Published:Updated:

“தொழில்முனைவோர் செய்யக் கூடாத தவறுகள்..!” - ஜி.ஆர்.டி சகோதரர்கள் தந்த டிப்ஸ்!

ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்

பல துறைகளில் களம் இறங்குவதில் தவறில்லை. ஒரே இடத்தில் அனைத்து முதலீடும் இருக்கக் கூடாது

டந்த வாரத்தில் ஐந்து நாள்கள் நடந்த டைகான் கருத்தரங்கின் முதல் மூன்று நாள் நிகழ்ச்சி பற்றிக் கடந்த வாரம் (https://bit.ly/36T2daC) பார்த்தோம். அந்தக் கருத்தரங்கின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி பற்றி இப்போது பார்ப்போம்.

நான்காம் நாள் மாலை, ஜி.ஆர்.டி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் மற்றும் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் கார் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் மாறன் நாகராஜன் உரையாடினார்.

“தொழில்முனைவோர் செய்யக் கூடாத தவறுகள்..!” - ஜி.ஆர்.டி சகோதரர்கள் தந்த டிப்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல துறைகளில் இறங்கும்போது..!

‘‘ஜி.ஆர்.டி குழுமம் ஜுவல்லரி, ஹோட்டல், சோலார் எனப் பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. தொழில் முனைவோர்கள் பல துறைகளில் களம் இறங்கலாமா என்னும் கேள்வியுடன் உரையாடலைத் தொடங்கினார் மாறன்.

‘‘பல துறைகளில் களம் இறங்குவதில் தவறில்லை. ஒரே இடத்தில் அனைத்து முதலீடும் இருக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்கு முன்பாக உங்களது தாய் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். உதாரணத்துக்கு, ஜி.ஆர்.டி ஜுவல்லரி சிறப்பாகச் செயல்பட்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்க முடியும். அதேபோல, பிற தொழில் விரிவாக்கத்துக்கு அதிக கடன் வாங்கக் கூடாது. குறைந்தபட்சம் 70 - 80% வரை சொந்த முதலீடு இருந்தால் மட்டுமே விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில், புதிய தொழில் எப்படி இருக்கும் எனத் தெரியாது. அதனால் வட்டி கட்டுவதிலே நேரம் வீணாகும்’’ என்ற தெளிவான பதிலை அளித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கருத்து வேறுபாடு வந்தால்..!

‘‘நீங்கள் இருவரும் சகோதரர்கள், நிறுவனத்தை எப்படி நடத்துகிறீர்கள்’’ என்னும் கேள்விக்கு, ‘‘நாங்கள் சகோதரர்கள். ஆனால், நிறுவனத்துக்குள் நாங்கள் இருவரும் பங்குதாரர்கள். நான் சில விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறேன். என் சகோதரர் வேறு சில விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறார். பெரும்பாலும் கருத்துவேறுபாடு வராது. அப்படி ஏதும் வந்தால், அப்பாவிடம் செல்வோம். அப்பா சொல்வதே இறுதியான முடிவு’’ என்று அவர் சொன்னதை நிறுவனங்களை நடத்தும் பல சகோதரர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

“தொழில்முனைவோர் செய்யக் கூடாத தவறுகள்..!” - ஜி.ஆர்.டி சகோதரர்கள் தந்த டிப்ஸ்!

முடிந்த இடத்தில் எல்லாம் தொழில்நுட்பம்..!

அடுத்து, பேச்சு தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்பியது. ‘‘நாங்கள் ரீடெயில் துறையில் இருக்கிறோம். முடிந்தவரையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். உதாரணத்துக்கு, லைவ் டிவி என்னும் ஆப்ஷன் எங்களிடம் உள்ளது. எங்களிடம் 50 கடைகள் உள்ளன. ஆனால், இந்த அனைத்துக் கடைகளும் ஒரே அளவு கிடையாது. உதாரணத்துக்கு, திருப்பதியில் உள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நெக்லஸ் எடுக்க வருகிறார். திருப்பதியில் உள்ள டிசைன் போதுமானதாக இல்லை. அதனால் லைவ் டிவி ஆப்ஷன் மூலம் தி.நகரில் உள்ள கடையில் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வாடிக்கை யாளர்களுக்கு காண்பிக்கிறோம். இதுபோல, முடிந்தவரை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்’’ என்றார்.

வி.கே.டி பாலன், கிருஷ்ணகுமார் நடராஜன், சி.கே.ரங்கநாதன்
வி.கே.டி பாலன், கிருஷ்ணகுமார் நடராஜன், சி.கே.ரங்கநாதன்

உபரியை உருவாக்குங்கள்..!

இறுதியாகத் தொழில்முனை வோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்று கேட்டார் மாறன். ‘‘உபரியை (Create Surplus) உருவாக்குங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்முனை வோர்களின் பங்கு முக்கியமானது. தொழில் முனைவோர்கள் அதிக பணம் சம்பாதித்தால் தான் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். நம்முடைய செலவுதான் மற்றவர்களுக்கு வருமானம். இதுபோல, ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். இதற்குத் தொழில்முனைவோர்கள் அதிக நிதியை உருவாக்கி வைத்திருப்பது அவசியம். இப்போதைக்கு 7,500 நபர்கள் எங்கள் குழுமத்தில் பணியாற்றுகிறார்கள். இதை ஒரு லட்சம் பணியாளர்கள் என்னும் இலக்குடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்’’ என ஜி.ஆர்.டி சகோதரர்கள் தெரிவித்தனர்.

“தற்போதைய சூழலில் அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கிறது. ஆனால், அதற்காக எந்த வேலையும் செய்யாமல் எப்படி இருக்க முடியும்?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சவாலை சந்திக்க பயந்தால்..!

நிகழ்ச்சியின் இறுதி நாளில் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் வி.கே.டி பாலன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தலைப்பில் பேசினார். ‘‘சிக்கல்கள், சோதனைகள், சவால்களைச் சந்திக்க பயப்படுபவர்கள் தொழில்முனைவோராக மட்டுமல்ல, வேலைக்கே தகுதியானவர்கள் அல்லர். சவால்களைக் கடந்தால்தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் சில ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் அனைத்தும் சரியாக நடந்துகொண்டிருக்கும். அப்போது எனக்கு உருவாகும் கவலையே ‘என்ன எந்த சிக்கலும் இல்லாமல் சீராக இருக்கிறதே’ என நினைப்பேன். காரணம், சிக்கல்கள்தான் நம்மை விழிப்புடன் வைத்திருக் கின்றன.

ஜி.ஆர்.அனந்த பத்மநாபன்
ஜி.ஆர்.அனந்த பத்மநாபன்

தற்போதைய சூழலில் அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கிறது. ஆனால், அதற்காக எந்த வேலையும் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

நிறுவனத்தின் கலாசாரம் முக்கியம்

இறுதியாக, மேளா வென்சர்ஸ் நிறுவனர் (மற்றும் மைண்ட்ட்ரீயின் நிறுவனர்) கிருஷ்ணகுமார் நடராஜனுடன் டை சென்னை தலைவர் சி.கே.ரங்கநாதன் உரையாற்றினார்.நிறுவனத்தின் கலாசாரம் குறித்த உரையாடலில் கிருஷ்ணகுமார் கூறியதாவது...

‘‘நிறுவனத்தின் கலாசாரத்தை ஆரம்பத்திலிருந்து உருவாக்க வேண்டும். பணியாளர்களின் சாதனையைத் தொடர்ந்து கவனித்து ஊக்குவித்து அங்கீகரிக்கும்பட்சத்தில் பரஸ்பரம் மரியாதை உருவாகும். நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை உருவாகும்.

காலாண்டு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் பங்குச் சந்தை அமைப்புகள் அனுமதி அளித்தவுடன் உலகம் முழுவதிலும் இருக்கும் பணியாளர் களுக்கு முக்கியமான தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும். நிறுவனத்தின் எந்த நடவடிக்கையை இயக்குநர் குழு பாராட்டியது, இயக்குநர் குழுவின் விமர்சனம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் பணியாளர்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்
ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்

அதேபோல நிறுவனம் தொடங்கும் போது எங்களுடைய ரத்த சம்பந்தமான உறவுகள் யாரும் நிறுவனத்தில் பணியாற்றக் கூடாது என நிறுவனர்கள் உறுதி எடுத்தோம். 11 நிறுவனர்கள் இருக்கும்பட்சத்தில், ரத்த உறவுகள் இருந்தால் புதிய அதிகார மையம் உருவாகும். இதைத் தவிர்க்கவே குடும்ப உறவுகளைத் தவிர்த்தோம். நாங்கள் நிறுவனத்தில் இருக்கும் வரைக்கும் எங்களைச் சார்ந்த யாரும் பணியாற்றவில்லை.

எங்களுடைய ஆரம்பகாலத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்களின்பங்களிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், எங்களுடைய சில சர்வதேச வாடிக்கை யாளர்கள் திவால் நிலைமைக்குச் சென்றனர். இதனால் எங்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதலீடு திரட்டியிருந்ததால், செலவுகளைக் குறைக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதினார்கள். அனைத்துப் பணியாளர்களையும் அழைத்து நிலைமையை விளக்கினோம். யாரையும் பணியிலி்ருந்து நீக்க வேண்டாம் என்றும் முடிவெடுத்தோம். அதே சமயம், 30 - 70% வரை சம்பளக் குறைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல. 2009-ம் ஆண்டு மொபைல் துறையில் (ஹெச்.டி.சி) களம் இறங்கினோம். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தோம். அப்போதைய எங்கள் வருமானத்தில் 100 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. ஆனால், இதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதைத் தெரிந்து அந்தப் பிரிவிலிருந்து வெளியேறினோம். முதலீடு செய்த தொகை அனைத்தும் வீண். நாங்கள் பெரிய தவறு செய்து விட்டோம் என முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்தோம். எங்களுடைய சந்தை மதிப்பில் சுமார் 80% அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. 30% முதலீட் டாளர்கள் எங்களை விட்டுச் சென்றார்கள். ஆனால், அடுத்த இரு ஆண்டுகளில் (2013) பங்குகளும் சரிந்த வேகத்தில் உயர்ந்தன’’ என்றார்.

டைகான் கருத்தரங்கம் ஐந்து நாள்களும் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்தது!