Published:Updated:

‘‘கோவிட் காலத்தில் பணியாளர்களைப் பரிவுடன் நடத்தி ஜெயித்தோம்!’’ ‘முத்தூட் குழுமம்’ அபினவ் ஐயர் பேட்டி

அபினவ் ஐயர்

B U S I N E S S

‘‘கோவிட் காலத்தில் பணியாளர்களைப் பரிவுடன் நடத்தி ஜெயித்தோம்!’’ ‘முத்தூட் குழுமம்’ அபினவ் ஐயர் பேட்டி

B U S I N E S S

Published:Updated:
அபினவ் ஐயர்

முத்தூட் குழுமம் 800 ஆண்டுகள் குடும்ப வணிகப் பின்னணியைக் கொண்டுள்ளது. 20 வணிகப் பிரிவுகள், 5,330-க்கும் மேற்பட்ட கிளைகள், 40,000-க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் உள்நாடு வெளிநாடு எனப் பரந்து விரிந்திருக் கிறது. தினசரி 2.5 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு சேவை என மிகப்பெரிய குழுமமாக இருக்கிறது.

முத்தூட் குழுமத்தின் பொது மேலாளர் (சந்தைப்படுத்துதல்) அபினவ் ஐயர். 2014-ம் ஆண்டு முதல் முத்தூட் குழுமத்தில் இணைந் திருக்கிறார். அவர் நமக்களித்த பேட்டி இனி...

அபினவ் ஐயர்
அபினவ் ஐயர்

பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக இருந்த நீங்கள், பணியை விட்டுவிட்டு தனியார் நிறுவனப் பணிக்கு வந்தது ஏன்?

‘‘பேங்க் ஆஃப் பரோடாவில் என் பணி திருப்திகரமாகச் சென்றது. ஒரு கட்டத்தில் இந்த வங்கியின் லண்டன் மார்க்கெடிங் பணியை மேற்கொண்டேன். 2014-ல் இந்தியா வுக்கு நானாகத் திரும்பினேன். இந்தியாவிலிருந்து பணியாற்ற விரும்பினேன். அப்போது சில நல்ல வாய்ப்புகள் வந்தன. அதில் ஒன்றாக முத்தூட் குழுமத்தின் முத்தூட் ஃபைனான்ஸ் அமைந்தது.

தங்க நகைக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான இது பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட நிறுவனமாகும். வங்கிச் சேவை இல்லாத கிராமப்புற மக்களுக்கு நிதிச் சேவைகளை அளித்துவந்தது. இந்தியா முழுக்கவும், மேலும், பல நாடுகளிலும் பரந்து விரிந்திருந்தது. வலிமையான வணிக அடிப்படைகள், நீதி நியாயங்கள், மிகச் சிறந்த கார்ப்பரேட் நிர்வாகம் போன்ற வற்றில் மறைந்த சேர்மன் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் மற்றும் தற்போதைய துணை நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் ஜார்ஜ் முத்தூட் ஆகியோரின் தொலை நோக்குப் பார்வை என்னை கவர்வதாக இருந்தது.
முத்தூட் குழுமத்தில் இணைந்து எட்டு ஆண்டுகளாகிறது. பணி திருப்திகரமாகச் சென்றுகொண்டிருக் கிறது.’’

முத்தூட் குழுமம், எந்தெந்தத் துறைகளில் இயங்கி வருகிறது எனச் சொல்ல முடியுமா?

‘‘எங்கள் குழுமம் இப்போது நிதிச் சேவை, தகவல் தொழில்நுட்பம், கடன் உதவி என 20 பல்வேறு துறை களில் இயங்கி வருகிறது. நாங்கள் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தங்கநகைக் கடன் வழங்குவதில் முன்னோடி நிறுவனமாக உள்ளோம். மேலும், அந்நியச் செலாவணி பரிமாற்றம், ஹெல்த்கேர், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், வீட்டுக் கடன், வாகனக் கடன், கார்ப்பரேட் கடன், வணிகக் கடன்கள், என்.சி.டி-க்கள், தங்க நாணயங்கள் விற்பனை எனப் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்துள்ளோம்.’’

அண்மைக் காலத்தில் புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்களா?

‘‘கோவிட் பரவல் சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாகக் கடந்த 12 மாதங்களுக்கு முன் தங்க அடமானக் கடனை வீட்டுக்கே சென்று வழங்கும் ‘கோல்டு லோன் அட் ஹோம் டோர் ஸ்டெப்’ (Gold Loan@Home doorstep) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தோம். இந்தத் திட்டத்தின்படி, மாதம் 0.82% வட்டியில் கடன் வழங்கி வருகிறோம். வாடிக்கை யாளர்களுக்கு அதிக பயனை அளிக்கும் மொபைல் செயலியையும் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஆன்லைனில் தங்கநகைக் கடன் பெற முடியும். மேலும், டாப்அப் கடனையும் நினைத்த நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.’’

கோவிட் பாதிப்பை எப்படிச் சமாளித்தீர்கள்?

‘‘கொரோனா காலத்தில் பணியாளர் யாருடைய சம்பளத்தையும் குறைக்க வில்லை; சம்பள உயர்வும் தந்திருக்கிறோம். கோவிட் பாதிப்பால் பணியாளர் இறந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு அவரின் குடும்பத்தினருக்கு பணியாளரின் சம்பளம் தருகிறோம். 27 வகையான பணியாளர் நலத் திட்டங்களை வைத் திருக்கிறோம். என்.பி.எஸ் மூலம் பென்ஷனுக்கு ஏற்பாடு செய்கிறோம்.’’

முத்தூட் குழுமத்தின் வெற்றிக்குக் காரணம்..?

“மறைந்த சேர்மன் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட், ‘மதிப்புகளுடன் வளர்ச்சி’ (Growth with Values) என அடிக்கடி சொல்வார். அதைத்தான் இப்போதும் பின்பற்றி வளர்ச்சி கண்டு வருகிறோம். மேலும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையானவற்றை அளித்து வருகிறோம். அனைவருக்கும் நிதிச் சேவை அளிக்கிற மாதிரி, குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் கடன் உதவி அளிக்கிறோம். ஏழு தினங்களில் திரும்பச் செலுத்தும் வசதியையும் அளிக்கிறோம். மாதத்துக்கு மிகக் குறைவாக 0.82% வட்டிதான். முன்கூட்டி முழுமை யாக அல்லது பகுதி கடனை அடைத்தால் அதற்கு அபராதக் கட்டணம் கிடையாது. அடமானம் வைக்கப்படும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளுக்கு இலவசக் காப்பீடு அளிக்கிறோம். இதுவரைக்கும் 72 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்திருக்கிறோம்.’’

அமிதாப்பச்சனுடன் அபினவ் ஐயர்
அமிதாப்பச்சனுடன் அபினவ் ஐயர்

பிரான்ட் அம்பாசிடராக நடிகர் அமிதாப்பச்சன் இருப்பது குழுமத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவுகிறது?

‘‘பிராண்ட் டிரஸ்ட் ஆய்வின் படி, இந்தியாவின் நம்பர் 1 மிகவும் நம்பகமான நிதிச் சேவை பிராண்டாக முத்தூட் ஃபைனான்ஸ் இருக்கிறது. அமிதாப்பச்சனும் நம்பிக்கைக்குப் பெயர் போனவர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பிராண்ட் அம்பாசிட்டராக இருக்கிறார். 2017-18-ல் ரூ.1,784 கோடியாக இருந்த குழுமத்தின் நிகர லாபம், 2020-21-ல் ரூ.3,819 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, ரூ.58,280 கோடியாக உள்ளது. இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் டீம் விளம்பரம் மூலமும் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism