Published:Updated:

OYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு?

Microsoft office in New York ( AP Photo/Swayne B. Hall )

இந்த மாத தொடக்கத்தில் ஓயோ நிறுவனம் பங்குச்சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவதை பரிசீலிப்பதாக கூறியதையடுத்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓயோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது.

OYO IPO: ஹோட்டல் துறையிலும் இறங்கும் மைக்ரோசாஃப்ட்; ஓயோ நிறுவனத்தில் ₹66,960 கோடி முதலீடு?

இந்த மாத தொடக்கத்தில் ஓயோ நிறுவனம் பங்குச்சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவதை பரிசீலிப்பதாக கூறியதையடுத்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓயோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது.

Published:Updated:
Microsoft office in New York ( AP Photo/Swayne B. Hall )

ஹோட்டல் துறையில் பிரபல நிறுவனமான ஓயோ-வில் (Oyo Hotels and Homes), தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் 9 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.66,960 கோடி ரூபாயை ஓயோ நிறுவனத்தில் முதலீடு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

OYO
OYO

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது தொழிலை வேறு பல துறைகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. ஓயோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் அகர்வால் இந்த மாத தொடக்கத்தில் நிறுவனம் பங்குச்சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவதை பரிசீலிப்பதாக கூறியதையடுத்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓயோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருப்பினும், ஓயோ அல்லது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடமிருந்து இந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வெளிவரவில்லை. இதற்கான ஒப்பந்த விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்றும், ஓயோவின் ஐ.பி.ஓ-வுக்கு இந்த ஒப்பந்தம் முன்னோடியாக இருக்கும் என்றும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hotel - Representational Image
Hotel - Representational Image
Pixabay

தற்போது, சாஃப்ட் பேங்க் விஷன் ஃபண்ட், சீக்வோயா கேபிடல், லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ், ஏர்பிஎன்பி மற்றும் ஹீரோ எண்டர்பிரைஸ் உள்ளிட்ட பல முதலீட்டாளர்கள் ஓயோவில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism