நடப்பு
Published:Updated:

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் அதிக லாபம் அடையும் வழி!

ஆன்லைன் பர்ச்சேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் பர்ச்சேஸ்

M S M E - சிறு, குறு நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்!

பீட்டர் ஜார்ஜ், இயக்குநர், அமேசான் பிசினஸ்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 29 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டு உள்ளன. நாட்டில் 90 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை கிட்டத்தட்ட 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் நாட்டின் ஏற்றுமதியில் 48% பங்களிப்பைக் கொண்டுள்ளன.

பீட்டர் ஜார்ஜ் 
இயக்குநர், 
அமேசான் பிசினஸ்
பீட்டர் ஜார்ஜ் இயக்குநர், அமேசான் பிசினஸ்

டிஜிட்டல் பயன்பாடு...

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்கள் எவை என்று பார்த்தால், மூலதனச் செலவு நெருக்கடி, விநியோகச் சிக்கல்கள், தொழில்நுட்பக் குறைபாடுகள், ஜி.எஸ்.டி கட்டமைப்பு, நுகர்வோர்கள் செலவுகளைக் கணிச மாகக் குறைந்திருப்பது ஆகியற்றைச் சொல்லலாம். இந்தச் சவால்களில் சிலவற்றுக்கு டிஜிட்டல் பயன்பாடு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. டிஜிட்டல் வழியில் முழுமையாக கொள்முதல் செய்வதன் மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிப் பதுடன், செலவுகளும் கணிசமாகக் குறைகின்றன.

ஆன்லைன் பர்ச்சேஸ்
ஆன்லைன் பர்ச்சேஸ்

ஆன்லைன்மூலம் கொள்முதல்...

இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு முன்பைவிட மிகவும் அதிகரித்துள்ளது. அதன்மூலம், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் எளிதில் கொள்முதல் (E-procurement) செய்ய முடியும். சிறிய நகரங்களில் செயல்படும் நிறுவனங்கள்கூட, இந்த முறையில் பல்வேறு பிராந்தியங் களிலிருந்து மூலப்பொருள்களையும் இதர பொருள்களையும் தங்கள் வசதிகேற்ப கொள்முதல் செய்ய முடியும். சிறுதொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும்போது பல நன்மைகள் நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. என்னென்ன என்று பார்ப்போம்.

நேரத்தை மிச்சப்படுத்த உதவு வதுடன், உற்பத்தித்திறனை அதிகரிக் கவும் உறுதி செய்கிறது. பி-2-பி இணைய வழி வர்த்தகம் (B2B e-commerce) என்ற ஒற்றைத் தளத்தின் கீழ் பல்வேறு வகையான பொருள் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத் துக்குச் சென்று வாங்க வேண்டிய தில்லை. சிறிய நிறுவனங்களில் குறைவான ஊழியர்கள்தாம் இருப் பார்கள். அவர்களைக் கொண்டு குறைந்த நேரத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இடைத் தரகர்கள் இல்லாமல் இருப்பதுடன், பொருள்களை வாங்குவதில் மறை முகச் செலவுகள் எதுவும் இல்லை. திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள் எந்தப் பொருள்களையும் வாங்கி முடிக்க முடியும் என்பதால், நிறுவனத்தின் லாப வரம்பை அதிகரிக்க உதவும்.

பொருள்களை வாங்கியதிலிருந்து அது வாங்கியவருக்குப் போய்ச் சேருகிற வரையான சரக்குப் போக்கு வரத்து, நிர்வாகம் மற்றும் விற்பனை தொடர்பான எல்லா விஷயங் களையும் திட்டமிடுகிறது. நேரில் கொள்முதல் செய்யும்போது, வெவ்வேறு சப்ளையர்களுக்குத் தனித்தனியே சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கணக்கிடுவது பெரிய சவாலாக இருக்கும். ஆனால், ஆன்லைனில் வாங்கும்போது அந்தப் பிரச்னை இல்லை. கொள்முதலைக் காகிதங்களில் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற தேவை இல்லை. நாம் வாங்கிய பொருள்கள் குறித்த அனைத்துப் புள்ளிவிவரங்களையும் ஒருங்கிணைத்து ஆராய முடிகிறது. தவிர, வெவ்வேறு விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கிய விலை உட்பட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்க்கவும் முடியும்.

எதிர்காலம் இதுதான்..!

ஆன்லைன் கொள்முதல் சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கிடைத்த வரப்பிசாதம். எம்.எஸ்.எம்.இ-க்கள் இதை உணர்ந்தால், அவர்களின் நிறுவனத்தில் டிஜிட்டல் மாற்றத்தை அதிவிரைவில் கொண்டு வரமுடியும்!