பிரீமியம் ஸ்டோரி

ஒரு விசிட்டிங் கார்டில் என்னவெல்லாம் இருக்கலாம்? உங்கள் பெயர், பதவி, நிறுவனத்தின் பெயர், லோகோ, முகவரி, தொலைபேசி எண்கள், இணைய தளம், மின்னஞ்சல் முகவரி, உங்களைத் தொடர்புகொள்ள உதவும் சமூக வலைதள முகவரிகள்...

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

இவையே பொதுவாக ஒரு விசிட்டிங் கார்டில் இடம் பெறுவது வழக்கம். இனிமேல் கீழ்க்கண்டவற்றையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் புகைப்படம், உங்கள் நிறுவனத்தின் இணைய தளம் பற்றி அறிந்துகொள்வதற்கான க்யூ.ஆர் கோட், உங்கள் நிறுவனம் விற்கும் பொருள்களின் அல்லது வழங்கும் சேவைகளின் விவரம், விற்கும் பொருள்களின் புகைப்படங்கள், துணை நிறுவனங்கள் விவரம், தரச்சான்று, பெற்ற முக்கிய விருதுகளின் விவரம், நீண்ட நாள்களாக இயங்கும் நிறுவனம் எனில், தொடங்கிய ஆண்டு போன்ற கூடுதல் தகவல்களையும் இடம்பெறச் செய்யலாம்.

விசிட்டிங் கார்டில் வெற்றி விதை!

விசிட்டிங் கார்டு என்பது ஒரு விற்பனைக்கான தொடக்கப் புள்ளி. முன்பக்கம் மட்டும் நிரப்பிவிட்டு, பின்பக்கத்தைக் காலியாக விடுவதைவிட இதுபோன்ற கூடுதல் தகவல்களைக் கொடுத்தால் பார்ப்பவருக்கும் நீங்கள் செய்கிற தொழிலின் விவரம் சென்றடையும்.

விசிட்டிங் கார்டு என்பது அழகுக்காகவும், மரியாதைக் காகவும் மட்டுமே கொடுக்கப்படுவதல்ல. உங்கள் பொருளை விற்பதற்கான இன்னொரு விளம்பர அடையாள அட்டை என்பதால், முடிந்தவரை கூடுதல் தகவல்களை அதில் இடம்பெறச் செய்யுங்கள்.

அதற்காக கொசகொசவென படிக்க முடியாதபடிக்கு நிறைய தகவல்களைப் போட்டு நிரப்பிவிட வேண்டாம். படிக்க எளிய சொற்களில், கண்ணுக்கு அழகான எழுத்து களில், பெரிய சைஸ் ஃபான்டுகளில் (fonts), கண்ணை உறுத்தாத வண்ணத்தில் இருப்பது அவசியம்.

விசிட்டிங் கார்டு என்பது அடையாளம் மட்டுமல்ல, அது உங்கள் தொழிலுக்கான ஆதாரப்புள்ளி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு