவாங்க. என்னதான் இருந்தாலும் ஒரு தொழில்ல இறங்கி கஷ்ட நஷ்டம் பார்த்து வளர்ந்து வர்றப்பதான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும்.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி

தமிழ்நாட்டுல சுமார் 200 வேப்ப எண்ணெய் தயாரிக்கும் மில்கள் இருக்கு. ஆனா, தமிழகத்தில் வேப்ப எண்ணெய்க்கான டிமாண்ட் பெரிதாக இல்லை. வெளிநாடுகளில் இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்த அதிகளவில் வாங்குகிறார்கள். நான் நேரடியாக என்னுடைய எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாவிட்டாலும், என் நிறுவன எண்ணெய் ஏஜென்டுகள் மூலமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது.

2018-ல் நான் இந்த பிசினஸில் இறங்குறப்ப வருஷம் 70 டன் வேப்ப எண்ணெய் தயாரிச்சேன். இன்னைக்கு அந்த உற்பத்தியை 300 டன் என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கேன். வருஷம் 450 டன் புண்ணாக்கையும் விற்பனை செய்றேன். மொத்த விற்பனையில் எண்ணெய் 230 - 240 என்ற விலையிலும், முதல்தர புண்ணாக்கை 30 ரூபாய் என்ற அளவிலும் கொடுக்குறேன். இன்றைக்கு எங்க இண்டஸ்ட்ரியில் போட்டி அதிகமாகிடுச்சு. வேலையாட்கள் கிடைப்பதில் சிக்கல், மூலப்பொருள் தட்டுப்பாடு எனப் பல சிரமங்கள் இருக்கு. 8 ரூபாய்க்கு இருந்த வேப்பங்கொட்டை கடந்த 3 வருஷத்துல 25 ரூபா ஆயிடுச்சு.

100 கிலோ வேப்பங்கொட்டையை போட்டா 5 கிலோ எண்ணெய் கிடைக்கும். 80 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். அதுல கல், மண்ணுன்னு பாதி வேஸ்ட் ஆகிடும். மூலப்பொருள்கள், போக்குவரத்துச் செலவு, தயாரிப்புச் செலவு, கூலியாட்கள் சம்பளம் என எல்லாம் போக குறைந்தது 5 சதவிகித லாபம் நிச்சயமாக இருக்கிறது. என்கிட்ட மூலப்பொருள் கொடுக்குறவங்க, என்கிட்ட எண்ணெய் வாங்குறவங்க, பயன்படுத்துறவங்க என யாரும் நஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறேன். தரமும் நாணயமும் இழந்தா தொழில்ல வளரவே முடியாது. வாடிக்கை யாளர்களின் திருப்திதான் நம்ம தொழிலுக்கான முதல் லாபமே. பேராசைப் படாம, நாணயமா இருந்தா தொழில்ல நிச்சயமா ஜெயிக்கலாம். விரைவில் வேம்புடன், இயற்கை மூலிகைகளைச் சேர்த்து இயற்கை பூச்சி மருந்துகளைத் தயாரிக்கும் ஐடியாவில் இருக்கிறேன்” எனத் தன் அடுத்தகட்டத் திட்டத்தையும் சொன்னவருக்கு, வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism