Published:Updated:

`சரிந்த பங்குகள்; முதலிடத்தைப் பறிகொடுத்த முகேஷ் அம்பானி!’ - மீண்டும் அரியணையில் அமர்ந்த ஜேக் மா

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி ( vikatan )

ரிலையன்ஸ் பங்குகளின் விலை வீழ்ச்சியே அம்பானியின் இந்த சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருந்து முகேஷ் அம்பானி சரிந்துள்ளார். ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற அரியணையில் 2018-ம் ஆண்டில் அமர்ந்தார் அம்பானி. இவருக்கு முன்பாக அந்த அரியணையில் சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மா (Jack Ma) அமர்ந்திருந்தார். இப்போது மீண்டும் ஜேக் மா அந்த அரியணையைக் கைப்பற்றியுள்ளார். ரிலையன்ஸ் பங்குகளின் விலை வீழ்ச்சியே அம்பானியின் இந்தச் சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

சந்தையைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையைக் குறைத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதன்காரணமாக அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த மார்ச் 2019 நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது 42.2 பில்லியன் டாலராக அவரின் சொத்து மதிப்பு இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமாராக 56,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. 2020-ம் ஆண்டு ஜனவரியில் ரிலையன்ஸ் பங்குகள் 1,600 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தற்போது ரிலையன்ஸ் பங்குகள் 1,115 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

அடுத்த கட்டுரைக்கு