பணமோசடியில் கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட ஏழு வழக்குகளை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருவதாகவும், இதுவரை இந்தக் குற்ற வழக்குகளில் 135 கோடி ரூபாய் சம்பந்தப்பட்டிருக்கிறது எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், விர்ச்சுவல் கரன்சிகளைப் பயன்படுத்தி சைபர் க்ரைம் கிரிமினல்கள் மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும், பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ், தற்போது அமலாக்க இயக்குநரகம் ஏழு வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பணமோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த வழக்குகளில் இருந்து அமலாக்கத் துறை 135 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது என அறிவித்தார்.

இதுவரை நடத்திய விசாரணையில், சில வெளிநாட்டினர் மற்றும் அவர்களுடன் இணைந்த இந்திய கூட்டாளிகள் சில பரிமாற்றத் தளங்களில் கிரிப்டோகரன்சி கணக்குகள் மூலம் பணமோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.