Published:Updated:

மருத்துவமனையாக மாறப்போகும் பிரபல `லீ மெரிடியன் ஹோட்டல்'; என்ன காரணம்?

சென்னை லீ  மெரிடியன் ஹோட்டல்
சென்னை லீ மெரிடியன் ஹோட்டல்

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு கால அவகாசம் வழங்கியும் நிலுவைத் தொகையை வழங்காத காரணத்தால், இந்தத் தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.

தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமிக்கு சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை கிண்டி மற்றும் கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது.

இந்நிறுவனத்துக்கு மேலும் சில நட்சத்திர விடுதிகளும் உள்ளன. இந்நிலையில், சென்னை கிண்டி மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களை விரைவில் எம்.ஜி.எம் ஹெல்த் கேர் குழுமத்தின் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், இந்திய சுற்றுலா நிதிக் கழகத்துக்கு (Tourism Finance Corporation of India Limited (TFCIL) கொடுக்க வேண்டிய சுமார் ரூ.18 கோடியை நிலுவைத் தொகையாக வைத்திருக்கிறது. இதைக் கேட்டு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் (Chennai branch of the National Company Law Tribunal (NCLT) ) புகார் மனு ஒன்றை டி.எஃப்.சி.ஐ.எல் பதிவு செய்தது.

பழனி ஜி.பெரியசாமி
பழனி ஜி.பெரியசாமி
Share Market... நஷ்டம் தவிர்த்து, லாபம் காண 5 விஷயங்கள்! | Nanayam Vikatan

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு கால அவகாசம் வழங்கியும் நிலுவைத் தொகையை வழங்காத காரணத்தால், இந்தத் தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும், கொரோனா பிரச்னையைக் காரணம் காட்டி, அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்தும் நிலையில் இல்லை என்று கூறியதால், இந்திய சுற்றுலா நிதிக் கழகம் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கடன்களை அடைப்பதற்காக அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை விற்க சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாதவ் தீர் (Director at Lords Chloro Alkali Ltd), எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் எம்.கே.ராஜகோபால் மற்றும் கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் (Kotak Special Situations) ஆகிய நிறுவனங்கள் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க முன்வந்தன.

இந்த மூன்று நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில், சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்துக்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், லீ மெரிடியன் ஹோட்டல்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,600 கோடி என்கிற நிலையில், மிகவும் குறைந்த ஏலத்துக்கு விற்பது நியாயமில்லை என்கிற கருத்தை முன்வைத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

சென்னை லீ மெரிடியன்
சென்னை லீ மெரிடியன்
கோவிட் சிக்கல்... ஹோட்டல் துறை எழுந்துவருவது எப்போது? விளக்குகிறார் ஜி.ஆர்.டி நடராஜன்

ரஜினி நடித்திருக்கும் `கபாலி' திரைப்படத்தின் காட்சிகளில், லீ மெரிடியன் ஹோட்டலில் தங்குவது போல காட்சியமைப்பு இருக்கும்.

பல்வேறு திரைப்படங்களில் இந்த லீ மெரிடியன் ஹோட்டல் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்கள் முதல் வாஜ்பாய் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வரை பலரும் இந்த லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். இந்த ஹோட்டலை கையகப்படுத்திய பிறகு, அதை மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும், கோவையிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டலை சீரமைத்து நட்சத்திர ஹோட்டலாகவே தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் எம்.ஜி.எம் குழுமம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு