Published:Updated:

லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஏ.ஐ, ப்ளாக்செயின் வேலை! - விளக்குகிறார்கள் நிபுணர்கள்!

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பம்

பிட்காய்ன் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நம் நாட்டில் வெறும் 5,000 பேர் மட்டுமே இருக்கிறார்கள்!

‘ஐடி துறையில் வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் மோட்டார் விகடன் நடத்திய பயிலரங்கத்தில் கலந்துகொண்டவர்களுக்கு உள்ளூர் பொருளாதரம் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை ஒரு பருந்துப் பார்வை கிடைத்தது. காரணம், இந்தப் பயிலரங்கத்தை நடத்தியவர்கள் ஆட்டோமொபைல், ஏவியேஷன், டெலிகாம், ரீடெயில், லாஜிஸ்டிக்ஸ், பேங்கிங், இன்ஷூரன்ஸ் என்று சகல துறைகளின் முன்னணி நிறுவனங்களுக்கும் மென்பொருளை உருவாக்கித் தரும் டெக் மஹிந்திராவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பணியாற்றுகிறவர்கள்.
லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஏ.ஐ,  ப்ளாக்செயின் வேலை! - விளக்குகிறார்கள் நிபுணர்கள்!

அமெரிக்க நாடுகளில் உள்ள பல முன்னணி நிறுவனங்களுக்கும் டெக் மஹிந்திராவுக்கும் முக்கியப் பாலமாக இருப்பவர் லட்சுமணன் சிதம்பரம். சவாலான இந்த நேரத்தில் புதிதாகத் தோன்றியிருக்கும் நல்வாய்ப்புகளைப் பற்றி விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார் என்பதால் அந்தப் புள்ளியிலிருந்தே ஆரம்பித்தார் டெக் மஹிந்திராவின் என்டர்பிரைசஸ் பிசினஸ் பிரிவின் தலைவர் லட்சுமணன் சிதம்பரம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஏ.ஐ,  ப்ளாக்செயின் வேலை! - விளக்குகிறார்கள் நிபுணர்கள்!

கவலை வேண்டாம்; ஆன்லைனில் படியுங்கள்!

‘‘கடை வீதிக்குச் சென்று பொருள்களை வாங்காமல், வீட்டில் இருந்தபடியே மக்கள் இப்போது பொருள்களை வாங்கத் தொடங்கியிருப்பதால், இ-காமர்ஸ் அபார வளர்ச்சியடைந்து வருகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பல கம்பெனிகள் ஆர்டர் செய்த பொருள்களை வீட்டுக்கே வந்து கொடுப்பதால், லாஜிஸ்டிக்ஸ் துறையும் சுறுசுறுப்பு அடைந்து விட்டது.

பொருள்களுக்கும் சர்வீஸ்களுக்கும் தேவை அதிகரிப்பதால், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு மனித வளம் முக்கியம். இப்போது கேம்பஸ் இன்டர்வியூ நடக்கவில்லையே என்ற கவலை வேண்டாம். வெர்ச்சுவல் ரெக்ரூட்மென்ட்ஸ் தொடங்க இருக்கின்றன. அதற்குத் தயாராக இருங்கள். ஒரு செமஸ்டர் முழுக்க கல்லூரிக்கே போகாமல் பாஸ் ஆன பேட்ச் என்ற சுயபச்சாதாபம் வேண்டாம். ஹார்வேர்டாக இருந்தாலும் ஆக்ஸ்ஃபோர்டாக இருந்தாலும் இப்போது ஆன்லைனில் தான் வகுப்புகள் நடக்கின்றன. MOOCs எனப்படும் Massive Open Online Courses-ஐ பயன்படுத்திக்கொண்டால் வேலை கிடைப்பதற்கான சாத்தியம் அதிகமாகும்’’ என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மனிதர்கள்போல செயல்படும் கணினிகள்..!

லட்சுமணன் சிதம்பரத்தை அடுத்து பேசினார் டெக் மஹிந்திராவின் சீனியர் வைஸ் பிரெசிடென்ட் ஸ்ரீராம். ‘‘Clour Computing துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகளை எடுத்துச் சொன்னதுடன், அதில் உள்ள வேலை வாயுப்புகள், அதற்கு என்னென்ன சர்டிஃபிகேஷன் கோர்ஸ்கள் படிக்க வேண்டும் என்பதை பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் மூலமாக எளிமையாக விளக்கினார்.

லட்சுமணன் சிதம்பரம், ஸ்ரீராம், ராஜேஷ் தூடு
லட்சுமணன் சிதம்பரம், ஸ்ரீராம், ராஜேஷ் தூடு

டேட்டா அனலிட்டிக்ஸ் (Data Analytics) துறையில் என்னென்ன படிநிலைகள் இருக்கின்றன, இந்த ஒவ்வொரு படியில் ஏறவும் என்னென்ன படிப்பு தேவை என்றும் பட்டியலிட்டார். டேட்டாவுக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசும்போது அவர் சொன்ன உதாரணம், ‘அட, ஆமால்ல’ என்று அனைவரையும் சாட் பாக்ஸில் லைக் போட வைத்தது.

‘‘சிடி ஸ்கேன், எம்ஆர் ஸ்கேன், பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் என்று பல டெஸ்ட்டுகளையும் எடுக்கா மலேயே அந்தக் காலத்தில் ஃபேமிலி டாக்டர்கள் தங்கள் பேஷன்ட்டுகளுக்கு என்ன பிரச்னை என்பதைத் தெளிவாகக் கண்டுபிடித்து வைத்தியம் செய்வார்கள். காரணம், அந்த பேஷன்ட் பற்றிய முழு மெடிக்கல் ஹிஸ்ட்ரியும் அவர்களுக்குத் தெரியும்.அதாவது, பேஷன்ட் பற்றிய முழு டேட்டாவும் ஃபேமிலி டாக்டருக்குத் தெரியும்.

ஒரு கம்ப்யூட்டருக்கு நம்முடைய டேட்டா எல்லாம் தெரிந்தால், அதையும் மனிதர்களைப்போல இமிடேட் செய்ய வைக்க முடியும். அதனால்தான் இது ஒரு பரவசமான துறையாக இன்று பலருக்கு இருக்கிறது’’ என்று ஆர்டிஃபிஷியல் இன்டெலி ஜென்ஸ் பற்றி ஆர்வத்தைத் தூண்டி விட்டு, இந்தத் துறையில் வேலை செய்யத் தேவையான தகுதிகள், படிப்புகள் பற்றி யெல்லாம் எடுத்துச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெறும் 5,000 பேர்தான் இருக்கிறார்கள்..!

அடுத்து பேசிய ராஜேஷ் தூடு, பிட்காயின் தொடர்பான ப்ளாக்செயின் (Blockchain) டெக்னாலஜியில் நிபுணத்துவம் பெற்றவர். ‘‘நம் நாட்டில் பணத்தை அச்சிடும் வேலையை ரிசர்வ் வங்கி செய்வதைப்போல, ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சென்ட்ரல் பேங்க்தான் பணத்தை வெளியிடுகிறது. பணம் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில் பல சாதக, பாதகங்கள் உண்டு. ஆக, உலகம் முழுதும் ஒரு பொதுவான கரன்சி இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பிறந்ததுதான் பிட்காய்னும், அதற்கு அடிப்படையாக இருந்த ப்ளாக்செயின் தொழில்நுட்பமும்.

லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஏ.ஐ,  ப்ளாக்செயின் வேலை! - விளக்குகிறார்கள் நிபுணர்கள்!

பிட்காய்ன் அரசியல்ரீதியாக பல எதிர்ப்புகளைச் சந்தித்தது. அதைத் தவறாக ஒரு பிரிவினர் பயன் படுத்தினர். ஆரம்பத்தில் இப்படிப் பல தடைகள் வந்தாலும், இதை யெல்லாம் தாண்டி ப்ளாக் செயின் என்பது வேகமாகவே வளர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு இதற்கான மார்க்கெட் 22,000 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. ஆண்டுக்கு 300-லிருந்து 500% வரை இப்போது இது வளர்ச்சி கண்டுவருகிறது. ரெமிட்டன்ஸ், சப்ளை செயின் போன்ற விஷயங் களுக்கு ப்ளாக்செயினை நம் பொதுத்துறை வங்கிகள் பயன்படுத்த இருக்கின்றன. அதனால் உலக அளவில் மட்டுமல்ல, நம் நாட்டுக்கேகூட ப்ளாக்செயின் தெரிந்தவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

நாஸ்காம் டேட்டாபடி, நம் நாட்டில் 20 லட்சம் ஐ.டி டெவலப்பர்ஸ் இருக்கிறார்கள். ஆனால், பிட்காய்ன் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வெறும் 5,000 பேர்தான். அதனால்தான் இந்த ஏரியாவில் வேலை செய்கிறவர்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே பலரும் வாயைப் பிளக்கிறார்கள். இந்தத் துறையில் வேலை செய்ய Hyperledger, Solidity, Ethereum, Ripple போன்ற ப்ளாக்செயின் நெட்வொர்க்ஸில் பரிச்சயம் இருப்பதுடன், C, C++, java, Python தெரிந்திருப்பதும் அவசியம்’’ என்று ராஜேஷ் பவர் பாயின்ட்டில் காட்டிய ஒவ்வொரு ஸ்லைடுமே பொக்கிஷம்.

‘‘உலகமே இன்று சைபர் ஸ்பேஸில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு என எல்லாமே இந்த சைபர் உலகில்தான் இருக்கின்றன. சைபர் அட்டாக்ஸ் மூலமாக உலகம் ஆண்டு ஒன்றுக்கு இழக்கும் தொகை சுமார் 36 லட்சம் கோடி ரூபாய். பணத்தைத் தாண்டியும் இதில் பல விஷயங்கள் உண்டு. ‘நம்முடைய அணுசக்தி நிலையங்களில் இருக்கும் கம்ப்யூட்டர்களை சைபர் அட்டாக்கர்ஸ் தாக்கியதை நாம் முறியடித்துவிட்டோம்’ என்ற செய்தியை சில நாள்களுக்கு முன்பு படித்திருப்பீர்கள். ஆக, இந்தத் துறையிலும் வேலைவாய்ப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்று சொல்லி நம்பிக்கை கொடுத்தார்.

19 வயதில் சம்பாதித்த ரூ.80 லட்சம்..!

‘‘தன்னுடைய வலைப்பக்கத்தில் இருந்த, ‘Bug’ ஒன்றைக் கண்டுபிடித்து சொன்னதற்காக பெங்களூரைச் சேந்த 19 வயது மாணவனுக்கு ஃபேஸ்புக் ரூ.80 லட்சம் கொடுத்த செய்தியை நினைவுபடுத்திய ராஜேஷ் தூடு, குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்கும் இந்த வேலைக்கு Bounty Hunters என்று பெயர். இது போன்று சைபர் செக்யூரிட்டி துறையில் உள்ள பல வேலைகளுக்கு டிகிரி சர்டிஃபிகேட் வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை!’’ என்று சொல்லி தன் பிரசன்ட்டேஷனை முடித்தபோது, ஆன்லைன் மூலமாக அதை அட்டென்ட் செய்த அத்தனை பேரும், நரம்புகள் முறுக்கேற நம்பிக்கையோடு சாட்பாக்ஸில் முஷ்டியை முறுக்கி, எமோஜி போட்டார்கள்.

இந்தப் பயிற்சி வகுப்பு தொடர்பான வீடியோவைப் பார்க்க விரும்புகிறவர்கள் https://bit.ly/3iWtkUt என்ற லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாமே!