Published:Updated:

பத்து வருட உச்சத்தில் உலோகங்கள்..! காரணங்கள் என்னென்ன..?

M E T A L P R I C E

பிரீமியம் ஸ்டோரி

சென்ற வருடம் இதே காலத்தில் கொரோனா அச்சுறுத்தல்களால் பங்குச் சந்தைகள் மற்றும் பல கமாடிட்டிப் பொருள்களின் விலை மிகப்பெரிய இறக்கத்தைச் சந்தித்தன. ஆனால், ஒரு வருடம் கழித்து, தற்போது பங்குச் சந்தைகளும் கமாடிட்டிப் பொருள்களின் விலை களும் உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கமாடிட்டிப் பொருள்கள் அனைத்தும் ‘சூப்பர் சைக்கிள்’ என்பதை நோக்கி நகர்வதாகச் சந்தேகப்பட வைக்கின்றன.

ஷியாம் சுந்தர் 
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

1968, 1990, 2005 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு கமாடிட்டிப் பொருள்களின் விலை பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படு கிறது. (பார்க்க வரைபடம்-1). பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்த அளவுக்கு (எரிபொருள் நீங்கலாக), கமாடிட்டிப் பொருள்களின் விலை உயரவில்லை. (பார்க்க, வரைபடம் - 2). ஆகையால் வரும் மாதங்களில் இவற்றின் விலை மேலும் உயரவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அப்படி நிகழ்வதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

* கொரோனா தாக்கத்திலிருந்து உலக நாடுகள் விடுபட்டு, பொருளா தாரத்தை மேம்படுத்தும் வகையில், அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் பெரிய அளவிலான ஊக்குவிப்புகளை அறிவித்து வருவது சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது.

* ஸ்டீல் தயாரிக்கக் தேவையான மூலப்பொருளான இரும்புத்தாது, அடிப்படை உலோகங்கள் என்று சொல்லப்படும் காப்பர், அலுமினியம் போன்றவையும் அதற்கான மூலப் பொருள்கள் அனைத்தும் அந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகின்றன.

எரிபொருள், அடிப்படை உலோகங்கள், விவசாயம் சார்ந்த சந்தைப் பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 24 மூலப்பொருள் களில் மிகப்பெரிய முதலீடுகள் நடைபெற்றுள்ளதையும், அதன் விலைகள் ஜனவரி தொடக்கத்தில் இருந்து, ஏப்ரல் முடிய வரை உள்ள காலத்தில் சுமார் 20 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதையும் வரைபடம் -2 விளக்குகிறது.

வரைபடம் 1
வரைபடம் 1
வரைபடம் 2
வரைபடம் 2

இரும்புத்தாது...

சர்வதேசச் சந்தையில் இரும்புத் தாதுவின் விலை இந்த வருடம் ஆரம்பத்தில் 1 மெட்ரிக் டன் 165 டாலராக வர்த்தகமான நிலையில், தற்போது ஒரு மெட்ரிக் டன்னானது 225 அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. சென்ற செவ்வாய் அன்று ஒரே தினத்தில் டாலியன் எக்ஸ்சேஞ்சில் (Dalian Exchange) 10% ஏற்றம் பெற்று வர்த்தகமானது. கடந்த சில மாதங்களாக சீனா- ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் களால், சீனாவின் இரும்புத்தாது இறக்குமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம், தனது உள்நாட்டுத் தேவை அதிகரிக்கும் நிலையில் , சப்ளையில் ஏற்பட்டுள்ள தடைகள் இரும்புத்தாதுவின் விலையைத் தாறுமாறாக அதிகரிக்க காரணமாகிவிட்டது.

சீனா இந்த விலை உயர்வை விரும்பவில்லை. ஏனென்றால், சீனா அதிக விலை கொடுத்து இரும்புத் தாதுவை இறக்குமதி செய்வதால், உள்நாட்டில் ஸ்டீல் விலை அதிகரிக்கும். என்றாலும், ஆஸ்திரேலி யாவைத் தவிர்த்து கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முனைந்துள்ளது. அப்படி இறக்குமதி செய்வதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, தூரம் அதிகம் என்பதால், போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பது, இரண்டாவதாக, சூயஸ் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து நடைபெறுவதால், சிறிய அளவிலான சரக்குக் கப்பல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய சரக்குக் கப்பல்களுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தக் கப்பல்களுக்கான கட்டணங்கள் நான்கு வருட உச்சத்தில் இருப்பதால், மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பு உடனடியாக இறங்க வாய்ப்பில்லை என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள்.

சீனாவில், கோவிட் 19-ன் தாக்கம் சென்ற ஆண்டில் காணப்பட்டாலும், அதிலிருந்து விரைவாக விடுபட்டு, பொருளாதார முன்னெடுப்புக்களை நோக்கி நகர ஆரம்பித்ததால், கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருள் களின் விலை அதிகரித்து வருகின்றன. இதன் தாக்கம் இந்திய விலைகளிலும் பிரதிபலிக்கச் செய்கின்றன. ஸ்டீல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஆக மொத்தத்தில் தேவை அதிகரிப்பு, சப்ளையில் தடங்கல் காரணங்களே இரும்புத்தாதுவின் விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லலாம்.

காப்பர்
காப்பர்

காப்பர்

பத்து வருடங்களுக்குப் பிறகு, காப்பர் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு மெட்ரிக் டன் 10,000 டாலர்களைக் கடந்துள்ளது. காப்பரின் பயன்பாடு, பொருளாதாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதால், இதன் விலையேற்றம் சில அடிப்படையான விஷயங்களை உள்ளடக்கியதன் விளைவாகவே நடைபெற்றுள்ளதாக கமாடிட்டி நிபுணர்கள் கருதுகின்றனர்.

பேட்டரிகள், மோட்டார்களின் பயன்பாட்டுக்குத் தேவையான லித்தியம் முதல் ‘ரேர் எர்த்’ வரை அனைத்துப் பொருள்களின் விலை சூடு பிடித்து ஏற்றம் கண்டு வருகின்றன.

2021-ம் ஆண்டில் காப்பரின் சர்வதேச விலை 27 சதவிகிதமாகவும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 சதவிகிதமாகவும் அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன. 2020-ம் ஆண்டின் குறைந்தபட்ச விலையிலிருந்து சுமார் 114% அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன?

1. சிலியில் தொழிலாளர் களுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரண மாக உற்பத்தி தடைபட்டுள்ளது. உலகளவில் காப்பர் உற்பத்தியில் முக்கிமான பங்கு வகிக்கும் நாடு சிலி என்பதால், அதன் ஏற்றுமதி யில் சிக்கல்கள் ஏற்படுமாயின் அதன் விலையில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இந்த தொழிலாளர் பிரச்னை சாதாரண காலகட்டத்தில் இல்லாமல், பொருளாதாரத் தேவைகள் அதிகரிக்கும் இப்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டிருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.

2. லண்டன் மெட்டல் எக்ஸ் சேஞ்சில் காப்பர் கையிருப்பு குறைந்துவருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களில் எல்.எம்.இ-யில் பதிவு பெற்ற கிடங்கில் 10% என்ற அளவுக்கு அதாவது, 1,55,100 மெட்ரிக் டன் வெளியேறியிருக்கிறது. இது தவிர, 50 சதவிகிதத்துக்கும் மேலான அளவுக்கு காப்பர் வெளியேற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள தாகவும், ஒப்பந்த விலையைவிட, அதிகம் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதாகவும் வெளியான தகவல்கள், இந்த விலை இப்போது குறையாது என்பதையே காட்டுவதாக உள்ளது. எல்.எம்.இ-க்கு வெளியே பதிவு பெறாத கையிருப்பும் கடந்த பிப்ரவரியில் 2 மில்லியன் டன்னிலிருந்து, 1.25 மில்லியன் டன்களாகக் குறைந்துள்ளது

3. சீனாவின் காப்பர் நுகர்வு உலகத்தின் மொத்த நுகர்வில் சராசரியாக 45 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதால், இரண்டாம் காலாண்டில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமான வேலை களுக்கு அதன் தேவையானது மேலும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

4. சிலி, பெரு உள்ளிட்ட நாடு களில், சுரங்க நடவடிக்கை களிலான முதலீடுகள் 2021-ம் ஆண்டில் அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நடைபெற்றுள்ளது. இது, காப்பரை அதிகம் நுகரும் நாடுகளைக் கவலைகொள்ள வைத்திருக்கிறது.

5. அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவிழந்து காணப் படுவது, கமாடிட்டிப் பொருள்கள் அனைத்துக்குமே சாதகமான செய்தியாகும் என்பதால், விலை யேற்றம் என்பது தவிர்க்க இயலாத நிலைக்குச் சென்றிருக் கிறது.

அலுமினியம்

லண்டன் மெட்டல் எக்ஸ் சேஞ்சில் அலுமினியத்தின் கையிருப்புக் குறைந்து வருவது அனைவரது கவனத்தையும், ஈர்த்துள்ளது. கடந்த இரு வாரங்களில் எல்.எம்.இ-ல் பதிவு பெற்ற கிடங்கில் 1.80 மில்லியன் மெட்ரிக் டன்கள் வெளியேறி உள்ளன. இது தவிர, 31 சதவிகிதத் துக்கும் மேலான கையிருப்பு வெளியேறுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

உலோகங்களின் எதிர்காலம்

இந்த உலோகங்களின் விலை அதிகரிப்பு, உலோகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங் களுக்குச் சாதகமான செய்தியாக இருந்தாலும், நுகரும் நிறுவனங்களான ஆட்டோமொபைல், வாகன நிறுவனங் களுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மூலதனப் பொருள்கள் தயாரிக்கும் கேப்பிடல் கூட்ஸ் நிறுவனங்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ் நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு இந்த விலையேற்றம் அவர்களது லாப சதவிகி தத்தை நிச்சயமாகக் குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய சிக்கல்கள் என்னவெனில், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கமாடிட்டிப் பொருள்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தடைகள், சீனா - ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிணக்கம், சரக்குப் போக்குவரத்தில் வாடகைக் கட்டணங்கள் உயர்வு, கொரோனா காரணமாக அந்தந்த நாடுகளில் போடப் பட்டுள்ள லாக்டெளன் காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத சூழ்நிலை... இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து 2011-ம் ஆண்டில் இருந்த விலைக்கு உயர்த்தியுள்ளன. இதற்கு உடனடியாக தீர்வு காணமுடியாத நிலையில், இந்த விலையேற்றம் மேலும் உயரலாம் என்றே சந்தை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், உலகளவிலும், உள்நாட்டு அளவிலும் கடன் இல்லாத நிறுவனங்களை ஆராய்ந்து, அவற்றின் விலை கணிசமாகக் குறைந்தபின் முதலீட் டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வது நீண்டகாலத்தில் நன்மை தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு