Published:Updated:

ஆர்.பி.ஐ உதவி... சிறு தொழில்களைக் காக்க உதவுமா? உண்மையில் செய்ய வேண்டியது என்ன..?

சிறு தொழிகள்...
பிரீமியம் ஸ்டோரி
சிறு தொழிகள்...

MSME

ஆர்.பி.ஐ உதவி... சிறு தொழில்களைக் காக்க உதவுமா? உண்மையில் செய்ய வேண்டியது என்ன..?

MSME

Published:Updated:
சிறு தொழிகள்...
பிரீமியம் ஸ்டோரி
சிறு தொழிகள்...

தற்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கொடூரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா சுனாமியிலிருந்து தொழில் நிறுவனங்களைக் காக்க மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்த தாஸ் சில முக்கியமான அறிவிப்புகளை கடந்த புதன்கிழமை அன்று காலையில் வெளியிட்டார்.

யானைப் பசிக்கு சோளப்பொரி...

மருத்துவ உள்கட்டமைப்பைப் பெருக்க ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக நிதி நிறுவனங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.25 கோடி கடன் வாங்காத சிறு தொழில் நிறுவனங்கள், கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான தகுதியைப் பெறும். இந்த மறுசீரமைப்பை இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செய்யலாம் என்றும், ஏற்கெனவே கடன் வாங்கிய சிறுதொழில் நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் (moratorium) இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் என்றும் சக்திகந்த தாஸ் சொல்லியிருக்கிறார்.

ஆனால், ஆர்.பி.ஐ கவர்னரின் இந்த அறிவிப்புகள் எல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி என்கிற மாதிரிதான் எனச் சிறு தொழில் நிறுவனங்கள் சொல் கின்றன. கொரோனா முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பு களிலிருந்து முழுமையாக வெளி வராத நிலையில், இப்போது இரண்டாம் அலை வந்து, தொழிலை முடக்கிவிட்டது. மத்திய அரசு இன்னும் பெரிய அளவில் உதவிகளைச் செய்தால் மட்டுமே எங்களால் தொடர்ந்து தொழில் நடத்த முடியும் என்கின் றனர் சிறு தொழில் நிறுவனங்களை நடத்துகிறவர்கள்.

ஆர்.பி.ஐ உதவி... சிறு தொழில்களைக் காக்க உதவுமா? உண்மையில் செய்ய வேண்டியது என்ன..?

உண்மையில் செய்ய வேண்டியது...

கொரோனாப் பொருளாதாரப் பேரிடரிலிருந்து மீள்வதற்காக, ஏற்கெனவே ரிசர்வ் வங்கி இந்தியாவின் பணப் புழக்கத்தை வெகுவாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான பணப் புழக் கத்தின் காரணமாக, நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்ததாலும், பொருளாதார மீட்சிக்கான சில அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்தும் ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை மறுபரி சீலனை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால், தற்போதைய கொரோனாப் பேரலையின் பொருளாதாரத் தாக்கங்களை மனதில்கொண்டு, முந்தைய ‘குறைந்த வட்டி – அதிகப் பணப் புழக்கம்’ என்ற நிலையையே தொடர வேண்டும். மேலும், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்வது மற்றும் கடன் விடுமுறை நீட்டிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

கடன் விடுமுறைக் காலத்துக் கான ‘வட்டி மேல் வட்டி’ செலவினத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மறுசீரமைப்புக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் சலுகை வழங்கப்படுவதையும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். கொரோனா காலத்தில் வரித் தள்ளுபடிகள் மற்றும் வரிசலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலைநாடுகளைப்போல, சாமானியர்களுக்கும் சிறுகுறு தொழிலில் ஈடுபட்டிருப் பவர்களுக்கும் கொரோனா பேரிடர் காலத்தில் நேரடி நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

சிறுகுறு நிறுவனங்களில் பணியாற்று பவர்களின் ஊதிய செலவினத்தில் ஒரு பங்கை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் பெரு நிறுவனங் களிடமிருந்து, சிறுகுறு நிறுவனங்களுக்கு பாக்கியுள்ளத் தொகை உரிய நேரத்தில் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கு சிறு குறு தொழில்களைத்தான் சார்ந்துள்ளனர் என்பதை மனதில்கொண்டு மத்தியஅரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism